search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The boy"

    • நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கொக்கராயன்பேட்டை பகுதியில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளது.
    • 12 வயது சிறுவன் ஒருவர் ஷட்டர் வழியே டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளே நுழைந்து கல்லாவில் இருந்த பணத்தை திருடி சென்று உள்ளான்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கொக்கராயன்பேட்டை பகுதியில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளது.

    சம்பவத்தன்று காலை ஷட்டரை பாதியளவு மூடிவிட்டு அங்குள்ள பணியாளர்கள் பொருட்கள் பாக்கெட் போடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சுமார் 12 வயது சிறுவன் ஒருவர் ஷட்டர் வழியே டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளே நுழைந்து கல்லாவில் இருந்த பணத்தை திருடி சென்று உள்ளான்.

    இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவானது.

    கல்லாவில் இருந்த பணம் காணாமல் போனதால் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவை பணியாளர்கள் பார்த்தனர். அதில் சிறுவன் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.

    அந்த சிறுவன் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதால் சிறுவனையும், அவரது பெற்றோரையும் நேரில் அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • வெங்கடாசலம். இவரது மனைவி ரேவதி (வயது 26). இவர்களுக்கு கவினேஷ் (வயது 3) என்ற குழந்தை உள்ளது.
    • பொதுக்கிணற்றின் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக கவினேஷ் கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள திருமலைகிரி அடுத்த சங்கரன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி ரேவதி (வயது 26). இவர்களுக்கு கவினேஷ் (வயது 3) என்ற குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் நேற்று மதியம் கவினேஷ், வீட்டின் அருகில் உள்ள பொதுக்கி ணற்றின் பக்கத்தில் விளை யாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக கவினேஷ் கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.

    இதைக் கண்ட பொது மக்கள் மற்றும் குடும்பத்தினர், உடனடியாக கிணற்றில் இறங்கி குழந்தையை மீட்க போராடினர். ஆனால் சுமார் ஒரு மணி நேர போராட்ட த்திற்கு பின் கவினேஷ் பிணமாக மீட்கப்பட்டான்.

    இது குறித்து தகவல் அறிந்த இரும்பாலை போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து கவினேஷன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள். 

    • சென்னிமலை அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த சிறுவன் மாயமானார்.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பாரதியார் ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில், திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை சேர்ந்த நமச்சிவாயம் (52) செயலாளராக உள்ளார்.

    இந்த இல்லத்தில், சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் பரத் (13), ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலக் குழு மூலமாக சேர்க்கப்பட்டிருந்தார். நேற்று காலை குழந்தைகள் ஆஜர் பட்டியல் எடுத்தபோது சிறுவன் பரத் இல்லை.

    உடனிருந்த குழந்தைகளை விசாரித்தபோது அவன் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட நலக்குழுவுக்கும் சிறுவனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் உதவியுடன் ஈரோடு, பெருந்துறை, அறச்சலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடியும் பரத் கிடைக்கவில்லை. இதையடுத்து இல்லத்தின் செயலாளர் நமச்சிவாயம் அளித்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×