search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இருந்த"

    • குழந்தை திருமணம் செய்து மீட்கப்பட்டவர்
    • நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் காதலித்து வந்தார்.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் மேலகிருஷ்ணன் புதூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த சிறுமியை நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் காதலித்து வந்தார். பெற்றோர் விருப்பத்துடன் கடந்த ஜூலை மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. சிறுமிக்கு 18 வயது நிரம்பாமல் திருமணம் நடைபெற்றதாக கூறி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

    இதன் அடிப்படையில் சமூக நலத்துறை அதிகாரி சரோஜினி விசாரணை மேற்கொண்டார். அப்போது 18 வயது நிரம்பாத நிலையில் திருமணம் செய்து கொடுத்த தால் திருமணம் செய்து கொண்ட வாலிபர் மற்றும் சிறுமியின் தாயார், வாலிபரின் தந்தை ஆகியோர் மீது கன்னியாகுமரி மகளிர் போலீசில் சமூகநலத்துறை அதிகாரி புகார் செய்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமி இருளப்ப புரத்தில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார். பின்னர் அங்கிருந்து வல்லன் குமாரன் விளையில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற சிறுமி மாலையில் காப்பகத்திற்கு திரும்பவில்லை. இதையடுத்து சிறுமியை பல்வேறு இடங்களில் தேடினார்கள். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து காப்பக கண்காணிப்பாளர் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.

    • மக்கள் குறைதீர் முகாம் மேயர் மகேஷ் தலைமையில் நடைபெற்று வருகிறது.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருவதால் ரத்து.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாந கராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாகர்கோவில் மாநகராட்சியில் பொதுமக்கள் தங்கள் குறைகளை தீர்க்க ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும், மக்கள் குறைதீர் முகாம் மேயர் மகேஷ் தலைமையில் நடைபெற்று வருகிறது.

    வருகிற 28-ந்தேதி விளை யாட்டு துறை மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சி களில் கலந்துகொள்ள வருவதால், நாளை (26-ந்தேதி) நடைபெற இருந்த, பொதுமக்கள் குறைதீர் முகாம் அடுத்த வாரம் வியாழக்கிழமை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பலாத்காரம் செய்ததை சொல்லியே மிரட்டி தன் நண்பர்கள் 2 பேருக்கு அந்த சிறுமியை விருந்தாக்கி இருக்கிறார்.
    • போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் விக்கி என்ற விக்னேஷ் (வயது 24), இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஒரு சிறுமியை காதலிப்பது போல் நடித்து நண்பனின் வீட்டிற்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு பலாத்காரம் செய்ததை சொல்லியே மிரட்டி தன் நண்பர்கள் 2 பேருக்கு அந்த சிறுமியை விருந்தாக்கி இருக்கிறார்.

    அப்போது அவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விக்னேஷ் உள்ளிட்ட 3 பேர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் விக்னேஷ் மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் அடி-தடி வழக்கு, கஞ்சா வழக்கு, கருங்கல் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்பட 4 வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் விக்னேசுக்கு ஆசாரிபள்ளத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் விக்னேஷ் மாணவியை காதலிப்பதாக கூறினார்.

    இதைத்தொடர்ந்து சம்பவத்தன்று மாணவியை விக்னேஷ் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே மாணவி வீட்டுக்கு வராததால் அவரை விக்னேஷ் கடத்திச்சென்றதாக நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் கடத்தல் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து 2 நாட்களுக்கு பிறகு மாணவி வீட்டுக்கு வந்தார். அப்போது விக்னேஷ் தன்னை அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக பெற்றோரிடம் கூறி கதறினார். இதைத்தொடர்ந்து சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் போலீசில் தெரிவித்தனர். இதனையடுத்து கடத்தல் வழக்கை போக்சோ வழக்காக போலீசார் மாற்றினார்.

    அதன்படி விக்னேஷ் மீது 2-வது முறையாக போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. 2 முறை போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டும் போலீசாரிடம் சிக்காமல் விக்னேஷ் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். எனவே அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே விக்னேசை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். எனவே விக்னேசை தேடும்படி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் விக்னேசை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட விக்னேஷை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • சென்னிமலை அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த சிறுவன் மாயமானார்.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பாரதியார் ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில், திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை சேர்ந்த நமச்சிவாயம் (52) செயலாளராக உள்ளார்.

    இந்த இல்லத்தில், சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் பரத் (13), ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலக் குழு மூலமாக சேர்க்கப்பட்டிருந்தார். நேற்று காலை குழந்தைகள் ஆஜர் பட்டியல் எடுத்தபோது சிறுவன் பரத் இல்லை.

    உடனிருந்த குழந்தைகளை விசாரித்தபோது அவன் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட நலக்குழுவுக்கும் சிறுவனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் உதவியுடன் ஈரோடு, பெருந்துறை, அறச்சலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடியும் பரத் கிடைக்கவில்லை. இதையடுத்து இல்லத்தின் செயலாளர் நமச்சிவாயம் அளித்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மொடக்குறிச்சி அருகே வீட்டில் இருந்த பிளஸ்-1 மாணவி மாயமானார்.
    • இதையடுத்து காணாமல் போன மகளை கண்டு பிடித்து தருமாறு தந்தை மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி கஸ்தூரிபாய் காலனியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (49). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு கவுசிகா (16), ஹர்சிதா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

    இவரது மகள் கவுசிகா மொடக்குறிச்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று பாலகிருஷ்ணன் தனது 2 மகள்களையும் வீட்டில் விட்டுவிட்டு உறவினர்கள் திருமணத்துக்காக நாமக்கல் சென்று விட்டார்.

    இந்நிலையில் ஹர்சிதா தனது அக்காள் கவுசிகா வீட்டில் இல்லாததால் தேடி பார்த்து உள்ளார். இதையடுத்து இரவு 7 மணிக்கு ஹர்சிதா தனது பெற்றோருக்கு போன் செய்து கவுசிகாவை காணவில்லை என்று கூறி உள்ளார்.

    இதையடுத்து பாலகிருஷ்ணன் அக்கம்பக்கம் கவுசிகாவை தேடி பார்த்தும் விசாரித்தும் கிடைக்காததால் தனது மகளை கண்டு பிடித்து தருமாறு மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவி கவுசிகாவை தேடி வருகின்றனர்.

    ×