search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "life imprisonment"

    காதலை ஏற்க மறுத்த பிளஸ்-2 மாணவியை கொடூரமாக கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    திருவள்ளூர்:

    மணலிபுதுநகரைச் சேர்ந்தவர் அனுபாரதி (வயது17). தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இவரது வீட்டின் அருகே தூத்துக்குடி மாவட்டம் ஏரலைச் சேர்ந்த ஜெயராமன் தங்கி இருந்தார். அவர் அனுபாரதியை ஒரு தலையாக காதலித்தார்.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் காதலை ஏற்க மறுத்த அனுபாரதியை கொடூரமாக குத்தி ஜெயராமன் கொலை செய்தார். இந்த வழக்கு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    இன்று காலை நீதிபதி பரணிதரன் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

    அப்போது மாணவியை கொலை செய்த ஜெயராமனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தனலட்சுமி ஆஜர் ஆனார். #tamilnews
    கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி நெஞ்சு வலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    கோவை:

    மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் ரவி(வயது 56). திருப்பூர் ரூரல் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

    இதையடுத்து கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ரவி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று மாலை சிறையில் இருந்த ரவிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே சிறை ஊழியர்கள் அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிறிது நேரத்தில் அவர் இறந்தார். 

    இது குறித்த புகாரின்பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூரில் தொழிலாளியை கொலை செய்த வாலிபருக்கு திருப்பத்தூர் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரில் உள்ள ஆதிசக்திநகரை சேர்ந்தவர் சக்தி, தச்சு தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஜெயக்குமார் (வயது 30). இவர்கள் 2 பேரின் குடும்பத்தினர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. அதனால் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசி கொள்ளாமல் இருந்தனர்.

    ஆனால் ஜெயக்குமாரின் மனைவி கனிமொழி மட்டும் அவரது வீட்டிற்கு தெரியாமல் சக்தியின் மனைவி விஜயாவிடம் பேசி வந்தார். இந்த தகவல் ஜெயக்குமாரின் குடும்பத்தினருக்கு தெரிந்தது. இதன் காரணமாக ஜெயக்குமாருக்கும், கனிமொழிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது.

    மேலும் சக்தி குடும்பத்தினர் சொல்லி கொடுத்துதான் தனது மனைவி தன்னுடன் சண்டை போடுகிறாள் என ஜெயக்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஜெயக்குமார், அவரது தாயார் பத்மினி, தம்பி உதயகுமார் ஆகியோர் கடந்த 15.10.16 அன்று சக்தியிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    இதில் ஆத்திரமடைந்த உதயகுமார் சக்தியை கையால் தாக்கினார். ஜெயக்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சக்தியின் வயிற்றில் குத்தினார். இதில் சக்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு திருப்பத்தூரில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது.

    நேற்று வழக்கை நீதிபதி இந்திராணி விசாரித்து, ஜெயக்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். உதயகுமார், பத்மினி ஆகிய 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
    கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கில் நேற்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சாமியார் ராம்பாலுக்கு இன்று மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #GodmanRampal #Rampallifesentence
    சண்டிகர்:

    அரியானா மாநிலம் ரோதக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்பால் சிங் ஜடின். ஐ.டி.ஐ. டிப்ளமோ பட்டதாரியான இவர் அரியானா மாநில அரசில் நீர்ப்பாசனத்துறை இளநிலை என்ஜினீயராக பணியாற்றினார்.
     
    திருமணமாகி மனைவி 2 மகன், 2 மகள்கள் உள்ள நிலையில் திடீர் என்று ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு சாமியாராக மாறினார். அரியானாவில் கரோதா கிராமத்தில் ஆசிரமம் தொடங்கினார். பின்னர் அரியானா முழுவதும் ஆசிரமங்கள் தொடங்கி ஆன்மீக சேவையாற்றினார்.

    ஆன்மிகம் தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டும் வகையில் இவர் பேசியதால் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். ஒருவர் காயம் அடைந்தார். இதையடுத்து சாமியார் மீது கொலை, கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டது. ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் புகார் கூறப்பட்டது.

    இதையடுத்து, ராம்பால் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவரை கைது செய்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் 5 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை பலியாகினர்.

    ஹிசார் மாவட்ட கோர்ட்டில் அவர் மீதான பல்வேறு வழக்குகள் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் 2 வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்டார். கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கில் அவருக்கு ஹிசார் கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு கூறியது.



