search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்: காங்கிரஸ் தலைமை கொறடா சொல்வது என்ன?
    X

    நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்: காங்கிரஸ் தலைமை கொறடா சொல்வது என்ன?

    • நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் தொடக்கம்
    • பெரும்பான்மை கிடைக்காது என தெரிந்தும், எதிர்க்கட்சிகள் இதை கொண்டு வந்துள்ளது

    பாராளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதன் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விவாதத்தை தொடங்கி வைக்க இருக்கிறார். காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா கே. சுரேஷ் கூறுகையில் ''இன்று மக்களவையில் நம்பிக்கையில்லாத தீர்மானம் மீது விவாதம் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி முதலில் பேசுவார்.

    எங்களுடைய பிரச்சனை மணிப்பூர் விவகாரம் குறித்தது மட்டுமே. பிரதமர் மோடி மக்களவைக்கு வர வேண்டும், விளக்கம் அளிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்தோம். ஆனால், பிரதமர் மோடி அதற்கு தயாராக இல்லை.

    அதனால்தான் நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளோம். உண்மையிலேயே, மக்களவையில் எங்களுக்கு பெரும்பான்மை கிடையாது, ஆனால், மோடி என்ன சொல்லப் போகிறார்? என்பதை தெரிய விரும்கிறோம்.'' என்றார்.

    Next Story
    ×