search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோமாலியா"

    • சோமாலியா கடற்பகுதியில் 15 இந்தியர்களுடன் வணிக கப்பல் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.
    • கப்பலை விட்டு கொள்ளையர்கள் வெளியேற ஹெலிகாப்டர் மூலம் இந்திய கடற்படை எச்சரிக்கை விடுத்தது.

    புதுடெல்லி:

    ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் கடற்பகுதியில் லைபீரியா நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று சோமாலிய கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இந்தக் கப்பலில் 15 இந்திய மாலுமிகள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது.

    இதையடுத்து, இந்திய கடற்படையினர் அதிரடியாக களத்தில் இறங்கி கப்பலில் சிக்கியுள்ளவர்களை கடற்கொள்ளையர்களிடம் இருந்து மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். சென்னை கப்பல் சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலை நெருங்கியது. கப்பலை விட்டு கொள்ளையர்கள் வெளியேற ஹெலிகாப்டர் மூலம் இந்திய கடற்படையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில், இந்திய கடற்படை கமாண்டோக்கள் கடத்தப்பட்ட கப்பலுக்குள் நுழைந்து கடத்தப்பட்ட இந்தியர்களை பத்திரமாக மீட்டனர். கொள்ளையர்கள் தப்பியோடினர். கப்பலில் இருந்த 15 இந்தியர்கள், 6 பிலிப்பைன்ச் நாட்டைச் சேர்ந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    முழுமையான சோதனைக்குப் பிறகு கப்பல் தற்போது புறப்பட்டது என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

    • சோமாலியா கடற்பகுதியில் 15 இந்தியர்களுடன் வணிக கப்பல் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
    • கடத்தப்பட்ட கப்பலைச் சுற்றியுள்ள நிலைமையை இந்திய கடற்படை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

    மொகடிஷு:

    ஆப்பிரிக்க நாடான சோமாலியா கடற்பகுதியில் 15 இந்தியர்களுடன் வணிக கப்பல் (எம்.வி. லிலா நார்போல்க்) கடத்தப்பட்டுள்ளது என தகவல் வெளியானது.

    இது குறித்து தகவலறிந்த இந்திய கடற்படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கப்பலில் லைபீரியாவின் கொடி இருந்ததாகக் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக இந்திய கடற்படை செய்தி தொடர்பாளர் கூறுகையில், கடத்தப்பட்ட கப்பலைச் சுற்றியுள்ள நிலைமையை இந்திய கடற்படை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் சென்னை, கடத்தப்பட்ட கப்பலை நோக்கி நிலைமையை சமாளிக்க நகர்ந்து வருகிறது என தெரிவித்தார்.

    மேலும், இந்தியக் கடற்படையின் கடல்சார் ரோந்து விமானம் கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்தி பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. அப்பகுதியில் உள்ள மற்ற நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்த நிலைமையும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. நட்பு நாடுகளுடன் இணைந்து இப்பகுதியில் வணிகக் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய கடற்படை உறுதியாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • ஓட்டலுக்குள் புகுந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு.
    • ஓட்டல் நுழைவு வாயில் மீது கார் வெடிகுண்டு மூலம் தாக்குதல்.

    கிஸ்மாயு:

    சோமாலியா நாட்டின் துறைமுக நகரமான கிஸ்மாயுவில் உள்ள ஒரு ஓட்டலுக்குள் திடீரென புகுந்த தீவிரவாதிகள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.மேலும் அந்த ஓட்டலின் நுழைவு வாயில் மீது கார் வெடிகுண்டு மூலம் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த கொடூர தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 47 பேர் படுகாயம் அடைந்தனர். சோமாலியாவில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான அல்-ஷபாப் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.

    இது குறித்த தகவல் அறிந்து, அங்கு விரைந்த சோமாலியா பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளின் முற்றுகையை முடிவுக்கு கொண்டு வந்ததுடன், அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த ஏராளமான பொதுமக்கள் மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

    • அரசு தலைமை அலுவலகத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
    • கொடூர தாக்குதலுக்கு அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    ஹிரன்:

    ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் செயல்பட்டு வரும் அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது. அல்கொய்தாவுடன் தொடர்புடைய இந்த பயங்கரவாத அமைப்பு, சோமாலியா மக்கள் மற்றும் ராணுவத்தை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், ஹிரன் மாகாணத்தில் உள்ள பெலேட்வேய்ன் நகரில் உள்ள அரசு தலைமை அலுவலகத்தில் இன்று அடுத்தடுத்து இரண்டு கார் வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் அந்த மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ஹிர்ஷபெல்லே, சுகாதார ஆணையர் மற்றும் அதிகாரிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இந்த கொடூர தாக்குதலுக்க அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தற்கொலை படை போல் செயல்பட்டு இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அல்ஷபா அமைப்பின் முக்கிய தலைவன் அப்துல்லாவை கடந்த சனிக்கிழமை சோமாலிய பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்ற நிலையில் அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சோமாலியாவில் 27 ராணுவ வீரர்களை கொன்று ராணுவ தளத்தை கைப்பற்றியுள்ளதாக அல் சபாப் பயங்கரவாத குழு அறிவித்துள்ளது. #Somalia #alShabaab
    மொகாடிஷு:

    ஆப்பிரிக்க நாடான சோமாலியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இயங்கி வரும் அல் சபாப் பயங்கரவாத குழு சோமாலியா, கென்யா, உகாண்டா ஆகிய நாடுகளில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது. சோமாலியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடத்தி வரும் இந்த இயக்கம் ஐ.எஸ் அமைப்பின் ஆதரவு பெற்றதாக உள்ளது.

    இந்நிலையில், சோமாலியா நாட்டில் கிஸ்மயூ துறைமுக நகருக்கு சற்று தொலைவில் அமைதுள்ள அந்நாட்டின் ராணுவ தளத்தை கைப்பற்றியுள்ளதாக அல் சபாப் அறிவித்துள்ளது.  ‘வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்றை தளத்தின் மீது வெடிக்கச் செய்து பின்னர் உள்ளே புகுந்து சண்டையிட்டு ராணுவ தளத்தை எங்களது வசமாக்கி விட்டோம்’ என அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    இந்த சண்டையில் 27 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், சில வீரர்கள் வன பகுதிக்குள் தப்பி சென்றதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. 
    ×