search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Militants"

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இன்று பிற்பகல் ராணுவ வீரரை அவரது வீட்டின் அருகே பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #Pulwama #Armymanshotdead
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் தெற்கில் அமைந்துள்ள புல்வாமா மாவட்டத்தில் உள்ள பிங்லீனா கிராமத்தில் வசித்து வருபவர் மொகமது யூசுப் நாயக். இவரது மகன் ஆஷிக் உசைன். ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில், இன்று மதியம் ஆஷிக் உசைனை அவரது வீட்டின் அருகே பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

    தகவலறிந்து ராணுவமும், மாநில போலீசாரும் விரைந்து வந்தனர். அவர்கள் ஆஷிக் உசைன் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



    அந்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளார்களா என ராணுவத்தினரும், போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராணுவ வீரரை அவரது வீட்டின் அருகே பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #Pulwama #Armymanshotdead
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னை மாணவி எழுப்பிய கேள்விக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெளிவாக பதில் அளித்தார். #Congress #RahulGandhi
    சென்னை:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது கல்வி, அரசியல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:-

    நாட்டில் தற்போதுள்ள உயர்கல்வி திட்டம் சிறந்த தரத்திலேயே உள்ளது. கல்வி மற்றும் ஆராய்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படவேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் தடையாக உள்ளது.

    காஷ்மீர் மீதான பார்வை மாறவேண்டும். ஜம்மு காஷ்மீரில் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலமே பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த முடியும். காஷ்மீர் இளைஞர்களை மற்ற இளைஞர்களோடு இணையச் செய்வதன் மூலம் பயங்கரவாதத்தை குறைக்க முடியும்.

    காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் நாட்டை தனிமைப்படுத்த ராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியின்போது, காஷ்மீரில் 2011 முதல் 2013 வரை உயிரிழப்பு பெருமளவு குறைக்கப்பட்டது. தொடர் நடவடிக்கைகள் மூலம் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை காங்கிரஸ் அரசு தடுத்து வந்தது.


    நாட்டில் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. பத்திரிகையாளர்களும் தங்கள் கடமையை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலந்துரையாடல் தொடங்கியபோது, ஒரு மாணவி சார் என்று அழைத்தபோது, அவ்வாறு அழைக்க வேண்டாம், ராகுல் என்றே அழைக்கவும் என ராகுல்காந்தி மாணவிகளிடம் கூறினார். பின்னர், ஹாய் ராகுல் என ஒரு கல்லூரி மாணவி கூறியதும் அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது. கலந்துரையாடல் முடியும் தருவாயிலும் மாணவிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அப்போது அனைவரும் சமூக வலைத்தளங்களில் தன்னை பின்தொடரும்படி ராகுல் கேட்டுக்கொண்டார்.  #Congress #RahulGandhi
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே நடந்த கடும் துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். #JammuKashmir #Encounter
    40 வீரர்கள் மரணமடைந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினரும், பயங்கரவாதிகளும் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தியா தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் டிரால் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் பயங்கரவாதிகள் ஊடுறுவியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினர் சார்பிலும் பதில் தாக்குதல் கொடுக்கப்பட்டது.



    இரு தரப்புக்கு இடையே நடந்த கடும் துப்பாக்கிச்சண்டையில் பயங்கவராதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. #JammuKashmir #Encounter

    புல்வாமா மாவட்டத்தில் தாக்குதல் நடத்தி பாதுகாப்பு படை வீரர்களை கொன்றதற்கு கடும் விளைவை சந்திக்க நேரிடும் என பயங்கரவாதிகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். #PMModi #CRPF #PulwamaAttack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் வழியாக ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பொதுமக்களின் வாகனங்களுடன் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் 78 வாகனங்களில் அணிவகுத்து சென்றனர். இவர்கள் அனைவரும் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மொத்தம் 2,547 வீரர்கள் வாகனங்களில் சென்றனர்.

