search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நம்பிக்கையில்லா தீர்மானம்: ராகுல் காந்தி விவாதத்தை தொடங்கி வைக்க வாய்ப்பு
    X

    நம்பிக்கையில்லா தீர்மானம்: ராகுல் காந்தி விவாதத்தை தொடங்கி வைக்க வாய்ப்பு

    • பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க மறுப்பு
    • நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதுதான் ஒரே தீர்வு என எதிர்க்கட்சிகள் முடிவு

    மணிப்பூர் விவகாரம் குறித்து இரு அவைகளிலும் விளக்கமான அறிக்கையை பிரதமர் மோடி தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், பிரதமர் மோடி பதில் அளிக்கமாட்டார் என மத்திய அரசு தெரிவித்தது.

    இதனால், எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் ஓம் பிர்லா, இன்று முதல் விவாதம் நடைபெறும் என அறிவித்தார்.

    அதன்படி இன்று மக்களவையில் விவாதம் தொடங்க இருக்கிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர், வயநாடு எம்.பி. ராகுல் காந்தி விவாதத்தை தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து கவுரவ் கோகாய், மணிஷ் திவாரி, தீபக் பாய்ஜ் ஆகியோர் நம்பிக்கையில்லாத தீர்மானம் குறித்து பேசுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

    உச்சநீதிமன்றம் ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்துள்ளதால், எம்.பி. பதவி பறிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதனால் நேற்று மக்களவை அலுவலில் ராகுல் காந்தி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×