    இந்நிலையில், மேலும் ஒரு கொலை வழக்கில் ராம்பால் உள்பட 13 பேருக்கு ஹிசார் கோர்ட் இன்று ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டில் இவரது ஆசிரமத்துக்குள் ஒரு பெண் பக்தர் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில் ராம்பால் மற்றும் 13 பேருக்கு எதிராக தொடரப்பட்ட கொலை வழக்கில் ராம்பால் உள்பட 14 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து ஹிசார் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி டி.ஆர்.சாலியா இன்று உத்தரவிட்டுள்ளார். #GodmanRampal #Rampallifesentence  
    பால் வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் தங்கசாலை வீதியை சேர்ந்தவர் செல்வராஜ். விசைத்தறிக்கூடம் வைத்து நடத்தி வருகிறார். இவரது 2-வது மகன் ராமன் (வயது 23). தந்தை நடத்தி வந்த தறித்தொழிலை ராமன் கவனித்து வந்தார்.

    இவர் வெண்ணந்தூரை சேர்ந்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்தார். ஆனால் அந்த பெண் வெண்ணந்தூர் அருகே உள்ள நாச்சிப்பட்டி செட்டிக்காட்டை சேர்ந்த பால் வியாபாரி சக்திவேலை (27) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராமன், கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந் தேதி இரவு வெண்ணந்தூர் துளக்கன்காட்டில் தனியார் விவசாய நிலத்தில் சக்திவேலின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

    இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அப்போதைய வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமன் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர். இந்த கொலை வழக்கு ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து விசாரணைக்காக நாமக்கல் மகளிர் கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுசீலா ஆஜராகி வாதாடினார்.

    சக்திவேல் கொலை வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராமனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி இளங்கோ தீர்ப்பு கூறினார். அபராதத்தை செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    குற்றம் சாட்டப்பட்ட 17 வயது சிறுவனை நீதிபதி விடுதலை செய்தார். இதையடுத்து ராமனை கோவை சிறைக்கு அழைத்து செல்ல போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
    நிலத்தகராறில் ஏற்பட்ட மோதலில் விவசாயியை வெட்டிக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை அளித்து கோபி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    கோபி:

    கோபி அருகே உள்ள செம்மாம்பாளையம் வெள்ளியங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. விவசாயி.

    இவருக்கும் அவரது உறவினரான அவினாசி தாலுகா குட்டகத்தை சேர்ந்த சதீஸ்குமாருக்கும் (வயது 26) இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.

    கடந்த 20-11-2017 அன்று தனது தோட்டத்து வீட்டில் பழனிச்சாமி தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது சதீஸ்குமார் அங்கு வந்தார்.

    அவர் பழனிச்சாமியிடம் நிலம் தொடர்பான தகராறில் ஈடுபட்டார். பின்னர் அரிவாளால் பழனிச்சாமியை வெட்டினார். தடுக்க வந்த பழனிச்சாமியின் மகள் துரைசாமிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

    இதில் பழனிச்சாமி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த கொலை தொடர்பாக வரப்பாளையம் போலீசார் சதீஸ்குமாரை கைது செய்த கோபி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கில் இன்று நீதிபதி மணி தீர்ப்பு கூறினார். பழனிச்சாமியை கொலை செய்த வழக்கில் சதீஸ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தனகோட்டி ராம் ஆஜராகி வாதாடினார். #tamilnews
    பஞ்சாப் மாநிலத்தில் புனித நூல்களை அவமதித்தால் ஆயுள் தண்டனை வழங்கும் சட்ட திருத்தத்துக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. #Sacrilege #Punjab
    சண்டிகார்:

    பஞ்சாப் மாநிலத்தில் புனித நூல்களை அவமதித்தால் ஆயுள் தண்டனை வழங்கும் சட்ட திருத்தத்துக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    அதன்படி புனித நூல்களான பகவத்கீதை, குரான், பைபிள், குரு கிரந்த் சாகிப் ஆகியவற்றை மத உணர்வுகளை காயப்படுத்தும் நோக்கத்துடன் கிழித்தாலோ, சேதப்படுத்தினோலோ அல்லது அவமதிப்பு செய்தாலோ அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

    இதற்காக இந்திய தண்டனை சட்டத்தில் புதிதாக 295 ஏஏ பிரிவு சேர்க்கப்படுகிறது.

    முதல்-மந்திரி அம்ரீந்தர் சிங் தலைமையில் நடந்த மாநில மந்திரி சபை கூட்டத்தில் இந்த சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.



    பஞ்சாபில் புனித நூல்கள் அவமதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதை தடுக்கவும், சமூக நல்லிணக்கத்தை தொடர்ந்து பேணவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். #Sacrilege #Punjab
    வேலூரில் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்த தங்கையின் கணவரை எரித்துக்கொன்ற தொழிலாளிக்கு வேலூர் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் வசந்தபுரத்தை சேர்ந்தவர் ஜெயகரன் என்கிற ஐசக் (வயது 27). கூலித்தொழிலாளி. இவருடைய தங்கை ஆஷாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சிலநாட்களிலேயே சங்கர் தினமும் மது குடித்துவிட்டு வந்துள்ளார்.

