search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வக்கீல்கள்"

    • ராஜஸ்தான் மாநிலத்தில் இயற்றப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் பாது காப்பு சட்டத்தினை போல் மத்திய அரசும்,
    • தமிழ்நாடு அரசும் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தினை உடனடியாக இயற்றிட வேண்டும்,


    நாகர்கோவில் : ராஜஸ்தான் மாநிலத்தில் இயற்றப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் பாது காப்பு சட்டத்தினை போல் மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தினை உடனடியாக இயற்றிட வேண்டும், இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய குற்றவியல் சட்டம் ஆகிய 3 சட்டங்களையும் பிராந்திய மொழி மக்களின் உணர்வுகளை உணராமல் பொது மக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் நலன்க ளுக்கு எதிராக உள்ள பிரிவுகளை பொறுத்து வழக்கறிஞர்கள் சங்கங்களையோ பார் கவுன்சிலையோ கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக மசோதாக்களை பாராளுமன்ற நிலைக்குழுவின் ஆளுங்கட்சியின் ஆதரவு உள்ள அடிப்படையில் எந்தவித திருத்தங்களும் இன்றி ஏற்றுக் கொள்ளப் பட் டதனை மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி யும், சென்னை உயர் நீதி மன்றம் பல்வேறு வழக்கு களை இ பைலிங் முறையில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என கட்டாய மாக்கப்பட்டுள்ளதனை 6 மாத காலத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும்.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு வில் உள்ள வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இன்று நாகர்கோ வில் வக்கீல் சங்கம் சார்பில் வக்கீல் சங்க தலைவர் பாலஜனாதிபதி தலைமை யில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

    இதுபோல் குழித்துறை, தக்கலை, இரணியல், பூதப்பாண்டி உள்ளிட்ட நீதிமன்றங்களிலும் வக்கீல்கள் நீதிமன்ற புறக்க ணிப்பில் ஈடுபட்டனர்.

    • அருள்ராஜ் தன்னை வக்கீல் என்று கூறியதும் பிபினுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • வக்கீலிடம் கடுமையாக நடந்து கொண்ட ஏட்டு பிபின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கூறி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை கே.டி.சி. நகரில் உள்ள சோதனை சாவடியில் நேற்று இரவு பணியில், பாளை போலீஸ் ஏட்டு அல்டஸ் பிபின்(வயது 44) என்பவர் இருந்தார்.

    அப்போது அந்த வழியாக வக்கீல் அருள்ராஜ் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவர் வேகமாக வந்ததாக கூறி ஏட்டு பிபின், அவரை தடுத்து நிறுத்தி உள்ளார். உடனே அருள்ராஜ் தன்னை வக்கீல் என்று கூறியதும் பிபினுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் நெல்லை மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஷ்வரன், செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் வக்கீல்கள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் வக்கீலை, போலீஸ் ஏட்டு பிபின் தாக்கியதாகவும், அவருடைய செல்போனை பறித்துக் கொண்டதாகவும் கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    உடனடியாக அங்கு போலீஸ் உதவி கமிஷனர் ஆவுடையப்பன், இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் விரைந்து வந்து வக்கீல்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    பின்னர் வக்கீல்கள் சார்பில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது தொடர்ந்து வக்கீல்கள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

    இதற்கிடையே சம்பவத்தில் இரவு பணியில் இருந்த ஏட்டு பிபின் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இன்று அதிகாலை சிகிச்சைக்காக சேர்ந்தார். அவர் வக்கீல்கள் தன்னை தாக்கியதாக கூறி புகார் அளித்துள்ளார்.