    அவந்திப்போரா என்ற இடத்தில் நேற்று மாலை சென்றபோது வீரர்கள் சென்ற ஒரு வாகனத்தின் மீது பயங்கரவாதிகளின் தற்கொலை படை கார் மோதியது. அந்த காரில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு இருந்தன. கார் மோதியதும் பயங்கர சத்தத்துடன் காரும் வீரர்களின் வாகனமும் வெடித்து தீப்பிடித்து எரிந்தன. இதில் அந்த வாகனத்தில் பயணம் செய்த 40 வீரர்கள் உடல் சிதறி பலியானார்கள். பல வீரர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் பற்றி தகவல் அறிந்ததும் மத்திய அரசு கடும் அதிர்ச்சி அடைந்தது. பிரதமர் மோடி உடனடியாக கண்டனம் தெரிவித்தார். இன்று காலை அவர் டெல்லியில் மத்திய மந்திரி சபையின் அவசர கூட்டத்தை கூட்டி, நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.

    அதன்பின்னர் பிரதமர் மோடி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டெல்லி - வாரணாசி இடையே அதிநவீன சொகுசு ரெயிலான ‘வந்தே பாரத்’ ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் பாகிஸ்தானை மறைமுகமாக குறிப்பிட்டு கடும் எச்சரிக்கை விடுத்தார். அவர் பேசியதாவது:-

    காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு எனது அஞ்சலி. ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு உள்ளது. நமது வீரர்களின் வீரத்தின் மீதும், துணிச்சல் மீதும் முழு நம்பிக்கை உள்ளது.



    இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கும் சக்திகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். அனைத்து நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன. இந்த சம்பவத்துக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும். இந்த தாக்குதலுக்கு எதிராக நாடு ஒன்றிணைந்து நிற்கிறது.

    நாடு தற்போது மிகவும் கோபமாக உள்ளது. இந்திய குடிமகன் ஒவ்வொருவரின் ரத்தமும் கொதித்துப் போய் உள்ளது. இந்த செயலுக்கு உரிய தண்டனை கொடுக்கப்படும்.

    பயங்கரவாதிகள் மிகப் பெரிய தவறு செய்துவிட்டார்கள். இதன் பின்னணியில் இருப்பவர்கள் மிகப்பெரிய விலை கொடுப்பார்கள். இனி அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் தோல்வியை சந்திக்கும்.

    இதுபோன்ற தாக்குதலால் இந்தியா ஒரு போதும் அச்சத்தில் உறைந்துவிடாது, சதி செய்து இந்தியாவை சீர்குலைக்கும் கனவு நிறைவேறாது. அவர்களது சதி- நாசவேலையை கோடிக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து முறியடிப்பார்கள். எந்த நோக்கத்திற்காக வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தார்களோ அவர்களது நோக்கம் விரைவில் நிறைவேறும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    உள்துறை மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் இன்று மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம் செய்வதாக இருந்தது. அவர் தனது பயணத்தை ரத்து செய்து விட்டு உடனடியாக ஸ்ரீநகர் விரைந்தார். அங்கு காஷ்மீர் கவர்னருடன் பயங்கரவாதிகள் தாக்குதல் பற்றியும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை பற்றியும் ஆலோசனை நடத்தினார்.

    ஏற்கனவே காஷ்மீரின் உரி பகுதியில் ராணுவ முகாம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை துல்லிய தாக்குதல் நடத்தி அழித்தது.

    அதுபோல் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும், எந்த நேரத்திலும் தாக்குதல் நடைபெறலாம் என்றும் தெரிகிறது. இதற்காக எல்லைப் பகுதியில் வகிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். #PMModi #CRPF #PulwamaAttack

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பத்காம் மாவட்டத்தில் நடந்த சண்டையில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். #JKEncounter #MilitantsNeutralised
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பத்காம் மாவட்டம், கோபால்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர்.



