search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "insult"

    • எடப்பாடி பழனிச்சாமி போஸ்டர் அவமதிப்பால் பரபரப்பு ஏற்பட்டது
    • கொட்டப்பட்டு பகுதியில் நடந்தது

    திருச்சி:

    எடப்பாடி பழனிச்சாமி போஸ்டர் கிழிக்கப்பட்டு, படத்திற்கு சாணி அடிக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு

    அ.தி.மு.க.வில் பதவிச்சண்டை அதிகரித்து ஒற்றைத்தலைமை என்ற கோரிக்கை எழுந்தநிலையில், அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிச்சாமி கைஓங்கியதுடன் சென்னையில் கடந்த ஜுன் 23ம்தேதி நடந்த அ.தி.மு.க. பொ துக்குழுகூட்டத்துடனேயே ஒருங்கிணைப்பாளர் - இணைஒருங்கிணைப்பாளர் பதவி காலியானதாக எடப்பாடி ஆதரவு நிர்வாகிகளால் அறிவிக்கப்பட்டது.

    மேலும் கடந்த 11-ந் தேதி நீதிமன்ற தீர்ப்பு மற்றும் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகளின் ஆதரவுடன் அ.தி.மு.கவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்யப்பட்டார். இதனிடையே அ.தி.மு.க. தலைமைக்கழகத்திற்குள் ஓபிஎஸ் பூட்டை உடைத்து நுழைந்தநிலையில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டு கலவரமும் நிகழ்ந்ததுடன், தலைமைக்கழகம் வருவாய்துறையினரால் சீல்வைக்கப்பட்டது.

    இந்நிலையில் இருதரப்பினருக்குமிடையே ஒற்றைதலைமைகுறித்து இரு தரப்பினரும் அறிக்கையும், பேட்டியும் கொடுத்துக்கொண்டிருக்கும்வேளையில் திருச்சியில் கொட்டப்பட்டு பகுதியில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வுசெய்யப்பட்டதற்காக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களில் எடப்பாடி பழனிச்சாமி படம் கிழிக்கப்பட்டும், சாணி அடிக்கப்பட்டு காணப்பட்டது. இது திருச்சியில் அரசியல கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜெயலலிதா சிலையை பழைய வேஷ்டியால் மூடி வைக்கப்பட்டதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். #dinakaran #jayalalithaidol #admkheadoffice

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா சிலை ராயப்பேட்டையில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி திறந்து வைக்கப்பட்டது.

    அந்த சிலை ஜெயலலிதா முகபாவனையில் இல்லாமல் இருந்ததால் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனால் ஜெயலலிதாவுக்கு புதிய சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டு சிலை வடிவமைப்பு பணி நடந்தது.

    ஜெயலலிதாவின் புதிய சிலையை நேற்று அ.தி.மு.க. தலைமை கழகத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.


    இந்த நிலையில் ஜெயலலிதா சிலையை பழைய வேஷ்டியால் மூடி வைக்கப்பட்டு இருந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

    ஜெயலலிதா சிலை மீது வேஷ்டி போட்டு மறைக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வெளியானது.

    இதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    முன்பு அவசர கதியில் திறக்கப்பட்ட அம்மாவின் சிலைக்கு மாற்றாக புதிய சிலையை திறந்த நிகழ்வில் அம்மாவை அவமதிக்கும் விதத்தில் அச்சிலையை பழைய துணியால் மூடி வைத்து பின்பு திறந்துள்ளனர்.

    இது அம்மாவின் லட்சோப லட்ச தொண்டர்களின் மனதை வேதனையிலும் பெரும் கொதிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. அம்மாவுக்கு உரிய மரியாதை எப்போழுதுமே செலுத்த நினைக்காத பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் கூட்டத்திற்கு அம்மாவின் உண்மைத் தொண்டர்களின் சார்பாக எனது கடும் கண் டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #dinakaran #jayalalithaidol #admkheadoffice

    பஞ்சாப் மாநிலத்தில் புனித நூல்களை அவமதித்தால் ஆயுள் தண்டனை வழங்கும் சட்ட திருத்தத்துக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. #Sacrilege #Punjab
    சண்டிகார்:

    பஞ்சாப் மாநிலத்தில் புனித நூல்களை அவமதித்தால் ஆயுள் தண்டனை வழங்கும் சட்ட திருத்தத்துக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    அதன்படி புனித நூல்களான பகவத்கீதை, குரான், பைபிள், குரு கிரந்த் சாகிப் ஆகியவற்றை மத உணர்வுகளை காயப்படுத்தும் நோக்கத்துடன் கிழித்தாலோ, சேதப்படுத்தினோலோ அல்லது அவமதிப்பு செய்தாலோ அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

    இதற்காக இந்திய தண்டனை சட்டத்தில் புதிதாக 295 ஏஏ பிரிவு சேர்க்கப்படுகிறது.

    முதல்-மந்திரி அம்ரீந்தர் சிங் தலைமையில் நடந்த மாநில மந்திரி சபை கூட்டத்தில் இந்த சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.



    பஞ்சாபில் புனித நூல்கள் அவமதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதை தடுக்கவும், சமூக நல்லிணக்கத்தை தொடர்ந்து பேணவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். #Sacrilege #Punjab
    ×