search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வெள்ளையனே வெளியேறு இயக்க தினம்: சுதந்திர போராட்ட வீரர்களுக்கு இரு அவைகளிலும் மவுன அஞ்சலி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    வெள்ளையனே வெளியேறு இயக்க தினம்: சுதந்திர போராட்ட வீரர்களுக்கு இரு அவைகளிலும் மவுன அஞ்சலி

    • ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்ட நினைவு தினம்
    • எம்.பி.க்கள் ஒரு நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி

    மகாத்மா காந்தியால் 1942-ல் தொடங்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் அர்ப்பணிப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக வெள்ளையனே வெளியேறு இயக்க தினம் அனுசரிக்கப்படுகிறது.

    இதனையொட்டி பாராளுமன்ற இரு அவைகளிலும் எம்.பி.க்கள் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    அதேபோல் ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணுகுண்டு வீசப்பட்டு 78 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அதில் உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    மவுன அஞ்சலி செலுத்தப்பட்ட பின் அவை நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    Next Story
    ×