    அப்போது பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இந்த மோதலில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. #JKEncounter #MilitantsNeutralised
    காஷ்மீரில் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்குமிடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் மற்றும் பயங்கரவாதி உயிரிழந்தனர். #JKEncounter

    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் நுழையும் பயங்கரவாதிகளை ராணுவம் வேட்டையாடி வருகிறது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு வருகிறார்கள். 

    இந்நிலையில் தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் ரத்னிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் தகவல் பாதுகாப்பு படைக்கு கிடைத்தது.

    இதையடுத்து இன்று அதிகாலை அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பயங்கரவாதிகளும் சுட்டனர். 

    நீண்ட நேரம் நடந்த இந்த சண்டையில் பயங்கரவாதி ஒருவரும், ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு ராணுவ வீரர் படுகாயம் அடைந்துள்ளார். அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #JKEncounter

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் தந்தை, பிரதமர் மோடியின் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். #SambaRally #PMModi
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி ராணுவ வீரரான அவுரங்கசீப், ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்று சுட்டுக்கொன்றனர்.

    இதனையடுத்து பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் தலைமை ராணுவ தளபதி பிபின் ராவத் ஆகியோர் அவுரங்கசீப்பின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். ஜவான் அவுரங்கசீப்புக்கு சவுர்யா சக்ரா விருது வழங்கப்பட்டது.

    இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டம் விஜய்பூரில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் பாஜக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது, பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ராணுவ வீரர் அவுரங்கசீப்பின் தந்தை முகமது ஹனீப் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரி ராகேஷ் குமார் ஷர்மா ஆகியோர் மோடியின் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். அப்போது, பாஜக மாநில தலைவர் ரவீந்தர் ரெய்னா உடனிருந்தார்.

    ஏழைகளுக்கான கொள்கைகள் கொண்ட பாஜகவில் சேர்ந்துள்ளதாகவும், முந்தைய அரசாங்கத்தினைப் போல் அல்லாமல் மோடி அரசு சிறந்த முறையில் ஆட்சி நடத்தி வருவதாகவும் ஹனீப் தெரிவித்துள்ளார்.  #SambaRally #PMModi

    குடியரசு தினவிழாவை சீர்குலைக்க சதி திட்டம் தீட்டியிருந்த 2 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #RepublicDay

    புதுடெல்லி:

    டெல்லியில் நாளை குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. இதில் பயங்கரவாதிகள் புகுந்து நாச வேலையில் ஈடுபடலாம் என்று கருதி டெல்லி போலீசார் கடந்த சில நாட்களாகவே தீவிர சோதனை நடத்தி கண்காணித்து வருகிறார்கள்.

    சமீபத்தில் மத்திய டெல்லியின் ராஜ்கத் பகுதியில் பயங்கரவாதி பதுங்கி இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசாரும் பாதுகாப்பு படையினரும் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு பயங்கரவாதி பிடிபட்டான். அவன் பெயர் அப்துல் லத்தீப் கானாய் என்ற உமைல் என்ற திலாவர். போலீசார் அவனை கைது செய்து ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    இதில் டெல்லியில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் சதித்திட்டத்துடன் பதுங்கி இருந்ததாக திடுக்கிடும் தகவல் வெளியானது. காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் சமீபத்தில் கையெறி குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது தற்போது பிடிபட்ட லத்தீப் என்பதும் தெரிய வந்தது.

    ஸ்ரீநகரில் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது போல் டெல்லி குடியரசு தின விழாவிலும் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக போலீஸ் விசாரணையின் போது தெரிவித்தான்.

    பயங்கரவாதி லத்தீப்பிடம் இருந்து சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் டெல்லி தாக்குதலுக்காக காஷ்மீரில் கையெறி குண்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தான். அதன்பேரில் போலீசார் காஷ்மீருக்கு விரைந்து சென்று 2 கையெறி குண்டுகளை கைப்பற்றினார்கள்.