    இந்நிலையில் நெல்லை மாவட்ட வக்கீல்கள், வாகன சோதனையின் போது வக்கீலிடம் கடுமையாக நடந்து கொண்ட ஏட்டு பிபின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கூறி வருகின்றனர்.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஸ்வரியை நெல்லை மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஸ்வரன், செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் ஏராளமான வக்கீல்கள் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

    அதில் வக்கீலை அவதூறாக பேசி தாக்குதல் நடத்திய தலைமை காவலர் பிபின் மீது நடவடிக்கை எடுக்க கோரி நள்ளிரவில் புகார் மனு அளித்தோம். அதன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    தற்போது வக்கீல் மீது பொய் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஏட்டு பிபின் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். எனவே இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    • வக்கீல்கள் இன்று முதல் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுகிறார்கள்.
    • இ-பைலிங் நடைமுறைக்கு கால அவகாசம் வழங்கக்கோரி

    பெரம்பலூர்

    பெரம்பலூரில் அட்வகேட்ஸ் அசோசியேசன் அமைப்பின் அவசர பொதுக்குழுக்கூட்டம் அதன் தலைவர் மணிவண்ணன் தலைமையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. இதில் செயலாளர் சிவசங்கரன், பொருளாளர் மணிகண்டன் மற்றும் திரளான வக்கீல்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் கடந்த 1-ந் தேதி முதல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் விபத்து இழப்பீடு கோரும் மனு மற்றும் இந்து திருமணம் தொடர்பான மனு உள்பட அனைத்து மனுக்களும் ஆன்லைன் முறையில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என்ற நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. போதிய காலஅவகாசம் அளிக்காமலும், இந்த நடைமுறையில் உள்ள நிறை மற்றும் குறைகள் குறித்து வக்கீல்களிடம் கருத்து கேட்காமலும் நீதிமன்றத்தில் இதற்கான முழுமையாக அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்காமலும், ஆன்லைன் மூலம் இ-பைலிங் முறையை அவசரமாக நடைமுறைக்கு கொண்டு வருவதால், வழக்கு நடத்துபவர்களும், வக்கீல்களும் கடுமையான பாதிக்கப்படுவார்கள். எனவே உரிய கால அவகாசம் வழங்கி இதனை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், இதற்கான முழுமையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும் வரை முன்பு இருந்த நடைமுறையையே தொடர அனுமதிக்க வேண்டும் என்றும், இந்த கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் வரை இன்று (வியாழக்கிழமை) முதல் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து நீதிமன்ற பணிகளில் இருந்தும் விலகி இருப்பது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • இ-பைலிங் முறையில் வழக்குகளை தாக்கல் செய்யும் முறையை திரும்ப பெற வேண்டும்.
    • விசாரணைக்கு வந்த வழக்குகள் அனைத்தும் வேறு தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டன.

    கும்பகோணம்:

    கோர்ட்டுகளில் இ-பை லிங் முறையில் வழக்குகளை தாக்கல் செய்யும் முறையை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கும்பகோணத்தில் வக்கீல்கள் கோர்ட்டை புறக்க ணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல்கள் சங்க தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார்.

    செயலாளர் செல்வம், மூத்த வக்கீல் சுகுமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மூத்த வக்கீல்கள் சக்கரபாணி, வைத்திய நாதன், முன்னாள் சங்க தலைவர் ராஜசேகர், துணைத்தலைவர் ரவிச்சந்தி ரன், பொருளாளர் ராஜசீனி வாசன், சசிகலா, பானுமதி, அனுராதா உள்பட ஏராள மான வக்கீல்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தால் நேற்று கோர்ட்டில் விசார ணைக்கு வந்த வழக்குகள் அனைத்தும் வேறு தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டன.

    • கார் மோதி வக்கீல் படுகாயம் அடைந்தார்
    • பெட்ரோல் இல்லாமல் நின்ற போது சம்பவம்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே கோடாலி தெற்கு தெருவை சேர்ந்தவர் சிங்காரவேலன் (வயது 56). இவர் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர் அரியலூர் செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் ஜெயங்கொண்டத்தில் இருந்து திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மணகெதி அருகே பெட்ரோல் இல்லாமல் நின்றது. அப்போது அந்த வழியாக தருமபுரி மாவட்டம் கத்திரிப்பெட்டி கிராமத்தை சேர்ந்த சக்தி வேல் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக சிங்காரவேலன் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த சிங்காரவேலனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து தொடர்பாக சக்தி மீது உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் மாவட்ட வக்கீல்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி வக்கீல்கள் கூட்ட மைப்பு சார்பாக சேலம் கோர்ட்டு முன்பு இன்று காலை அடையாள உண்ணா விரத போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • போராட்டத்திற்கு சேலம் மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார்.

