search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "monsoon session"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்ட நினைவு தினம்
    • எம்.பி.க்கள் ஒரு நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி

    மகாத்மா காந்தியால் 1942-ல் தொடங்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் அர்ப்பணிப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக வெள்ளையனே வெளியேறு இயக்க தினம் அனுசரிக்கப்படுகிறது.

    இதனையொட்டி பாராளுமன்ற இரு அவைகளிலும் எம்.பி.க்கள் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    அதேபோல் ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணுகுண்டு வீசப்பட்டு 78 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அதில்  உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    மவுன அஞ்சலி செலுத்தப்பட்ட பின் அவை நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    • நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நேற்று விவாதம் தொடங்கியது
    • இன்று ராகுல் காந்தி, அமித்ஷா பேசுகிறார்கள்

    மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மீதான விவாதம் நேற்று தொடங்கியது. காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பேச்சை தொடங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ராகுல் காந்தி நேற்று பேசவில்லை. காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகாய் பேச்சை தொடங்கினார். தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு போன்றோரும் பேசினர்.

    இந்த நிலையில் இன்று ராகுல் காந்தி மக்களவையில் பேசுவார் என காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பேசுகிறார் என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    அதேவேளையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று வாக்கெடுப்பிற்கு வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.

    • நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நேற்று தொடங்கியது
    • விவாதங்களை எடுத்து வைப்பது குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை

    பாராளுமன்ற மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தின்மீது நேற்று விவாதம் தொடங்கியது. இன்று விவாதம் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

    இந்த விவாதத்தின்போது, ஆளுங்கட்சி எம்.பி.க்களை எவ்வாறு எதிர்கொள்வது, விவாதங்களை எப்படி எடுத்து வைப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்த, எதிர்க்கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு மக்களவையில் எம்.பி.க்கள் இருக்கும் என்றால், அதன் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் 10.30 மணியில் நடைபெற இருக்கிறது.

    அதேபோல், காங்கிரஸ் மக்களவை எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் 10 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டம் காங்கிரஸ் பாராளுமன்ற கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இருக்கிறது.

    • நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் தொடக்கம்
    • பெரும்பான்மை கிடைக்காது என தெரிந்தும், எதிர்க்கட்சிகள் இதை கொண்டு வந்துள்ளது

    பாராளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதன் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விவாதத்தை தொடங்கி வைக்க இருக்கிறார். காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா கே. சுரேஷ் கூறுகையில் ''இன்று மக்களவையில் நம்பிக்கையில்லாத தீர்மானம் மீது விவாதம் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி முதலில் பேசுவார்.

    எங்களுடைய பிரச்சனை மணிப்பூர் விவகாரம் குறித்தது மட்டுமே. பிரதமர் மோடி மக்களவைக்கு வர வேண்டும், விளக்கம் அளிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்தோம். ஆனால், பிரதமர் மோடி அதற்கு தயாராக இல்லை.

    அதனால்தான் நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளோம். உண்மையிலேயே, மக்களவையில் எங்களுக்கு பெரும்பான்மை கிடையாது, ஆனால், மோடி என்ன சொல்லப் போகிறார்? என்பதை தெரிய விரும்கிறோம்.'' என்றார்.

    • பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க மறுப்பு
    • நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதுதான் ஒரே தீர்வு என எதிர்க்கட்சிகள் முடிவு

    மணிப்பூர் விவகாரம் குறித்து இரு அவைகளிலும் விளக்கமான அறிக்கையை பிரதமர் மோடி தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், பிரதமர் மோடி பதில் அளிக்கமாட்டார் என மத்திய அரசு தெரிவித்தது.

    இதனால், எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் ஓம் பிர்லா, இன்று முதல் விவாதம் நடைபெறும் என அறிவித்தார்.

    அதன்படி இன்று மக்களவையில் விவாதம் தொடங்க இருக்கிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர், வயநாடு எம்.பி. ராகுல் காந்தி விவாதத்தை தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து கவுரவ் கோகாய், மணிஷ் திவாரி, தீபக் பாய்ஜ் ஆகியோர் நம்பிக்கையில்லாத தீர்மானம் குறித்து பேசுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

    உச்சநீதிமன்றம் ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்துள்ளதால், எம்.பி. பதவி பறிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதனால் நேற்று மக்களவை அலுவலில் ராகுல் காந்தி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது
    • குஜராத் உயர்நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், உச்சநீதிமன்றம் தடை

    காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் டுவிட்டர் முகப்பு பகுதியில் மக்களவை உறுப்பினர் (Member of Parliament) என குறிப்பிட்டிருந்தார்.