    இது தொடர்பாக காஷ்மீரின் பந்திபோராவைச் சேர்ந்த மற்றொரு பயங்கரவாதி ஹிலால் என்பவனையும் போலீசார் கைது செய்தனர். இவன் டெல்லி வந்து பல இடங்களுக்கு சென்று தாக்குதல் நடத்துவதற்கு நோட்டமிட்டு சென்றுள்ளான்.

    பயங்கரவாதி லத்தீப் கைது செய்யப்பட்ட தகவல் காஷ்மீர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. இவன் கைது செய்யப்பட்டதன் மூலம் டெல்லி குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க நடந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டது.

    இதற்கிடையே கேரள மாநிலம் கோழிக்கோடில் கடந்த 2006-ம் ஆண்டு இரட்டை குண்டுவெடிப்பு நடந்தது. இது தொடர்பாக 2-வது முக்கிய குற்றவாளியான முகமத் அசார் என்பவன் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டான்.

    சவுதி அரேபியாவில் பதுங்கி இருந்த இவன் டெல்லி திரும்பிய போது அதிகாரிகள் விசாரணையின் போது குண்டு வெடிப்பில் தேடப்பட்டவன் என்பதை கண்டுபிடித்தனர். இவன் தலைச்சேரியை சேர்ந்தவன்.

    கடந்த 2003-ம் ஆண்டு கேரளாவின் மராட் பகுதியில் நடந்த படுகொலைகள் தொடர்பான குற்றவாளிகளுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதால் கோழிக்கோடில் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டதாக அசார் தெரிவித்துள்ளான். இவனும் மற்ற இரு குற்றவாளிகளான யூசுப், நசீர் ஆகியோர் சேர்ந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டனர்.

    2006 மார்ச் மாதம் 3-ந் தேதி கோழிக்கோடில் கேரள அரசு போக்குவரத்து கழக பஸ் நிலையத்தில் ஒரு குண்டும், கால்வாயில் மற்றொரு குண்டும் வெடித்தது. இதில் 2 பேருக்கு மட்டும் காயம் ஏற்பட்டது. இந்த குண்டு வெடிப்பு பற்றி தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் 2-வது குற்றவாளி சிக்கியுள்ளான். #RepublicDay

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #JKEncounter #Militants
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக ராணுவத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தெற்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியானில் ஹெப் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து ராணுவத்தினர் அங்கு சென்று, பயங்கரவாதிகள் இருந்த பகுதியை சுற்றி வளைத்து  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.



    அப்போது பயங்கரவாதிகள்,  ராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. #JKEncounter #Militants 
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #JKEncounter #Militants
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக பாதுகாப்பு படையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பத்காம் மாவட்டத்திற்குட்பட்ட  ஹப்பாட்நகர் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்று, பயங்கரவாதிகள் இருந்த வனப்பகுதியை சுற்றி வளைத்து  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில்  தாக்குதல் நடத்தினர். சிறிது நேரம் நீடித்த இந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.



    பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னரே தேடுதல் வேட்டை, துப்பாக்கிச் சண்டையாக மாறியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அப்பகுதியில்  மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என பாதுகாப்பு படையினரால் சந்தேகிக்கப்படுகிறது. எனவே, தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    சண்டை நீடித்து வரும் நிலையில், அப்பகுதியில் சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக போலீசார், டுவிட்டர் பக்கத்தில், தெரிவித்துள்ளனர்.

    குடியரசு தின விழாவை முன்னிட்டு, பயங்கரவாதிகள் மாநிலத்தில் பெரும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. #JKEncounter #Militants 
    சோமாலியா நாட்டில் அட்டூழியம் செய்துவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகளை குறிவைத்து அரசுப்படைகள் இன்று நடத்திய தாக்குதலில் 77 பேர் கொல்லப்பட்டனர். #alShabab #militantskilled
    மொகடிஷு:

    ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள், இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாட்டின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் இவர்கள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி பலரை கொன்று குவித்தும் வருகின்றனர். இவர்களை ஒழிக்கும் பணியில் ராணுவம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ராணுவத்துக்கு உதவியாக அமெரிக்காவை சேர்ந்த அதிரடிப் படையினரும் இந்த தாக்குதலில் இணைந்துள்ளனர்.

