டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் கைவரிசை காட்டிய சிறுவன்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கொக்கராயன்பேட்டை பகுதியில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளது.12 வயது சிறுவன் ஒருவர் ஷட்டர் வழியே டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளே நுழைந்து கல்லாவில் இருந்த பணத்தை திருடி சென்று உள்ளான்.
டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் கைவரிசை காட்டிய சிறுவன்
Published on

பள்ளிபாளையம்:

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கொக்கராயன்பேட்டை பகுதியில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளது.

சம்பவத்தன்று காலை ஷட்டரை பாதியளவு மூடிவிட்டு அங்குள்ள பணியாளர்கள் பொருட்கள் பாக்கெட் போடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சுமார் 12 வயது சிறுவன் ஒருவர் ஷட்டர் வழியே டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளே நுழைந்து கல்லாவில் இருந்த பணத்தை திருடி சென்று உள்ளான்.

இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவானது.

கல்லாவில் இருந்த பணம் காணாமல் போனதால் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவை பணியாளர்கள் பார்த்தனர். அதில் சிறுவன் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.

அந்த சிறுவன் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதால் சிறுவனையும், அவரது பெற்றோரையும் நேரில் அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com