ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த சிறுவன் மாயம்

சென்னிமலை அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த சிறுவன் மாயமானார்.இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த சிறுவன் மாயம்
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பாரதியார் ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில், திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை சேர்ந்த நமச்சிவாயம் (52) செயலாளராக உள்ளார்.

இந்த இல்லத்தில், சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் பரத் (13), ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலக் குழு மூலமாக சேர்க்கப்பட்டிருந்தார். நேற்று காலை குழந்தைகள் ஆஜர் பட்டியல் எடுத்தபோது சிறுவன் பரத் இல்லை.

உடனிருந்த குழந்தைகளை விசாரித்தபோது அவன் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட நலக்குழுவுக்கும் சிறுவனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் உதவியுடன் ஈரோடு, பெருந்துறை, அறச்சலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடியும் பரத் கிடைக்கவில்லை. இதையடுத்து இல்லத்தின் செயலாளர் நமச்சிவாயம் அளித்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com