search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குடி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
    X

    ஆலங்குடி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

    • ஆலங்குடி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

    புதுக்கோட்டை

    ஆலங்குடியில் உள்ள வக்கீல்கள் மாவட்ட நீதிபதிகளை கண்டித்து ஆலங்குடி கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். ஆலங்குடி வக்கீல்கள் சங்க தலைவர் ராஜா தலைமை தாங்கினார். முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி, சார்பு நீதிபதி (கூடுதல்), மாவட்ட நீதிபதிகள், இவர்களுக்கு வருகின்ற குற்ற வழக்குகளுக்கு எதிரிகளிடம் இருந்து முன் தொகையாக குறிப்பிட்ட அளவு பணம் கட்ட வேண்டும் என உத்தரவு விடுகின்றனர். குற்றவாளிகளை பிணையில் விடும்போது அவர்கள் அந்தந்த பகுதிகளில் கையெழுத்து போடவிடாமல், மாவட்டம் விட்டு மாவட்டமும், தாலுகா விட்டு தாலுகாவும் மாற்றம் செய்யப்படுகின்றனர். புதுக்கோட்டையில் உள்ள நீதிபதி காலிபணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும். புதுக்கோட்டை கூடுதல் மகிளா கோர்ட்டு புதுக்கோட்டை தாலுகா அதிகார எல்லை வரம்பிலிருந்து புதுக்கோட்டை மாவட்ட அதிகார எல்லைவரை நீட்டிப்பு செய்து உத்தரவு வழங்க வேண்டும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிமன்ற பணியாளர்கள் வக்கீல்களுக்கு உரிய மரியாதை அளிக்க அறிவுரைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோர்ட்டு புறக்கணிப்பில் வக்கீல்கள் ஈடுபட்டனர். முன்னறிவிப்பு இன்றி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டதால் ஆலங்குடி கோர்ட்டுக்கு வந்திருந்த பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    Next Story
    ×