என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டின் அருகே விளையாடிய சிறுவன் கிணற்றில் விழுந்து சாவு
- வெங்கடாசலம். இவரது மனைவி ரேவதி (வயது 26). இவர்களுக்கு கவினேஷ் (வயது 3) என்ற குழந்தை உள்ளது.
- பொதுக்கிணற்றின் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக கவினேஷ் கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.
கொண்டலாம்பட்டி:
சேலம் இரும்பாலை அருகே உள்ள திருமலைகிரி அடுத்த சங்கரன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி ரேவதி (வயது 26). இவர்களுக்கு கவினேஷ் (வயது 3) என்ற குழந்தை உள்ளது.
இந்த நிலையில் நேற்று மதியம் கவினேஷ், வீட்டின் அருகில் உள்ள பொதுக்கி ணற்றின் பக்கத்தில் விளை யாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக கவினேஷ் கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.
இதைக் கண்ட பொது மக்கள் மற்றும் குடும்பத்தினர், உடனடியாக கிணற்றில் இறங்கி குழந்தையை மீட்க போராடினர். ஆனால் சுமார் ஒரு மணி நேர போராட்ட த்திற்கு பின் கவினேஷ் பிணமாக மீட்கப்பட்டான்.
இது குறித்து தகவல் அறிந்த இரும்பாலை போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து கவினேஷன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