    தேர்தல் பிரசாரத்தின்போது மோடி குடும்ப பெயரை அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. உடனடியாக, மக்களவை செயலகம் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஆணை பிறப்பித்தது.

    இதனால் தனது டுவிட்டர் முகப்பில் பராளுமன்ற உறுப்பினர் என்பதை நீக்கிவிட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி. எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு மனு விசாரணையின்போது, ராகுல் காந்தியின் சிறைத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அவரது எம்.பி. பதவி தகுதி நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் சபாநாயகர் மற்றும் மக்களவை செயலகத்திடம் முறையிட்டனர்.

    இதனால் இன்று காலை மக்களவை செயலகம், ராகுல் காந்தி மீதான தகுதி நீக்கத்தை திரும்ப பெற்றதை உறுதி செய்தது. இதனால் அவர் மக்களவையில் கலந்து கொண்டார்.

    இந்த நிலையில் டுவிட்டர் பக்கத்தில் உள்ள முகப்பு பகுதியில் (Dis'Qualified MP) என்பதை மீண்டும் Member of Parliament என மாற்றியுள்ளார்.

    • ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவு
    • இன்று காலை மக்களவை செயலகம் திரும்ப பெற்றது. வயநாடு எம்.பி.-யாக ராகுல் காந்தி தொடர்வார் என அறிவிப்பு

    உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ராகுல் காந்தியின் தகுதி நீக்க உத்தரவை இன்று காலை மக்களவை செயலகம் திரும்ப பெற்றது. வயநாடு எம்.பி.-யாக ராகுல் காந்தி தொடர்வார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 136 நாட்களுக்கு பிறகு ராகுல் காந்தி மீண்டும் எம்.பி., ஆனார்.

    தகுதி நீக்க உத்தரவு திரும்பப் பெறப்பட்ட நிலையில், அவை நடவடிக்கைகளில் பங்கேற்க ராகுல் காந்தி பாராளுமன்றம் வருவதாக காங்கிரஸ் சார்பில தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும், முன்னதாக எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது

    மீண்டும் 12 மணிக்கு அவை தொடங்கியதும், அவையில் பங்கேற்க ராகுல் காந்தி வருகை தந்தார். பாராளுமன்றம் காந்தி சிலை முன் காங்கிரஸ் எம்.பி.க்கள், ராகுல் காந்தி வாழ்க என முழக்கமிட்டு அழைத்து சென்றனர்.

    அதன்பின் ராகுல் காந்தி மக்களவையில் தனது இருக்கையில் சென்று அமர்ந்தார். பின்னர் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    • ரிங்குவின் நடத்தைக்கு ஆட்சேபித்து, இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றம்.
    • மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11ம் தேதியுடன் முடிவடைகிறது.

    பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை உறுப்பினர் சுசில் குமார் ரிங்கு நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    மக்களவையில் கட்டுக்கடங்காமல் நடந்து கொண்டதற்காக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி உறுப்பினர் சுஷில் குமார் ரின்குவை மழைக்கால கூட்டத்தொடர் முழுவதற்கும் மக்களவை இடைநீக்கம் செய்துள்ளது.

    மக்களவை டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா நிறைவேற்றியதால், அவையின் நடுபகுதிக்கு வந்த ரிங்கு காகிதங்களை கிழித்து சபாநாயகர் ஓம் பிர்லா மீது வீசினார்.

    மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, பிர்லா அவையில் நடந்த ரிங்குவின் நடத்தைக்கு ஆட்சேபித்து, ஆம் ஆத்மி உறுப்பினரை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை முன்வைக்க பாராளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடம் கேட்டார்.

    மக்களவை உறுப்பினர் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக பிர்லா, ரிங்குவை முறையாகப் பெயரிட்டார். அதைத் தொடர்ந்து மழைக்கால அமர்வின் மீதமுள்ள கூட்டத்திற்கு அவரை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அமைச்சர் முன்வைத்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ஆம் ஆத்மியின் மக்களவை உறுப்பினர் ரிங்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மத்திய அரசு ஓய்வூதியமாக குறைந்தபட்சம் 9 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது
    • 44,81,245 பேர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள்

    மத்திய அரசு பணியில் வேலைபார்த்து ஓய்வு பெற்றவர்கள், ஓய்வு பெற்றவர்கள் இறந்தபின் அவர்களின் குடும்பத்தினர் ஓய்வு ஊதியங்கள் பெற்று வருகின்றனர். அவர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியானது.

