பிளஸ்-2 மாணவி மாயம்

ஈரோடு சாஸ்திரி நகரை சேர்ந்த பிளஸ்-௨ மாணவி காலை பள்ளிக்கு செல்வதாக கிளம்பி சென்றவர் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை.இதனையடுத்து மாணவியின் பெற்றோர் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.
பிளஸ்-2 மாணவி மாயம்
Published on

ஈரோடு:

ஈரோடு சாஸ்தி நகர் மெயின் வீதியை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி சரோஜா. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இவர்களது மகள் பவித்ரா (17) ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று காலை பள்ளிக்கு செல்வதாக கிளம்பி சென்றவர் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும், அவரது நண்பர்களிடம் விசாரித்த போது மாணவி பவித்ரா பள்ளிக்கு வரவில்லை என்று கூறினர். இதனால் பெற்றோர் உறவினர்களின் வீடுகளில் தேடியும், விசாரித்த போது எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து மாணவியின் பெற்றோர் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com