    அப்போது தனது மனைவி ஆஷாவை அவருடைய தாய்வீட்டிற்கு சென்று பணம் வாங்கிவரும்படி கூறி தொந்தரவு செய்து வந்தார். இதனால் ஆஷா அடிக்கடி தனது தாய்வீட்டிற்கு சென்றுள்ளார். பெற்றோர் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். பணம் கேட்டு தங்கையை தொந்தரவு செய்ததால் சங்கர்மீது, ஜெயகரனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    இதனால் சங்கரை கொலைசெய்ய ஜெயகரன் திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த 24.2.2017 அன்று தனது தங்கை கணவரை கொலைசெய்ய அங்குள்ள பிள்ளையார் கோவில் அருகில் ஜெயகரன் மறைந்திருந்தார். அப்போது அந்தவழியாக வந்த சங்கர் மீது ஜெயகரன் பெட்ரோல் பாக்கெட்டை வீசி தீ வைத்தார்.

    இதில் உடல்கருகிய சங்கர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயகரன் என்கிற ஐசக்கை கைது செய்தனர்.

    மேலும் இந்த வழக்கு விசாரணை வேலூர் கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசு வழக்கறிஞர் அ.கோ.அண்ணாமலை இந்த வழக்கில் ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி குணசேகரன் நேற்று தீர்ப்புகூறினார்.

    அதில் ஜெயகரன் என்கிற ஐசக்கிற்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். அதைத்தொடர்ந்து ஜெயகரன் வேலூர் மத்தியசிறையில் அடைக்கப்பட்டார்.
    கேரளாவில் கடந்த 2008-ம் ஆண்டு பா.ஜ.க. கட்சியில் இணைந்ததற்காக ஆட்டோ ஓட்டுனர் கொல்லப்பட்ட வழக்கில், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #Kerala
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் தலச்சேரி பகுதியில் ஆட்டோ ஓட்டுனராக இருந்தவர் சித்தாரிபரம்பில் மகேஷ். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்துவந்தார். இதையடுத்து சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இவர் 2008-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் இணைந்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அவர் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். 2008-ம் ஆண்டு நடைபெற்ற இந்த கொலை வழக்கு தலச்சேரி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 11 பேரை குற்றவாளிகள் என ஏற்கனவே நீதிமன்றம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தலச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. #Kerala
    கெலமங்கலம் அருகே காதல் மனைவியை கொலை செய்த கட்டிட மேஸ்திரிக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தை அடுத்த பி.அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா என்கிற சிவப்பா (வயது 30). கட்டிட மேஸ்திரியான இவரும், அதே பகுதியை சேர்ந்த சியாமளா என்கிற சாரதா(22) என்பவரும் காதலித்து கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். சிவாவிற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் மனைவியை அடித்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 9.11.2014-ம் ஆண்டு குடிபோதையில் வந்த சிவா மனைவி சியாமளாவிடம் தகராறு செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த சிவா, வீட்டில் இருந்த ஊதுகுழலால், தனது மனைவி சியாமளாவின் பின்பக்க தலையில் ஓங்கி அடித்தார். இதில் மயங்கிய அவரை மின்விசிறியில் தூக்கில் தொங்க விட்டு கொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    இந்த கொலை வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அன்புசெல்வி நேற்று தீர்ப்பு கூறினார். அதன்படி மனைவியை கொலை செய்த சிவாவிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இதைத் தொடர்ந்து சிவாவை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
    சோழவரத்தில் காதலிக்க மறுத்த பெண்ணை கொன்ற வாலிபருக்கு ஆயுள்தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    திருவள்ளூர்:

    சோழவரம் சோலையம்மன் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கற்பகம். இவர்களது மகள் லதா (வயது 17).

    இவர்களது வீட்டுக்கு புதுச்சேரி தன்வந்திரி நகரை சேர்ந்த எழிலரசன் (26) அடிக்கடி வந்து சென்றார். அப்போது லதாவை அவர் ஒருதலையாக காதலித்து வந்தார்.

    கடந்த 7.4.2011 அன்று, ஆறுமுகம் மனைவியுடன் ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தார். வீட்டில் லதாவும், அவரது தங்கையும் இருந்தனர்.

    அப்போது வீட்டுக்கு வந்த எழிலரசன், லதாவிடம், நான் உன்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறினார். லதா மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த எழிலரசன், லதாவை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

    சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து எழிலரசனை கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி பரணிதரன் தீர்ப்பு அளித்தார். அதில், கொலை, ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் எழிலரசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

    மேலும் அபராதத் தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கூறினார். இதைத்தொடர்ந்து சோழவரம் போலீசார் எழிலரசனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். #tamilnews
    ×