search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Magic"

    • இளம்பெண் மாயமானார்.
    • சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ஆண்டாள்புரம் கிழக்குத்தெருவை சேர்ந்த ராணி மகள் ஹரிதா (23). கடந்த 6-ந் தேதி இவர் தனது நண்பரின் தந்தையை பார்ப்பதற்காக மீனாட்சி மிஷின் மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் தகவல் கிடைக்கவில்ைல. இதுகுறித்து தாய் ராணி கொடுத்த புகாரின்பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமங்கலம் பேரையூர் அருகே உள்ள சலுப்பப்பட்டியை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் பாக்கியலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று பாக்கியலட்சுமி இளைய மகள் அருள்செல்வியுடன் (8) மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த போலீசார் சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறையில் மாயமான இளம்பெண் குறித்து இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறை தோப்புப்பாளையம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி தனது மனைவி மற்றும் 2 மகன் ஒரு மகளுடன் அதே பகுதியில் குடியிருந்து வருகிறார். அவரது 17 வயது இளைய மகள் சம்பவத்தன்று காலை பெருந்துறையில் உள்ள ஒரு நகை கடையில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    மாலை அவர் வீடு திரும்பாததால் அக்கம்பக்கத்தினர் மற்றும் கடைவீதி பகுதியில் தேடிப் பார்த்தும் அந்த இளம்பெண்ணை காணவில்லை.

    இது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் அவரது தந்தை புகார் அளித்தார். புகாரின் பேரில் பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • 3 இளம்பெண்கள்-தொழிலாளி மாயமானார்
    • இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள அப்பனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 27). இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளார். கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் ராஜலட்சுமி விவாகரத்து தருமாறு கணவரை வலியுறுத்தி வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த ராஜலட்சுமி தனது மகனுடன் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து திருச்சுழி போலீ சார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மானகசேரியை சேர்ந்தவர் முத்துக்காளை. இவரது மகள் மகாலட்சுமி (25). இவர் அதே பகுதியில் உள்ள மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற மகாலட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து மல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகள் அனுசுயா அதே பகுதியில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்று அனுசுயா பின்னர் வீடு திரும்பாமல் மாயமானார். இது குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருத்தங்கல்லை சேர்ந்த வர் பால்சாமி (43), கட்டிட தொழிலாளி. இவர் குடும்ப தேவைக்காக பலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் பால்சாமிக்கும் அவரது மனைவி அழகுலட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பால்சாமி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலன் இல்லை. இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் 4 குழந்தைகள் மாயமானதாக புகார் எழுந்துள்ளது.
    • திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான குழந்தைகளை தேடி வருகின்றனர்.

    மதுரை

    திருப்பரங்குன்றம், முஸ்லிம் தெருவை சேர்ந்த வசந்தகுமார் மனைவி கொடியரசி (30). இவர் திருப்பரங்குன்றம் போலீசில் கொடுத்த புகார் மனுவில், எங்களின் மகன் கவிமணி சாரதி (10), திருப்பரங்குன்றம் மேட்டு தெரு யோகராஜா மகள் சிவரஞ்சனி (15), அவரது சகோதரர் நிவின் குமார் (9) மற்றும் சக்திவேல் மகன் மாசிலாமணி (15) ஆகிய 4 குழந்தைகளை காணவில்லை. அவர்களை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான குழந்தைகளை தேடி வருகின்றனர்.

    • ஈரோட்டில் கல்லூரி மாணவி தனது தோழியை பார்த்து வருவதாக கூறிவிட்டு சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடு பார்த்தும் கிடைக்கவில்லை.
    • இதனையடுத்து மாணவியின் தாய் லலிதா வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் அசோகபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ரஞ்சிதா (19).

    இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வந்த ரஞ்சிதா மதியம் தனது தோழியை பார்த்து வருவதாக கூறிவிட்டு சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    பின்னர் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடு பார்த்தும் கிடைக்கவில்லை. இதனையடுத்து மாணவியின் தாய் லலிதா வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.

    கோபி அருகே கட்டிட வேலைக்கு சென்ற தொழிலாளி மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    கோபி கரட்டடிபாளையம் தரணி நகரை சேர்ந்தவர் முருகன் (58).

    கட்டிட தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    பல்வேறு இடங்களில் தேடியும் முருகன் குறித்த எவ்வித தகவலும் இல்லாததால் மகள் கவுரி கோபி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன தொழிலாளியை தேடி வருகின்றனர்.

    • ஈரோடு சாஸ்திரி நகரை சேர்ந்த பிளஸ்-௨ மாணவி காலை பள்ளிக்கு செல்வதாக கிளம்பி சென்றவர் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை.
    • இதனையடுத்து மாணவியின் பெற்றோர் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சாஸ்தி நகர் மெயின் வீதியை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி சரோஜா. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    இவர்களது மகள் பவித்ரா (17) ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று காலை பள்ளிக்கு செல்வதாக கிளம்பி சென்றவர் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை.

    இதனையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும், அவரது நண்பர்களிடம் விசாரித்த போது மாணவி பவித்ரா பள்ளிக்கு வரவில்லை என்று கூறினர். இதனால் பெற்றோர் உறவினர்களின் வீடுகளில் தேடியும், விசாரித்த போது எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

    இதனையடுத்து மாணவியின் பெற்றோர் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.

    • ரங்கசாமி என்பவரின் பட்டா நிலத்தில் இருந்த 40 மீட்டர் உயரமுள்ள செல்போன் டவர், 3 டீசல் ஜெனரேட்டர், பேட்டரிகள் மற்றும் குளிர் சாதன எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனது தெரிய வந்தது.
    • இது குறித்து சென்னிமலை போலீார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னிமலை:

    சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கட்டுமான பிரிவில் திட்ட பொறியாளராக பணி புரிந்து வருபவர் கோசல்குமார் (வயது 49).