    இந்நிலையில், சோமாலியாவின் தென்பகுதியில் உள்ள அர்ராரே மற்றும் முசே ஹாஜி நகரங்களுக்கு இடையில் அல் ஷபாப் பயங்கரவாதிகளை குறிவைத்து அரசுப்படைகள் இன்று நடத்திய வான்வழி தாக்குதலில் 77 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் கவச வாகனங்கள் (பீரங்கி டாங்கிகள்) அழிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளிட்டுள்ளன.



    முன்னதாக, சோமாலியாவில் அமைதிப்பணியில் ஈடுபட்டு வரும் எத்தியோப்பா நாட்டு ராணுவ வீரர்களை குறிவைத்து புர்ஹாகாபா என்ற இடத்தில் அல் ஷபாப் படையினர் நேற்று நடத்திய ஆவேச தாக்குதலில் 57 வீரர்கள் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இன்று அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் 77 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுபோல் இன்றும் ஜுப்லான்ட் பகுதியில் உள்ள பர்-சங்குனி பகுதியில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த வந்த பயங்கரவாதிகளின் திட்டம் முறியடிக்கப்பட்டதாகவும் சோமாலியா ராணுவத்தை சேர்ந்த உயரதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். #alShabab #militantskilled  
    மாலியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் எம்எஸ்ஏ கிளர்ச்சி இயக்கத்தினர் என மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர். #MaliAttack
    பமாகோ:

    மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டின் வடகிழக்கு பகுதியில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். மாலி-நைஜர் எல்லையை ஒட்டிய பகுதிக்குள் நேற்று முன்தினம் நுழைந்த பயங்கரவாதிகள், பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், எம்எஸ்ஏ கிளர்ச்சி இயக்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 10 பேர் உயிரிழந்ததாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த பயங்கரவாத தாக்குதல் மினாகாவிலிருந்து 45 கிலோமீட்டர் தூரத்தில் நடந்தது. இப்பகுதியில் கடந்த  2018 ஆம் ஆண்டில் நடந்த பயங்கரவாதிகளின் வன்முறைத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலான மக்கள் புலானி இனத்தவர்கள் ஆவர்.

    தற்போது நடந்த தாக்குதலுக்கு எம்எஸ்ஏ இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இரு தரப்பினருக்கிடையிலான மோதலின் முடிவில் முதியவர்கள் உள்ளிட்ட 20 பேரை பயங்கரவாதிகள் கொலை செய்ததாகவும் அந்த இயக்கம் கூறியுள்ளது.

    கடந்த ஆகஸ்டு மாதம், இது குறித்து வல்லுனர்கள் குழு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் அளித்துள்ள அறிக்கையில், “பயங்கரவாத குழுக்களுக்கும், சர்வதேச மற்றும் மாலி  அரசுப் படைகள் ஆகியவற்றிற்கும் இடையேயான மோதல்களால் பொது மக்களிடையே  பதற்றம் அதிகரித்துள்ளது”, என கூறப்பட்டது.

    2012-ல் முக்கியமான பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்த பயங்கரவாதிகளின் எழுச்சியை தடுப்பதற்கு மாலி படைகளுக்கு பிரான்ஸ் உதவி செய்தது. அதன்பின்னர் பயங்கரவாதிகளை தனிமைப்படுத்த வடிவமைக்கப்பட்ட 2015 ம் ஆண்டின் சமாதான உடன்படிக்கை இருந்தபோதிலும், நாட்டின் பெரும்பாலான பகுதிகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை.

    அப்போதிலிருந்து, மாலியின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகள், அண்டை நாடான பர்கினா பாசோ மற்றும் நைஜர் எல்லைகளில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. #MaliAttack
    ×