என் மலர்

  நீங்கள் தேடியது "army man shot dead"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இன்று பிற்பகல் ராணுவ வீரரை அவரது வீட்டின் அருகே பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #Pulwama #Armymanshotdead
  ஸ்ரீநகர்:

  காஷ்மீர் மாநிலம் தெற்கில் அமைந்துள்ள புல்வாமா மாவட்டத்தில் உள்ள பிங்லீனா கிராமத்தில் வசித்து வருபவர் மொகமது யூசுப் நாயக். இவரது மகன் ஆஷிக் உசைன். ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.

  இந்நிலையில், இன்று மதியம் ஆஷிக் உசைனை அவரது வீட்டின் அருகே பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

  தகவலறிந்து ராணுவமும், மாநில போலீசாரும் விரைந்து வந்தனர். அவர்கள் ஆஷிக் உசைன் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   அந்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளார்களா என ராணுவத்தினரும், போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  ராணுவ வீரரை அவரது வீட்டின் அருகே பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #Pulwama #Armymanshotdead
  ×