search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lawyers"

    வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கியுள்ள வெளிநாட்டு இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், சோனியா காந்தி தொடர்பான கேள்விகளை தவிர்க்க முயற்சிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #ED #ChristianMichel #SoniaGandhi #augustawestland
    புதுடெல்லி:

    வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழலில் துபாயில் கைதான வெளிநாட்டு இடைத்தரகரின் விசாரணை காவலை மேலும் 7 நாட்களுக்கு நீட்டித்து சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று அனுமதித்துள்ளது.

    முன்னதாக, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கிறிஸ்டியன் மைக்கேலை ஆஜர்படுத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை மேலும் சில நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாக நீதிபதியிடம் விளக்கம் அளித்தனர்.

    அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு இடையே வழக்கறிஞரை சந்திக்கும் அனுமதியை பெற்றுள்ள கிறிஸ்டியன் மைக்கேல், இந்த சலுகையை தவறாக பயன்படுத்துவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். குறிப்பாக, சோனியா காந்தி தொடர்பான அதிகாரிகளின் கேள்விகளை தவிர்ப்பது எப்படி? என்று துண்டு சீட்டு மூலம் தனது வழக்கறிஞரிடம் கிறிஸ்டியன் மைக்கேல் ஆலோசனை கேட்பதாகவும் அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

    இந்த தகவல் ஊடகங்கள் மூலம் இன்று வெளியாக தொடங்கியதும், வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழலில் இத்தாலி பெண்ணான சோனியா காந்தி மற்றும் அவரது மகனான ராகுல் காந்தி ஆகியோர் வசமாக சிக்கியுள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் முந்தைய காங்கிரஸ் அரசு செய்துகொண்ட சமரசத்தை இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலின் செயல்பாடுகள் விளக்குவதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். #ED #ChristianMichel #SoniaGandhi #augustawestland
    டெல்லியை சேர்ந்த இளம்பெண்ணை கும்பகோணத்தில் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தினேஷ், அன்பரசு, வசந்த், புருசோத்தமன் ஆகிய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். #kumbakonamdelhigirlmolestation

    கும்பகோணம்:

    டெல்லி பெண்ணை 4 வாலிபர்களும் மிக கொடூரமாக இரக்கமற்ற முறையில் பலாத்காரம் செய்து இருக்கிறார்கள். வங்கி உயர் அதிகாரி பயிற்சிக்காக டெல்லியில் இருந்து வந்த அந்த பெண் எழும்பூரில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றார்.

    சென்னையில் இருந்து புறப்பட்டதும் ஏற்கனவே கும்பகோணத்தில் தங்கி பயிற்சி பெற்றுவரும் சக தோழிகளிடம் தான் வரும் விபரத்தை சொல்லி டூவீலரில் கும்பகோணம் ரெயில் நிலையத்துக்கு வரச்சொல்லி இருக்கிறார்.

    இரவு 10.20 மணிக்கு கும்பகோணத்தில் இறங்கிய போது மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் அந்த பெண்களால் ரெயில் நிலையத்துக்கு செல்ல முடிய வில்லை. அவர்களிடம் ஓட்டல் முகவரியை வாங்கி ஆட்டோவில் செல்ல முடிவு செய்துள்ளார். அந்த நேரத்தில் ரெயில் நிலையத்தில் ஆட்டோக்கள் இல்லை. சிறிது தூரத்தில் ஒரு ஆட்டோ பயணிகளை இறக்கிவிட்டது.

    அந்த ஆட்டோ டிரைவரிடம் சென்று கேட்டுள்ளார். அவர் அந்த பெண்ணை ஏற்றிச் சென்றுள்ளார். அந்த பெண் செல்ல வேண்டிய ஓட்டல் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 1½கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.

    சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாகியும் ஆட்டோ ஓட்டலை சென்றடைய வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண் கத்தி இருக்கிறார்.

    உடனே அந்த ஆட்டோ டிரைவர் செட்டிப்பள்ளம் பைபாஸ் ரோட்டில் இறக்கி விட்டுவிட்டு சென்று விட்டார். நள்ளிரவில் நடு ரோட்டில் தவித்த அந்த பெண் டிராலிபேக்கை இழுத்தபடி நடந்து சென்றுள்ளார்.