    இவரது நிறுவனம் சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் இந்திய தொலைதொடர்புத் துறையில் பதிவு பெற்று நாடு முழுவதும் செல்போன் டவர்கள் அமைத்து அதனை பராமரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    அதன்படி இந்த நிறு வனத்தின் சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பல்வேறு இட ங்களில் ஏர்செல் டவர்க ளை சுவாதீனத்தில் எடுத்து மற்றொரு தொலை த்தொடர்பு நிறுவனத்தி ற்காக (ஜியோ நெட்வொர்க்) பராமரித்து வந்துள்ளனர்.

    அதன்படி கடந்த 1-9-2017 முதல் ஈரோடு மாவட்டம் சென்னிமலை பாள்ளக்காட்டு தோட்ட த்தில் உள்ள ரங்கசாமி என்பவரின் நிலத்தில் செல்போன் டவர் அமைத்து அதனை பராமரித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி தொலை த்தொடர்பு நிறுவன திட்ட பொறியாளர் கோசல்குமார் செல்போன் டவரை ஆய்வு செய்ய சென்னிமலைக்கு வந்தார். அப்போது ரங்கசாமி என்பவரின் பட்டா நிலத்தில் இருந்த 40 மீட்டர் உயரமுள்ள செல்போன் டவர், 3 டீசல் ஜெனரேட்டர், பேட்டரிகள் மற்றும் குளிர் சாதன எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனது தெரிய வந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு ரூ.31½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

    இதையடுத்து அவர் செல்போன் டவர் குறித்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தார்.

    ஆனால் சரியான தகவல் கிடைக்க வில்லை. இது குறித்து கோசல் குமார் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். பின்னர் இது குறித்து பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து இது குறித்து சென்னிமலை போலீசில் அவர் புகார் கொடுத்தார். சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி (பொறுப்பு), சப் இன்ஸ்பெக்டர் உமாபதி ஆகியோர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன செல்போன் டவர் குறித்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    • தாய்-மகள் திடீர் மாயமானார்கள்.
    • சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய்-மகளை தேடி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள ஜமீன்கொல்ல ங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து, கட்டிட தொழிலாளி. இவரது மனைவி வெண்ணிலா (வயது 37). இவர்களது மகள் நந்தினி (17). சம்பவத்தன்று வீட்டில் இருந்த தாய்-மகள் திடீரென மாயமானார்கள். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து மாரிமுத்து சேத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய்-மகளை தேடி வருகின்றனர்.

    • மொடக்குறிச்சி அருகே வீட்டில் இருந்த பிளஸ்-1 மாணவி மாயமானார்.
    • இதையடுத்து காணாமல் போன மகளை கண்டு பிடித்து தருமாறு தந்தை மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி கஸ்தூரிபாய் காலனியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (49). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு கவுசிகா (16), ஹர்சிதா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

    இவரது மகள் கவுசிகா மொடக்குறிச்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று பாலகிருஷ்ணன் தனது 2 மகள்களையும் வீட்டில் விட்டுவிட்டு உறவினர்கள் திருமணத்துக்காக நாமக்கல் சென்று விட்டார்.

    இந்நிலையில் ஹர்சிதா தனது அக்காள் கவுசிகா வீட்டில் இல்லாததால் தேடி பார்த்து உள்ளார். இதையடுத்து இரவு 7 மணிக்கு ஹர்சிதா தனது பெற்றோருக்கு போன் செய்து கவுசிகாவை காணவில்லை என்று கூறி உள்ளார்.

    இதையடுத்து பாலகிருஷ்ணன் அக்கம்பக்கம் கவுசிகாவை தேடி பார்த்தும் விசாரித்தும் கிடைக்காததால் தனது மகளை கண்டு பிடித்து தருமாறு மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவி கவுசிகாவை தேடி வருகின்றனர்.

    ஈத்தாமொழி, குளச்சலில் பெண் என்ஜினீயர்- தொழிலாளி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    ஈத்தாமொழி சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 62). இவரது மகள் வினோதினி (25). பி.இ. படித்து விட்டு நாகர்கோவிலில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வினோதினி நாகர்கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் வினோதினி வீடு திரும்பவில்லை.

    இதனால் பெற்றோர் வினோதினியை பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் வினோதினி கிடைக்கவில்லை. இது குறித்து கிருஷ்ணன் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குளச்சல் கடியப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் கில்லஸ்பாபு (48). இவர் மனைவியை பிரிந்து மகன் பவினுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த கில்லஸ்பாபு திடீரென மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.

    ஆனால் கில்லஸ்பாபு கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது மகன் பவின் குளச்சல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன் ஜோஸ்லின், ஜார்ஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான கில்லஸ் பாபுவை தேடி வருகிறார்கள்.

    தேனி அருகே கோவிலுக்கு சென்ற கல்லூரி மாணவி மாயமானார்.

    தேனி:

    தேனி அருகே சின்னமனூர் ஓடைப்பட்டி சத்யாநகரை சேர்ந்தவர் செல்வம். இவர் தனது மனைவியுடன் கேரள மாநிலம் உடுமஞ்சோலையில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். செல்வத்தின் மகள் ரம்யா ஓடைப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி கம்பம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிச் சென்றுள்ளார். இரவு வெகு நேரமாகியும் ரம்யா திரும்பாததால் அவரது தந்தைக்கு தெரிவிக்கப்பட்டது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ஓடைப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

    ×