வீட்டில் இருந்த பிளஸ்-1 மாணவி மாயம்

மொடக்குறிச்சி அருகே வீட்டில் இருந்த பிளஸ்-1 மாணவி மாயமானார்.இதையடுத்து காணாமல் போன மகளை கண்டு பிடித்து தருமாறு தந்தை மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.
வீட்டில் இருந்த பிளஸ்-1 மாணவி மாயம்
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி கஸ்தூரிபாய் காலனியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (49). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு கவுசிகா (16), ஹர்சிதா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

இவரது மகள் கவுசிகா மொடக்குறிச்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

சம்பவத்தன்று பாலகிருஷ்ணன் தனது 2 மகள்களையும் வீட்டில் விட்டுவிட்டு உறவினர்கள் திருமணத்துக்காக நாமக்கல் சென்று விட்டார்.

இந்நிலையில் ஹர்சிதா தனது அக்காள் கவுசிகா வீட்டில் இல்லாததால் தேடி பார்த்து உள்ளார். இதையடுத்து இரவு 7 மணிக்கு ஹர்சிதா தனது பெற்றோருக்கு போன் செய்து கவுசிகாவை காணவில்லை என்று கூறி உள்ளார்.

இதையடுத்து பாலகிருஷ்ணன் அக்கம்பக்கம் கவுசிகாவை தேடி பார்த்தும் விசாரித்தும் கிடைக்காததால் தனது மகளை கண்டு பிடித்து தருமாறு மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவி கவுசிகாவை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com