பண்ணை குட்டை பணிகள் தொடக்கம்

ஜோலார்பேட்டை மண்டலவாடி ஊராட்சியில் நடந்ததுஏராளமானோர் கலந்து கொண்டனர்
மண்டலவாடி பகுதியில் பண்ணை குட்டை அமைப்பதற்கான பணிகள் தொடங்கிய போது எடுத்த படம்.
மண்டலவாடி பகுதியில் பண்ணை குட்டை அமைப்பதற்கான பணிகள் தொடங்கிய போது எடுத்த படம்.
Published on

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சிக்குட்பட்ட மூர்த்தியூர் பகுதியில் புதியதாக பண்ணை குட்டை அமைப்பதற்கான பணிகள் நேற்று நடைபெற்றது.

இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார் ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் கலந்து கொண்டு பண்ணை குட்டை அமைப்பதற்கான பணியை துவக்கி வைத்தார்.

மேலும் இந்த பண்ணை குட்டையானது 15 அடி நீளம், 15 அடி அகலம், 5 அடி ஆழம் கொண்ட பண்ணை குட்டையில் மீன் பண்ணை அமைத்து வாழ்வாதாரம் பெற முடியும்.

இதனை அப்பகுதி மக்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.90 ஆயிரம் மதிப்பீட்டில் பண்ணை குட்டை அமைக்கும் பணி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது.

மேலும் மண்டல வாடி ஊராட்சிக்குட்பட்ட 7 வது வார்டில் அமைக்கப்ப ட்டுள்ள பேவர் பிளாக் சாலையை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் போது ஊராட்சி செயலாளர் (பொறுப்பு) சின்னத்தம்பி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com