    தன்னந்தனியாக வெளி மாநிலத்தை சேர்ந்த பெண் வந்ததைப் பார்த்ததும் தினேஷ் அருகில் சென்று அந்த பெண்ணிடம் ஆங்கிலத்தில் பேசி எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளார். அவர் ஓட்டல் விலாசத்தை கூறியதும் நாங்கள் கொண்டுவிடுகிறோம் என்று கூறி இருக்கிறான். அதை நம்பி அவரது மோட்டார் சைக்கிளில் ஏறி இருக்கிறார். அதே பைக்கில் வசந்தும் ஏறிக்கொண்டான்.

    நம்பி சென்ற இளைஞர்கள் இப்படி நாசம் செய்வார்கள் என்று அந்த பெண் நினைக்கவில்லை. இவர்கள் 4 பேரும் படித்த வேலை இல்லாத இளைஞர்கள். தினேஷ் மட்டும் வட்டிக்கு பணம் கொடுக்கும் வேலை செய்கிறார்.

    அன்று இரவு ஒரு குவார்ட்டர் பாட்டில் மதுவை வாங்கி 4 பேரும் குடித்து விட்டு, கஞ்சா புகை பிடித்து இருக்கிறார்கள். போதை தலைக்கேறி இருந்த நேரத்தில் தான் டெல்லி பெண் அவர்களிடம் சிக்கி இருக்கிறாள்.

    ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு பகுதிக்குள் கொண்டு சென்று குண்டும் குழியுமாக கிடந்த ரோட்டில் வைத்து அந்த பெண்ணை 4 பேரும் சித்ரவதை செய்து இருக்கிறார்கள். ஏற்கனவே மாத விடாய் வலியால் தவித்த அந்த பெண் நாலு மிருகங்களிடமும் கதறி இருக்கிறார். ஆனால் அவர்களுக்கு இரக்கம் வரவில்லை.

    இரவு 12.15 மணி முதல் 2.15 மணி வரை குரூரமாக நடந்து இருக்கிறார்கள். உடலில் ரத்தம் வழிய துடித்த அந்த பெண்ணை ஆடைகளை சரி செய்ய சொல்லி அந்த வழியாக சென்ற ஒரு ஆட்டோவில் ஏற்றிவிட்டுள்ளார்கள்.

    அப்போது தினேஷ் ஒரு மொபைல் எண்ணை ஆட்டோ டிரைவரிடம் சொல்லி அந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ள சொல்லி இருக்கிறான்.

    அந்த எண்ணை அந்த பெண் மனப்பாடம் செய்து கொண்டார். செல்போனில் தொடர்புகொண்ட அந்த நபர் வந்ததும் ஆட்டோவை பின்தொடர்ந்து சென்று ஓட்டலில் இறக்கி விட்டுள்ளார்கள்.

    அப்போது நடந்த விபரங்களை வெளியே சொன்னால் இங்கு வேலை பார்க்க முடியாது. தொலைத்து விடுவோம் என்று மிரட்டி இருக்கிறார்கள்.

    நள்ளிரவில் ரத்த காயங்களுடன் வந்து நின்ற தோழியை பார்த்து நடந்த விபரங்களை கேட்டதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக டெல்லியில் உள்ள வங்கி உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உடனடியாக தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று அந்த பெண்ணிடம் விசாரித்து இருக்கிறார்கள்.

    இதற்கிடையில் நடந்த விபரங்களை கேள்விப்பட்டு டெல்லியில் இருந்து அவரது தந்தை கும்பகோணத்துக்கு விரைந்து வந்தார். நடந்த விபரங்களை சொல்லி தந்தையிடம் கதறி அழுதார்.

    அந்த பெண் மனதில் பதிந்து வைத்திருந்த செல்போன் நம்பரை வைத்துதான் போலீசார் துப்புதுலக்கி 4 பேரையும் கைது செய்து இருக்கிறார்கள்.

    கைது செய்யப்பட்டவர்களில் புருசோத்தமன், அன்பரசு ஆகியோருக்கு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    பரிசோதனைக்குப் பிறகு இருவரும் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    முதலில் அந்த பெண்ணை ஏற்றி சென்ற ஆட்டோ டிரைவர் யார்? அவருக்கும் இந்த வாலிபர்களுக்கும் தொடர்பு உண்டா? அவர் சுற்றி சுற்றி சென்று நடு வழியில் இறக்கிவிட்டது ஏன்? என்பது தெரியவில்லை. எனவே அவரை தேடி வருகிறார்கள்.

    பாலியல் பலாத்காரத்துக்கு மூலகாரணமாக விளங்கும் அந்த ஆட்டோ டிரைவரை இதில் குற்றவாளியாக அறிவித்து அவரை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆட்டோ டிரைவர் இளம்பெண்ணை அழைத்துச் சென்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் கும்பகோணத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று மாதர் சங்கத்தினர் போராடி வருகிறார்கள்.

    குற்றவாளிகள் 4 பேருக்கும் ஆதரவாக ஆஜராகப் போவதில்லை என்று வக்கீல்களும் முடிவு செய்து இருக்கிறார்கள். #kumbakonamdelhigirlmolestation

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் தடுக்கப்பட்டு வரும் நிலையில், 2 வழக்கறிஞர்கள் உட்பட 4 பெண்கள் சபரிமலைக்கு செல்ல போலீஸ் பாதுகாப்பு வேண்டி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #KeralaHighCourt #SabarimalaTemple
    திருவனந்தபுரம்:

    சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து இந்து மக்கள் அமைப்புகளும், பாஜகவும் போர்க்கொடி தூக்கினர். சபரிமலைக்குள் செல்ல முயலும் பெண்களை வழிமறைத்து போராட்டங்கள் நடத்தி திருப்பி அனுப்பினர்.

    மேலும், போராட்டக்காரர்கள் மற்றும் பக்தர்களின் வலியுறுத்தலால் தேவசம் போர்டு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய சம்மதித்தது. மேலும், பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்கள் நவம்பர் 13-ம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்து இருந்தது.



    இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என 2 வழக்கறிஞர்கள் உட்பட 4 பெண்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, கோவிலுக்குள் செல்ல பாதுகாப்பு அளிக்கும்படி அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். #KeralaHighCourt #SabarimalaTemple
    அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த சிறப்பு வார்டு உள்ளிட்ட பகுதிகளை ஆணைய வக்கீல்கள் நேற்று ஆய்வு செய்தனர். அதேபோன்று ஜெ.தீபாவும் பார்வையிட்டார். #Jayalalithaa #ApolloHospital
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா தனது வாக்குமூலத்தை வக்கீல்கள் மூலம் ஆணையத்தில் ஏற்கனவே தாக்கல் செய்துள்ளார்.

    சசிகலாவின் உறவினர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவர்கள், செவிலியர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள் என 75-க்கும் மேற்பட்டவர்களிடம் ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ஆணையத்தின் வக்கீல்கள் எஸ்.பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த சிறப்பு வார்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர்.

    அந்த மனுவில், ‘ஆணையத்தில் ஏற்கனவே ஆஜராகி சாட்சியம் அளித்துள்ள பெரும்பாலானோர், அப்பல்லோ மருத்துவமனையில் நடந்த நிகழ்வுகளையும், அங்குள்ள இயற்கை அமைப்புகளையும் ஒட்டியே சாட்சியம் அளித்துள்ளனர். எனவே, அப்பல்லோ மருத்துவமனையின் இயற்கை அமைப்பு என்ன?, உண்மை தன்மை என்ன? என்பதை ஆணையத்தின் தரப்பில் அறிந்து கொள்வது அவசியம்’ என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி, ஆணையத்தின் வக்கீல்கள் அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வு நடத்தவும், அப்போது சசிகலா தரப்பு வக்கீல்கள் உடன் செல்ல அனுமதி அளித்தும் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அப்பல்லோ மருத்துவமனையின் 2-வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு அறை எண்.2008, அங்குள்ள செவிலியர் அறை, கண்ணாடி அறை, அங்குள்ள நடைபாதை, ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இருந்த இடம், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை மேற்பார்வையிட அமைக்கப்பட்ட அரசு மருத்துவர்கள் குழு, அரசு செயலாளர்கள் போன்றவர்கள் இருந்த இடம், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களுக்கு அவ்வப்போது மருத்துவர்கள் விளக்கிக்கூறிய இடம், சசிகலா, அவரது குடும்ப உறுப்பினர்கள் தங்கி இருந்த அறை, ஜெயலலிதாவுக்கு உணவு தயாரித்து வழங்கப்பட்ட சமையல் அறை ஆகியவற்றை ஆணையத்தின் வக்கீல்கள் நேற்று இரவு 7 மணி முதல் 7.45 மணி வரை ¾ மணி நேரம் ஆய்வு செய்தனர்.

    ஆணைய வக்கீல்களுடன் சசிகலா தரப்பு வக்கீல்கள் ராஜா செந்தூர்பாண்டியன், அரவிந்தன், ஆணையத்தின் செயலாளர் கோமளா ஆகியோர் உடன் சென்றனர்.



    இந்த ஆய்வின் போது தன்னையும், தனது தரப்பு வக்கீலையும் அனுமதிக்க வேண்டும் என்று ஜெ.தீபா ஆணையத்தில் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த சிறப்பு வார்டு உள்ளிட்ட இடங்களை ஆணைய வக்கீல்கள் ஆய்வு செய்த பின்பு ஜெ.தீபா, அவரது வக்கீல் தொண்டன் சுப்பிரமணி ஆகியோர் பார்வையிட நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

    அதன்படி, ஜெ.தீபா தனது வக்கீலுடன் நேற்று இரவு 8.15 மணி முதல் 8.40 மணி வரை ஆணைய வக்கீல்கள் ஆய்வு செய்த அனைத்து இடங்களையும் பார்வையிட்டார். ஜெ.தீபா தனது கணவர் மாதவனுடன் மருத்துவமனைக்கு வந்தார். அவரது கணவரை மருத்துவமனைக்குள் செல்ல மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதைத்தொடர்ந்து ஜெ.தீபா மருத்துவமனையில் இருந்து வெளியே வரும்வரை மாதவன் மருத்துவமனை முன்பு காத்திருந்தார்.

    ஆய்வை முடித்து விட்டு வெளியே வந்த ஆணையத்தின் வக்கீல்கள், ‘ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த சிறப்பு வார்டு உள்ளிட்ட அனைத்து இடங்களையும் பார்வையிட்டோம். ஆய்வுக்கு மருத்துவமனை நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளித்தது. சாட்சிகளிடம் இனிவரும் காலங்களில் நடைபெறும் விசாரணைக்கு இந்த ஆய்வு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்’ என்றார்.

    சசிகலா தரப்பு வக்கீல்கள் கூறும்போது, ‘ஆய்வுக்கு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளித்தது. அப்பல்லோ மருத்துவமனை செவிலியர்கள், மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு எந்த அளவுக்கு உணர்வுபூர்வமாக சிகிச்சை அளித்தார்கள் என்பதை இங்கு வந்த பின்னர் தான் தெரிந்து கொண்டோம்’ என்றனர்.

    ஜெ.தீபா கூறும்போது, ‘எனது அத்தை ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறைகளை பார்வையிட்டேன். அவர் வெகு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அறையை தற்போது அறுவை சிகிச்சை கூடமாக (ஆபரேசன் தியேட்டர்) மாற்றி இருப்பதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மருத்துவமனை வழிகாட்டுதல்படி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதா? என்பதை பார்க்க வேண்டியது உள்ளது. இதில் பல்வேறு சர்ச்சைகள் இருப்பதால் வழக்கு ரீதியாக அதை சந்திக்க உள்ளேன்’ என்றார்.  #Jayalalithaa #ApolloHospital 
    சென்னையில் 11 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆஜராக மாட்டோம் என்று வக்கீல்கள் தெரிவித்து உள்ளனர். #ChennaiGirlHarassment #POCSOAct
    சென்னை:

    சென்னை அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையில், பிரபல அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தான் 11 வயது சிறுமியை கற்பழித்த கொடூர காட்சிகள் அரங்கேறியுள்ளது.

    11 வயது, 5 மாதங்கள் நிரம்பிய அந்த சிறுமி, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து, காமக்கொடூரர்களின் காமப்பசிக்கு பலியாகி இருக்கிறார்.

    நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அந்த சிறுமியின் தந்தை, சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இந்த சிறுமியின் மூத்த சகோதரி மராட்டிய மாநிலம் அவுரங்கபாத்தில், ஓட்டல் மேனேஜ்மெண்ட் சம்பந்தமான பட்டப்படிப்பு படித்து வருகிறார். பாதிக்கப்பட்ட சிறுமி சென்னை சேத்துப்பட்டில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த சிறுமிக்கு காது கேட்கும் திறன் குறைவாக உள்ளது. வெகுளித்தனமான அந்த சிறுமி யாரிடமும் அன்பாக பழகக்கூடிய சுபாவம் உள்ளவர்.



    அதை பயன்படுத்தி தான் 23 பேர் கொண்ட காமவெறியர்கள் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை ஒருவர் பின் ஒருவராக அந்த சிறுமியை தங்கள் இச்சைக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பணியாற்றும் தோட்டக்காரர் முதல், காவலாளி வரை அந்த சிறுமியை தங்கள் உல்லாசத்துக்கு விருந்து படைக்க வைத்துள்ளனர்.

    அந்த சிறுமியின் உடல் முழுவதும் சிறிய காயங்கள் உள்ளன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமியின் மூத்த சகோதரி சென்னைக்கு வந்திருக்கிறார். சிறுமியின் கழுத்தில் உள்ள காயங்களை பார்த்து விவரம் கேட்டுள்ளார். அதற்கு பிறகுதான் கதறி அழுதபடி தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி சிறுமி விவரமாக கூறியிருக் கிறார். அதன்பிறகு சிறுமியின் பெற்றோருக்கு இந்த வி‌ஷயம் தெரிய வர அவர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.



    இந்த கொடூர சம்பவம் குறித்து அயானவரம் உதவி போலீஸ் கமி‌ஷனர் சிராஜூதீனை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளனர். இந்த புகார் மனு பற்றி தெரியவந்ததும் கடுமையான நடவடிக்கை எடுக்க போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். கூடுதல் கமி‌ஷனர் சாரங்கன், இணை கமி‌ஷனர் அன்பு, துணை கமி‌ஷனர் ராஜேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில், அயனாவரம் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் விஜயசந்திரிகா, வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். ‘போக்சோ’ சட்டப்பிரிவில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    23 பேர் கொண்ட காமவெறியாட்ட கும்பல், சிறுமியை சீரழித்துள்ளனர். அவர்களில் முதல் கட்டமாக 6 பேர் கைதானார்கள். அடுத்தகட்டமாக மேலும் 12 பேரை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட 18 பேரில், 17 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

    1. முருகே‌ஷ் (வயது 54) - பாளையக்கார தெரு அயனாவரம். 2. பரமசிவம் (60) - அயனாவரம் சி.கே. தெருவைச் சேர்ந்தவர். 3. ரவிக் குமார் (66) - பங்காரு தெரு அயனாவரம். 4. ஜெய்கணே‌ஷ் (23) - வசந்தா கார்டன் முதல்தெரு, அயனாவரம். இவர் சிறுமி வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் பிளம்பராக உள்ளார். 5. பாபு (36) - எஸ்.வி.எம்.நகர், ஓட்டேரி- லிப்ட் இயக்கும் தொழிலாளி. 6. பழனி (40) - காந்திநகர், புளியந்தோப்பு, அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி. 7. தீனதயாளன் (50) - மேட்டுத்தெரு, அயனாவரம், லிப்ட் இயக்கும் ஊழியர். 8. அபிஷேக் (23) - பழனியப்பா 2-வது தெரு, அயனாவரம், அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி. 9. சுகுமாரன் (60) - பாலாஜி நகர், 4-வது மெயின்ரோடு, கதின்மேடு, அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி. 10. இறால் பிரகா‌ஷ் (58) - நீல்ஸ் கார்டன், பெரம்பூர், அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி. 11. ராஜா (32) - அம்பேத்கர் நகர், அயனாவரம், அடுக்குமாடி குடியிருப்பில் பிளம்பராக வேலை செய்பவர். 12. சூர்யா (23) - ராஜாதோட்டம் 2-வது தெரு, புளியந்தோப்பு, அடுக்குமாடி குடியிருப்பில் பிளம்பராக உள்ளார். 13. சுரே‌ஷ் (32) - கன்னியப்பன் தெரு, கொளத்தூர், பிளம்பராக வேலை செய்பவர்.

    14. ஜெயராமன் (26) - நரசிம்மன் நகர், 3-வது தெரு கொடுங்கையூர், எலக்ட்ரீசியனாக உள்ளார். 15. ராஜசேகர் (40) - வசந்தா கார்டன் 2-வது தெரு, அயனாவரம், வீட்டு வேலை செய்பவர். 16. குணசேகர் (55) - மதுரை பிள்ளைத்தெரு, அயனாவரம், தோட்ட வேலை செய்பவர். 17. உமாபதி (42) - எம்.கே.பி.நகர், காவலாளி வேலை செய்பவர். மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். ஒருவரை காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    கைதான 17 பேரில், 66 வயது நிரம்பிய லிப்ட் ஊழியர் ரவிக்குமார் தான், முதன் முதலாக சிறுமியிடம் பழகியிருக்கிறார். சிறுமி லிப்ட்டில் செல்லும்போது, ரவிக்குமாரிடம் அன்பாக பேசியிருக்கிறார். அவரது வெகுளித்தனத்தை பயன்படுத்தி ரவிக்குமார் கத்திமுனையில் மிரட்டி முதன் முதலாக சிறுமியை தனது காம இச்சைக்கு பணிய வைத்திருக்கிறார்.

    அதன்பிறகு, ரவிக்குமார் மூலமாக ஒவ்வொருவரின் காமஇச்சைக்கும் சிறுமி பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் சிறுமிக்கு போதை ஊசிபோட்டும், போதை மாத்திரை கொடுத்தும், ‘செக்ஸ்’ விளையாட்டில் ஈடுபட்டனர். சிறுமியிடம் உறவு கொள்வதை வீடியோ படம் எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. லிப்ட் ஊழியர் ரவிக்குமார், தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அவரைத்தொடர்ந்து கைதான மற்றவர்களும் சிறுமிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

    சிறுமியை சீரழித்தவர்கள் அனைவரும் போதைக்கு அடிமையானவர்கள் என்று தெரியவந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு மொட்டை மாடியிலும், ‘லிப்ட்’டுக்குள்ளும், வைத்து சிறுமியை கெடுத்திருக்கிறார்கள். சம்பவம் நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராவில் பதிவாகாத வகையில், மறைவான இடங்களில் வைத்து காமவெறியாட்டம் நடத்தியுள்ளனர்.

    கைதானவர்களில் 7 பேர் 50 வயதை தாண்டியவர்கள். பேரன் பேத்தி கண்டவர்கள் ஆவார்கள். ஈவு இரக்கம் இல்லாமல், இந்த மாபாதக செயலில் ஈடுபட்டுள்ளனர். முதலில் சிறுமியைக் கெடுத்த ரவிக்குமார் சிறுமியிடம் தாத்தா போல் பழகியுள்ளார். அந்த உரிமையில் தொட்டு கட்டிப்பிடித்து விளையாடிய ரவிக்குமார் நாளடைவில் தன் இச்சைக்கு இணங்க வைத்துவிட்டார்.

    சிறுமியின் வாக்குமூலம் மாஜிஸ்திரேட்டு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும், அவர்கள் மீது விரைவாக கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    சிறுமி கொடூரமாக கற்பழிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரை, நேற்று காலை 11.30 மணிக்கு சென்னை மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து வந்தனர்.

    மதியம் 1.15 மணிக்கு அந்த 17 பேரும் நீதிபதி மஞ்சுளா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

    அவர்கள் 17 பேரையும் வருகிற 31-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த நடைமுறை முடிவதற்கு மதியம் 3 மணி ஆகிவிட்டது. இதன்பின்னர் மதியம் 3.15 மணிக்கு 17 பேரையும் கோர்ட்டில் இருந்து சிறைக்கு கொண்டு செல்வதற்காக கோர்ட்டு அறையில் இருந்து போலீசார் வெளியே அழைத்து வந்தனர். மகளிர் கோர்ட்டு 3-வது மாடியில் செயல்பட்டு வருவதால், அவர்கள் படிக்கட்டுகள் வழியாகவே அழைத்துவரப்பட்டனர்.

    அப்போது அங்கு கூடியிருந்த வக்கீல்கள் சிலர் குற்றவாளிகளுக்கு எதிராக கோ‌ஷமிட்டனர். ஒருகட்டத்தில் குற்றவாளிகள் படிக்கட்டில் இருந்து இறங்கியதும் அவர்களை வக்கீல்கள் சூழ்ந்து சரமாரியாக தாக்க தொடங்கினர். சுமார் 10 நிமிடங்கள் இந்த தாக்குதல் நீடித்தது.

    தாக்குதலில் சிக்கிய கைதிகள் ‘அய்யோ... அம்மா...’ என்று கதறியபடி தரையில் உருண்டனர். 2 கைதிகள் படிக்கட்டில் இருந்து கீழே தள்ளப்பட்டு தாக்கப்பட்டனர்.

    முதலில் படிக்கட்டில் இறங்கிய 5 குற்றவாளிகள் மட்டுமே வக்கீல்கள் பிடியில் சிக்கிக்கொண்டதால், அவர்களை மீட்க போலீசார் கடும் சிரமப்பட்டனர். ஒருகட்டத்தில் அவர்களை வக்கீல்களிடம் இருந்து மீட்ட போலீசார், உடனடியாக மீண்டும் அதே கோர்ட்டு அறைக்குள் அழைத்துச்சென்று கதவுகளை மூடினர். இந்த சம்பவம் குறித்து கேள்விபட்டதும் ஏராளமான வக்கீல்கள் மகளிர் கோர்ட்டு முன்பு திரண்டனர்.

    இதனைத் தொடர்ந்து உயர் போலீஸ் அதிகாரிகள் ஜெயராம், ஆனந்தகுமார் சின்ஹா, கலைச்செல்வன், அன்பு ஆகியோர் கோர்ட்டுக்கு விரைந்து வந்தனர். அதேபோன்று அங்கு வந்த வக்கீல்கள் சங்க தலைவர் மோகனகிரு‌ஷ்ணன், வக்கீல் சங்க பிரதிநிதிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன், நீதிபதிகள் சுபாதேவி, மஞ்சுளா, ஜெயந்தி, தர்மன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    வக்கீல்களை கலைந்து போக சொன்னால் மட்டுமே குற்றவாளிகளை பத்திரமாக அழைத்து செல்ல முடியும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் வக்கீல்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்துவிட்டனர்.

    மகளிர் கோர்ட்டில் இருந்து குற்றவாளிகள் வெளியே அழைத்து செல்லும் அனைத்து வழிகளிலும் வக்கீல்கள் கூட்டம், கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். இரவு 7 மணிக்கு மேல் வக்கீல்கள் கோர்ட்டில் இருந்து கலைந்து செல்ல தொடங்கினர்.

    இதைத்தொடர்ந்து இரவு 7.45 மணிக்கு குற்றவாளிகளை போலீஸ் பாதுகாப்புடன் பத்திரமாக வேனில் ஏற்றினர். அப்போது அங்கிருந்த வக்கீல்கள் குற்றவாளிகளை கண்டித்து கோ‌ஷமிட்டனர். வக்கீல் ஒருவர் குற்றவாளிகள் இருந்த வேன் சாவியை பறிக்க முயன்றார்.

    அப்போது சாவி வேனுக்குள் விழுந்தது. இதைத்தொடர்ந்து சாவியை எடுத்த டிரைவர் வேனை அங்கிருந்து வேகமாக எடுத்துச்சென்றார். அப்போது அங்கு கூடியிருந்த வக்கீல்கள் வேனை கைகளால் தட்டியபடி ஆவேசமாக கோ‌ஷமிட்டனர்.

    பின்னர் அவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவாக வக்கீல்கள் யாரும் ஆஜர் ஆக மாட்டார்கள் என்று ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க தலைவர் மோகனகிரு‌ஷ்ணன் அறிவித்து உள்ளார். 
    கரூரில் வக்கீல்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    கரூர்:

    தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச சட்ட உதவிகளை வழங்கும் பொருட்டு மதுரையை சேர்ந்த வக்கீல் வாஞ்சிநாதன் என்பவர் அங்கு சென்று பணிகள் மேற்கொண்டார். இந்த நிலையில் அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்து போலீஸ்துறையினர் சென்னையில் அவரை கைது செய்ததை கண்டித்து கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் வக்கீல்கள் நேற்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர். இதனால் கரூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.

    இதேபோல் நீதிமன்ற பணிகளை புறக்கணித்த கரூர் வழக்கறிஞர் சங்கத்தினர், கரூர் நீதிமன்றத்தின் முன்புற பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு, செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் ரமேஷ், அமர்நாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது வக்கீல் வாஞ்சிநாதன் மீதான பொய் வழக்கை ரத்து செய்து விட்டு அவரை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். 

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் சம்பத், இணை செயலாளர் புகழேந்தி மற்றும் வக்கீல்கள் நன்மாறன், ஜெகதீசன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    நீதி மன்றங்களில் வழக்குகளை விரைவாக விசாரணை நடத்தி விரைவாகவும் அதே சமயம் தரமானதாகவும் நீதி வழங்கப்பட வேண்டும் என பல்லடத்தில் ஐகோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி பேசியுள்ளார். #judgeindirabanerjee #chennaihighcourt

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சார்பு நீதி மன்றத் திறப்பு விழா நடைபெற்றது. புதிய சார்பு நீதிமன்றத்தை ஐகோர்ட்டுதலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    இதைத்தொடர்ந்து சார்பு நீதிபதி மீனாசந்திரா தலைமையில் நீதிமன்றத்தின் முதல் அமர்வு செயல்பட தொடங்கியது. இதைத்தொடர்ந்து பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி வரவேற்றார். விழாவில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி குத்துவிளக்கேற்றி சார்பு நீதிமன்ற கல்வெட்டை திறந்து வைத்து பேசியதாவது:-

    நீண்ட கால கோரிக்கையான பல்லடம் சார்பு நீதி மன்றத்தை திறந்து வைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நீதி வழங்குவது நீதி துறையின் தனிப்பட்ட பணி என்பது அல்ல அது ஒரு கூட்டுப் பணி ஆகும். நீதித்துறை மட்டும் நீதி வழங்குவதில் முக்கியமானது இல்லை. சட்டம் இயற்றும் பாராளுமன்றம், சட்டப்பேரவையும் முக்கியமானது ஆகும்.

    நீதி மன்றங்களில் வழக்குகளை விரைவாக விசாரணை நடத்தி விரைவாகவும் அதே சமயம் தரமானதாகவும் நீதி வழங்கப்பட வேண்டும். மிக சிறந்த பாராம்பரியம் மிக்க சென்னை ஐகோர்ட்டு அதிக பெண் நீதிபதிகளுடன் தனிச்சிறப்புடன் இயங்கி வருகிறது.

    இளம் வக்கீல்கள் முதலில் மூத்த வக்கீல்களுடன் சேர்ந்து பணியாற்றி அவர்களின் அறிவுரைப்படி செயல்பட்டு நீதி மன்றத்தில் வழக்காடுவதில் சட்ட அனுபவம் பெற வேண்டும். நீதிபதிகள் அமலில் உள்ள சட்டங்களையும் அதில் காலத்திற்கேற்ப செய்யப்படும் திருத்தங்களையும் முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் முந்தைய தீர்ப்புகளை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். வக்கீல்கள் நீதி மன்றத்தை புறக்கணிப்பதால் நீதிபதிகளுக்கு நஷ்டம் ஏதும் இல்லை. அதனால் வழக்குதொடுப்பவர்களுக்கு தான் இழப்பு ஏற்படுகிறது.

    தமிழ்நாடு நீண்ட பாராம்பரிய வரலாறு கொண்ட மாநிலம் ஆகும். உலக அளவில் பேசப்படும் தமிழ் சிறந்த மொழியாகும். இந்தியாவின் தேசிய மொழிகளில் ஒன்றாக விளங்குகிறது. தமிழ் மொழி கற்றுக்கொள்ள எனக்கு ஆசை தான். ஆனால் எனக்கு 60 வயது ஆவதால் தமிழ் மொழி கற்றுக் கொள்ள எனக்கு சிறிது காலம் ஆகும். 

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ரவிசந்திரபாபு, கிருஷ்ணகுமார், பவானிசுப்பராயன், திருப்பூர் மாவட்ட கலெக்டர் பழனிசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி, பல்லடம் வக்கீல் சங்க தலைவர் சிவசுப்பிரமணியம் மற்றும் வக்கீல்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திருப்பூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி ஜெகநாதன் நன்றி கூறினார். #judgeindirabanerjee #chennaihighcourt

    ×