என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
ஈத்தாமொழி, குளச்சலில் பெண் என்ஜினீயர்- தொழிலாளி மாயம்
நாகர்கோவில்:
ஈத்தாமொழி சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 62). இவரது மகள் வினோதினி (25). பி.இ. படித்து விட்டு நாகர்கோவிலில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வினோதினி நாகர்கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் வினோதினி வீடு திரும்பவில்லை.
இதனால் பெற்றோர் வினோதினியை பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் வினோதினி கிடைக்கவில்லை. இது குறித்து கிருஷ்ணன் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளச்சல் கடியப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் கில்லஸ்பாபு (48). இவர் மனைவியை பிரிந்து மகன் பவினுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த கில்லஸ்பாபு திடீரென மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.
ஆனால் கில்லஸ்பாபு கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது மகன் பவின் குளச்சல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன் ஜோஸ்லின், ஜார்ஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான கில்லஸ் பாபுவை தேடி வருகிறார்கள்.