    சேலம்:

    குற்றவியல் சட்டம், தண்டனை சட்டம், சாட்சிய சட்டங்களை திருத்து வதற்கான நடவடிக்கை களில் மத்திய அரசு இறங்கி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    உண்ணாவிரதம்

    அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்ட வக்கீல்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி வக்கீல்கள் கூட்ட மைப்பு சார்பாக சேலம் கோர்ட்டு முன்பு இன்று காலை அடையாள உண்ணா விரத போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த போராட்டத்திற்கு சேலம் மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். செய லாளர் முத்தமிழ்ச் செல்வன் முன்னிலை வகித்தார். இதில் கூட்ட மைப்பின் துணைத் தலை வர்கள் மூர்த்தி, பொன்ர மணி, இமயவர்மன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    சேலம் மாவட்ட வழக்க றிஞர்கள் சங்க செயலாளர் முத்தமிழ் செல்வன் கூறுகை யில், குற்றவியல் சட்டம், தண்டனை சட்டம், சாட்சிய சட்டங்களை திருத்துவதன் மூலம் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இதனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கி றோம். மேலும் அந்த திருத்தத்தை கைவிடா விட்டால் தொடர் போராட் டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

    • சட்டங்களை இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்த மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • தொடர்ந்து 3 நாட்கள் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களை இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்த மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் வக்கீல்கள் கடந்த 2 நாட்களாக பணிகளை புறக்கணித்து ஆர்ப்பர்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று 3-வது நாளாகவும் பணிகளை புறக்கணித்து ஒருங்கிணைந்த கோர்ட் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு தஞ்சாவூர் வக்கீல்கள் சங்க தலைவர் தியாக .காமராஜ் தலைமை தாங்கினார்.

    செயலாளர் சுந்தர்ராஜன், முன்னாள் தலைவர் கோ. அன்பரசன், தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் சிவ சுப்பிரமணியம், முன்னாள் செயலாளர் நல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    தொடர்ந்து 3 நாட்கள் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி நீதிமன்றத்தின் முன், இந்திய சட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்ததை கண்டித்து, வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    சேலம் மாவட்டம் வாழப்பாடி நீதிமன்றத்தின் முன், இந்திய சட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்ததை கண்டித்து, வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் பெயர்களை இந்தி மொழியில் மாற்றி அமைத்து, மத்திய அரசு புதிதாக தோற்றுவித்த புதிய சட்ட வரையறைகளை கண்டித்தும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வாழப்பாடியிலுள்ள மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வாழப்பாடி வழக்கறிஞர் சங்கத் தலைவர் திரவியம், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சீனிவாசன் மற்றும் வக்கீல்கள், மத்திய அரசின் புதிய சட்ட வரையறைகளை கண்டித்தும் எதிர்த்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    • சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியில் மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளனர்.
    • சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

    திருப்பூர்:

    குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் பெயர்களை சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியில் மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ள மத்திய அரசை கண்டித்தும் அதை திரும்பப் பெறக் கோரியும் தமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

    அதன்படி இன்று திருப்பூர் கோர்ட்டு வளாகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல்கள் சங்க தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். கூட்டமைப்பின் துணைத் தலைவர் சிவபிரகாசம், அட்வகேட் அசோசியேசன் சங்க தலைவர் ரகுபதி, நீதிமன்ற வக்கீல்கள் சங்க தலைவர் சுந்தரேஸ்வரன் செயலாளர் பத்மநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தின் போது ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

    • இன்று முதல் 31-ம் தேதி வரை நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
    • மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கடலூர்:

    மத்திய அரசு தாக்கல் செய்த புதிய சட்ட மசோதாக்களை திரும்ப பெறக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் இன்று முதல் 31-ம் தேதி வரை நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி பண்ருட்டி அனைத்து வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் பண்ருட்டி வக்கீல்கள் இன்று காலை 10 மணியளவில் பண்ருட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கான அரசாணை கடந்த 7.12.2022-ம் ஆண்டு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • பரிந்துரைக்கப்பட்ட இடத்தில் நீதிமன்றமும், நீதிபதிகள் குடியிருப்பும் அமைவதற்கு ஆவணம் செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கலெக்டர் ரவிச்சந்திரனை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் அமைய இருக்கிற ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் குடியிருப்புககுக்கான இடம் ஆய்க்குடி கிராமம் சர்வே எண் 84-ல் 5.54 ஹெக்டேர் மற்றும் சர்வே எண் 97-ல் 1.95 ஹெக்டேர் ஆக மொத்தம் 18.5 ஏக்கர் நிலம் நீதிமன்றம் கட்டிடம் கட்டுவதற்காக பரிந்துரைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கான அரசாணை கடந்த 7.12.2022-ம் ஆண்டு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாணை எண் 917 ஆகும்.

    தற்போது நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட இடத்தில் பிற கட்டிடங்கள் கட்டுவதற்கு பரிந்துரைக்கப்பட்டதாக அறிகிறோம். ஏற்கனவே மேற்கண்ட இடத்தில் நீதிமன்றமும், நீதிபதிகள் குடியிருப்பும் அமைவதற்கு ஆவணம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இது சம்பந்தமாக கலெக்டரிடம் சிவபத்மாதன் கூறுகையில், ஏற்கனவே பாதை பிள்ளையான் கட்டளைக்கு பாத்தியப்பட்ட இடத்தை இந்த இடத்திற்கு செல்வதற்கு வழிப்பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபரனை சந்தித்து மனுக்களையும் வழங்கி இருக்கிறோம். அன்றைய தினத்தில் பொறுப்பில் இருந்த மாவட்ட கலெக்டர் ஆகாஷ், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் வழிப்பாதை சம்பந்தமாக சில விதிமுறை கள் இருப்பதை சுட்டிக்காட்டி யதாக கூறினார்.

    அப்போது தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் வேலுச்சாமி, வக்கீல்கள் சங்கத் தலைவர் புகழேந்தி, கைலாசம், மாட கண்ணு, வீரமணி கண்டன், ராஜா முத்துக்குமாரசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • ஆலங்குடி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

    புதுக்கோட்டை

    ஆலங்குடியில் உள்ள வக்கீல்கள் மாவட்ட நீதிபதிகளை கண்டித்து ஆலங்குடி கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். ஆலங்குடி வக்கீல்கள் சங்க தலைவர் ராஜா தலைமை தாங்கினார். முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி, சார்பு நீதிபதி (கூடுதல்), மாவட்ட நீதிபதிகள், இவர்களுக்கு வருகின்ற குற்ற வழக்குகளுக்கு எதிரிகளிடம் இருந்து முன் தொகையாக குறிப்பிட்ட அளவு பணம் கட்ட வேண்டும் என உத்தரவு விடுகின்றனர். குற்றவாளிகளை பிணையில் விடும்போது அவர்கள் அந்தந்த பகுதிகளில் கையெழுத்து போடவிடாமல், மாவட்டம் விட்டு மாவட்டமும், தாலுகா விட்டு தாலுகாவும் மாற்றம் செய்யப்படுகின்றனர். புதுக்கோட்டையில் உள்ள நீதிபதி காலிபணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும். புதுக்கோட்டை கூடுதல் மகிளா கோர்ட்டு புதுக்கோட்டை தாலுகா அதிகார எல்லை வரம்பிலிருந்து புதுக்கோட்டை மாவட்ட அதிகார எல்லைவரை நீட்டிப்பு செய்து உத்தரவு வழங்க வேண்டும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிமன்ற பணியாளர்கள் வக்கீல்களுக்கு உரிய மரியாதை அளிக்க அறிவுரைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோர்ட்டு புறக்கணிப்பில் வக்கீல்கள் ஈடுபட்டனர். முன்னறிவிப்பு இன்றி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டதால் ஆலங்குடி கோர்ட்டுக்கு வந்திருந்த பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    ×