    இதுகுறித்து பாராளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எழுத்துப்பூர்வ பதில் அளித்தார் மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங். அவர் அளித்த பதிலில் ''தற்போது குறைந்தபட்ச ஓய்வூதியமாக 9 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதை உயர்த்தும் எண்ணம் இல்லை.

    தற்போது 44,81,245 ஓய்வூதியர்கள் உள்ளனர். இதில் 20,93,462 பேர் குடும்ப ஓய்வூதியர்கள் ஆவார்கள். 2022-2023 நிதியாண்டில் 2,41,777.55 கோடி ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்பட்டுள்ளது. விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்ப அதிகரிக்கப்படும் அகவிலைப்படி அதிகரித்து வழங்கப்படும்'' என்றார்.

    • நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை.
    • அமளிக்கு மத்தியில் ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது.

    புதுடெல்லி:

    மணிப்பூர் மாநிலத்தில் 2 சமூகத்தினர் இடையே நடந்த கலவரத்தில் 160 பேர் வரை பலியானார்கள். கடந்த மே மாதம் 3-ந் தேதி தொடங்கிய வன்முறை இதுவரை ஓய்ந்தபாடில்லை. பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் முன்வைத்து அமளியில் ஈடுபட்டுவருகின்றன. பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரியும், விவாதம் நடத்த கோரியும் அமளியில் ஈடுபடுவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இதன் உச்சகட்டமாக மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை. அனைத்து கட்சிகளுடன் பேசி முடிவு செய்யப்படும் என்று சபாநாயகர் அறிவித்தார். இதனால் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று எதிர்க்கட்சி எம்.பி.கள் கருப்பு உடை அணிந்து வந்தனர். மணிப்பூர் சம்பவத்தை கண்டிக்கும் விதமாக அவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

    மாநிலங்களவையைப் பொருத்தவரை எதிர்க்கட்சிகளின் அமளி மற்றும் அவர்களுக்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்களின் முழக்கம் காரணமாக கூச்சல் குழப்பம் நிலவியது. இதன் காரணமாக முதலில் 12 மணி வரையிலும், அதன்பின்னர் பிற்பகல் 2 மணி வரையிலும் அவை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்தது. இந்த அமளிக்கு மத்தியில் ஒளிப்பதிவு (திருத்தம்) மசோதாதாவை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் கொண்டு வந்தார்.

    மசோதா மீது விவாதம் நடந்துகொண்டிருந்தபோது,  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

    • மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கை
    • நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும் வரை மற்ற அலுவல் பணிக்கு எதிர்ப்பு

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற அலுவல் பணியை முடக்கி வருகின்றன. பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில், மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

    நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடத்த மக்களவை சபாநாயகர், சம்மதம் தெரிவித்த நிலையில் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து நேரம் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    ஆனால் விவாதம் நடைபெறுவதற்கு முன் எந்தவொரு அலுவல் பணியும் நடைபெறக்கூடாது என எதிர்க்கட்சிகள் அமளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மணிப்பூர் விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, எதிர்க்கட்சி தலைவர்கள் கருப்பு சட்டை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்.

    • மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற இருக்கிறது
    • தமிழக ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தை மீறும் வகையில் செயல்படுவதாக புகார்

    தமிழக ஆளுநரை திரும்பப்பெறும் விவகாரத்தில் தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார். அதில் அலுவல் பணிகள் அனைத்தையும் ஒத்திவைத்துவிட்டு தமிழக ஆளுநரை திரும்பப்பெறும் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    அந்த நோட்டீஸில் ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தை மீறும் வகையில் செயல்படுவதாக டி.ஆர். பாலு அதில் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே மணிப்பூர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதை ஏற்றுள்ள சபாநாயகர், விவாதம் நடத்துவதற்கான நேரம் தெரிவிக்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்கிடையே இது குறித்து விவாதிக்க அனுமதிப்பாரா என்பது கேள்விக்குறியே.

    தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், அரசுக்கும் இடையே பல்வேறு விசயங்கள் தொடர்பாக மோதல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ×