search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "justice"

    • பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது
    • பெரம்பலூர் முதன்மை மாவட்ட நீதிபதி பல்கீஸ் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றிவைத்து பேசினார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 77-வது சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது விழாவுக்கு பெரம்பலூர் முதன்மை மாவட்ட நீதிபதி பல்கீஸ் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றிவைத்து பேசினார். இதில் மாவட்ட குடும்ப நல நீதிபதி தனசேகரன் மற்றும் தலைமை குற்றவியல் நீதிபதி மூர்த்தி, சார்பு நீதிபதி அண்ணாமலை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்கு ழுவின் செயலா ளரும், சார்பு நீதிபதியு மான ராஜா மகேஷ்வர் மற்றும் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நீதித்துறை மாஜிஸ்திரேட்டுகள் அ ட்வகேட்ஸ் அசோசியேசன் அமைப்பின் தலைவர் மணிவண்ணன் மற்றும் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    அதே போல் மதனகோபாலசுவாமி கோவிலில் சுதந்திர தி னவிழா கொ ண்டாடப்பட்டது. பெரம்ப லூரில் உள்ள மரகதவ ல்லித்தாயார் சமேத மதனகோ பாலசுவாமி கோவிலில் 77-வது சுதந்திரதினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கம்பத்து ஆஞ்சநேயர் சன்னதியை ஒட்டிய ராஜகோபுரம் அருகே கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜன் தலைமையில், கோவில் பரம்பரை ஸ்தானீகர் பொன்.நாராயணன் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கோவில் பட்டாச்சாரியார் பட்டாபிராமன், கோவில் பரிஜாரகர் சம்பத், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மல்யுத்த வீராங்கணைகளுக்கு நீதி வேண்டி காரைக்கால் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • மல்யுத்த வீராங்கணைகள் மீதான வன்முறையை உடனே நிறுத்தவேண்டும்.

    புதுச்சேரி:

    மல்யுத்த வீராங்கனை களுக்கு நீதி வேண்டி, காரைக்கால் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில், காரைக்கால் மதகடி பகுதியில் கண்டன ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. காரைக்கால் கடற்கரை சலையில் உள்ள மதகடி பகுதியில் நடைபெற்ற, இந்த கண்டன ஆர்ப்பா ட்டத்தில், மல்யுத்த விராங்கணைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்கள் யாராக இருப்பினும், அரசு அவர்களை உடனே பாரபட்சம் இன்றி வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும்.

    மேலும் இந்த போராட்டத்தில் நியாயம் கேட்டு போராடும் மல்யுத்த வீராங்கணைகள் மீதான வன்முறையை உடனே நிறுத்தவேண்டும். அவர்களுக்கு உரிய நியாயத்தை அரசு பெற்றுத்தரவேண்டும். நாட்டுக்காக பதக்கம் பெற்றுத்தந்த வீராங்கணைகளை மதித்து நடக்கவேண்டும். இந்த வழக்கின் மீது மத்திய அரசு தனி கவனம் செலுத்தி, மல்யுத்த வீராங்கணைகளுக்கு நீதி மற்றும் நியாயம் பெற்றுததரவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    • தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் புதிய நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
    • அவசர வழக்குகளை விசாரிக்க வழக்கம்போல முறையீடு செய்யலாம்.

    புதுடெல்லி :

    சுப்ரீம் கோர்ட்டில் ரிட், மேல்முறையீடு, இடையீட்டு மற்றும் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்படும்போது ஆன்லைன் மூலம் முதலில் பதிவாளருக்கு அனுப்ப வேண்டும். அவர் இதனை பரிசீலனை செய்து தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கிறார்.

    இதனை அவர் ஆய்வு செய்து, வழக்குகளை எந்த அமர்வு விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு பதிவாளருக்கு உத்தரவிடுவார். இந்த நடைமுறை காலதாமதமாகும்போது மனுதாரர் சார்பில் ஆஜராகும் வக்கீல்கள் தலைமை நீதிபதி அமர்வில் ஆஜராகி தங்களது மனுவை அவசரமாக விசாரிக்க கோரிக்கை விடுக்கலாம்.

    இதற்கிடையே புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று புதிய நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    வாரத்தில் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை அடுத்த வாரம் திங்கட்கிழமைக்கு விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்.

    இதேபோல் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை அடுத்த வாரம் வெள்ளிக்கிழமைக்கு விசாரணைக்கு தானாக பட்டியலிடும் வகையிலும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    இந்த நடைமுறையை செயல்படுத்துமாறு பதிவாளர் அலுவலகத்துக்கு உத்தரவிட்டு உள்ளேன். அவசர வழக்குகளை விசாரிக்க வழக்கம்போல முறையீடு செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது
    • வருகின்ற 12-ந் தேதி நடைபெறுகிறது

    கரூர்:

    கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் சண்முகசுந்தரம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    தேசிய சட்டப்பணிகள் மற் றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவி பேரில் நாடு முழுதும் வரும் 12 -ந் தேதி தேசிய மக்கள் நீதி மன்றம் கருர் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் நிலுவையில் உள்ள வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றத்தில் எடுத் துக் கொள்ள சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திலோ அல்லது கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் குளித் தலை வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவிடம் தெரி வித்து பயனடைமாறு கேட் டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வங்கி கடன், நிதி நிறுவன கடன்களும், ஏனைய பிரச்னைகளும் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

    தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விவாகரத்து தவிர இதர மண வாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள், மோட்டார் வாகன விபத்துக்கள். காசோலை மோசடி வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் மற்றும் நுகர்வோர் வழக்குகள் உட்பட அனைத்து வழக்குகளும் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும். மேலும், 11ம்தேதி வரை பணியில் உள்ள நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏற்படுத்த நிலுவையில் உள்ள வழக்குகள் தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். அந்த நீதிமன்ற அமர்வு கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந் துள்ள கூட்டரங்கில் பிற்பகல் 3.30மணி முதல் 5.30மணி வரை இயங்கும் எனவும் தெரிவிக் கப்படுகிறது. எனவே, வழக் காடிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள கேட் டுக்கொள்ளப்படுகிறது. சந்தேகம் இருப்பின், கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தொலைபேசி எண் 04324 296570ல் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    • ஸ்ரீமதி தொடர்பான வழக்குகளை நடத்தி வரும் வழக்கறிஞர்கள் மேல்முறையீட்டிற்காக உச்சநீதிமன்றம் சென்று இருக்கிறார்கள் எனவே அந்த நீதிபதிகளாவது நல்ல ஒரு தீர்வை வழங்க வேண்டும்.
    • நிபுணர் குழுவினர் கருத்தைக் கேட்டு தவறாக நீதி வழங்குவது பொதுமக்கள் மத்தியில் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை குறைந்துவிடும்.

    நாகப்பட்டினம்:

    முக்குலத்து புலிகள் அமைப்பின் நிறுவன தலைவர் ஆறு.சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது,

    கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் பள்ளியில் படித்த ஸ்ரீமதி மரணம், தற்கொலை எனவும் கொலையோ அல்லது பாலியல் துன்புறுத்தலோ இல்லை என உயர் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

    நீதிமன்றத்தை தான் மக்கள் நம்பி இருக்கிறார்கள்.

    நீதிமன்றங்கள் இப்படி தவறுதலான ஒரு நீதியை வழங்கினால் மக்கள் நீதிமன்றங்கள் மீது உள்ள நம்பிக்கை இல்லாமல் போய் விடும்.

    நிபுணர் குழுவினர் கருத்தைக் கேட்டு தவறாக நீதி வழங்குவது பொதுமக்கள் மத்தியில் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை குறைந்துவிடும்.

    தமிழக முதல்வர் ஸ்ரீமதி உயிரிழப்புக்கு உரிய நீதியையும் நிவாரணம் வழங்குவதற்கான முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

    அதே போல ஸ்ரீமதி தொடர்பான வழக்குகளை நடத்தி வரும் வழக்கறிஞர்கள் மேல்முறையீட்டிற்காக உச்சநீதிமன்றம் சென்று இருக்கிறார்கள்.

    அந்த நீதிபதிகளாவது நல்ல ஒரு தீர்வை வழங்க வேண்டும்.

    தொடர்ச்சியாக தென் மாவட்டங்களில் ஒண்டிவீரன் விழாவிற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    அதேபோல புலித்தேவன், மருது பாண்டியன் மற்றும் ஆக.30 நடைபெற்ற பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும், சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த மன்னர்கள் மற்றும் மாவீரர்களின் புகழை பரப்புவதற்கு எல்லா மக்களும் நேரில் சென்று பார்த்து வழிபட வேண்டும்.

    ஆனால் அவர்கள் வழிபடாத அளவிற்கு தமிழக அரசு 144 உத்தரவை பிறப்பிப்பதாகவும், அதிமுக அரசு தொடர்ச்சியாக இந்த 144 தடை உத்தரவை செய்திருந்தது.

    திமுக அரசு 144 தடை உத்தரவை அகற்ற வேண்டும் என்றார்.

    புலித்தேவனின் 307வது பிறந்தநாள்

    நெல்லை சீமையை ஆண்டு வெள்ளையரை எதிர்த்து போரிட்ட முதல் சுதந்திரப் போராட்ட மாமன்னர் பூலித்தேவனின் 307வது பிறந்தநாளை ஒட்டி நாகை மாவட்டம் காமேஸ்வரத்தில் முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் பூலித்தேவனின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து சிறப்புரை ஆற்றினார்.

    இந்த கூட்டத்தில், இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட மாவீரன் பூலித்தேவனுக்கு அரசின் சார்பில், சென்னை தலைநகரில் உருவச்சிலை அமைக்க வேண்டும்.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பூலித்தேவன் விழாவுக்கு போடப்படும் 144 தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • 13-ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
    • மாவட்ட நீதிபதி தகவல்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வரும் 13ஆம் தேதி தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் ஆணைப்படி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம்நடைபெற உள்ளது.

    மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்ய இயலாது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடிகள் செலவின்றி விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்து தரப்படும், வழக்கில் வென்றவர் தோற்றவர் என்ற எண்ணம் இருக்காது, வழக்குகள் தீர்வு கண்டதும் உத்தரவு நகல் உடனே வழங்கப்படும்,

    முத்திரைத்தாள் வாயிலாக செலுத்திய நீதிமன்ற கட்டணம் திரும்ப பெற வாய்ப்புள்ளது, நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லாத வேறு விதமான சட்ட பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றையும் மக்கள் நீதிமன்றம் விசாரித்து நிரந்தர தீர்வு காணப்படும்,

    அதனால் பொதுமக்கள் வழக்காடிகள் மேற்படி தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு தங்கள் வழக்குகளை சமரச வழிகள் மூலம் சமரசமாக நிரந்தர தீர்வு காணலாம், எனவும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் மாவட்ட நீதிபதியுமான மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

    • சட்டத்தின் ஆட்சி என்ற ஒன்றை மட்டும் மனதில் வைத்து உச்ச நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும்.
    • டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்கள் கட்டாயமாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

    லக்னோவின் டாக்டர் ராம் மனோகர் லோஹியா தேசிய சட்டப் பல்கலைக் கழகம், ஒடிசாவின் தேசிய சட்டப் பல்கலைக் கழகம், தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களுக்கான முன்னாள் மாணவர்களின் கூட்டமைப்பு உள்ளிட்டவை இணைந்து நடத்திய தேசிய கருத்தரங்கு டெல்லியில் நடைபெற்றது.

    இதில் பங்கேற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.பி.பார்திவாலா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    நீதிமன்ற தீர்ப்புகள் பொதுமக்கள் கருத்துகளின் பிரதிபலிப்பாக இருக்க முடியாது, எனவே உச்ச நீதிமன்றமே சட்டத்தின் ஆட்சியை மனதில் வைத்து செயல்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சி என்ற ஒன்றை மட்டும் மனதில் வைத்து உச்ச நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

    ஜனநாயகத்தை நான் நம்புகிறேன். ஜனநாயகத்தில் சட்டம் மிகவும் முக்கியமானது. லட்சுமண ரேகையை கடந்து, நீதிபதிகள் மீது தனிப்பட்ட தாக்குதல்களை மேற்கொள்வது ஆபத்தானது என்பதால், அரசியலமைப்பின் கீழ் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்க நாட்டில் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்கள் கட்டாயமாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

    ஒரு நீதிபதி, ஒரு விதிவிலக்கான வழக்கில், சமூகத்தின் உணர்வுகளையும், அவர் வழங்கப் போகும் தீர்ப்பின் விளைவையும் அறிந்திருக்க வேண்டும். நீதிபதிகள் சமூக வலைதள விவாதங்களில் பங்கேற்கக் கூடாது, நீதிபதிகள் தங்கள் நாக்கின் மூலம் ஒருபோதும் பேச மாட்டார்கள், அவர்களின் தீர்ப்புகளை மட்டுமே பேசுவார்கள்.

    நீதித்துறையின் பங்கும், அரசியலமைப்புச் சட்டத்தின் பங்கும் மக்களால் நிலைநிறுத்தப்படும் புனிதமான நம்பிக்கையாகும். சட்டத்தின் ஆட்சி என்பது இந்திய அரசியலமைப்பின் தனிச்சிறப்பு அம்சமாகும். நாடாளுமன்ற முறைகள் இல்லாத நாடுகளிலும்  சட்டத்தின் ஆட்சி உள்ளது. ஒரு சர்வாதிகாரம் கூட சட்டத்தின்படி ஆட்சி செய்வதாகக் கூறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நீதி மன்றங்களில் வழக்குகளை விரைவாக விசாரணை நடத்தி விரைவாகவும் அதே சமயம் தரமானதாகவும் நீதி வழங்கப்பட வேண்டும் என பல்லடத்தில் ஐகோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி பேசியுள்ளார். #judgeindirabanerjee #chennaihighcourt

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சார்பு நீதி மன்றத் திறப்பு விழா நடைபெற்றது. புதிய சார்பு நீதிமன்றத்தை ஐகோர்ட்டுதலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    இதைத்தொடர்ந்து சார்பு நீதிபதி மீனாசந்திரா தலைமையில் நீதிமன்றத்தின் முதல் அமர்வு செயல்பட தொடங்கியது. இதைத்தொடர்ந்து பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி வரவேற்றார். விழாவில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி குத்துவிளக்கேற்றி சார்பு நீதிமன்ற கல்வெட்டை திறந்து வைத்து பேசியதாவது:-

    நீண்ட கால கோரிக்கையான பல்லடம் சார்பு நீதி மன்றத்தை திறந்து வைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நீதி வழங்குவது நீதி துறையின் தனிப்பட்ட பணி என்பது அல்ல அது ஒரு கூட்டுப் பணி ஆகும். நீதித்துறை மட்டும் நீதி வழங்குவதில் முக்கியமானது இல்லை. சட்டம் இயற்றும் பாராளுமன்றம், சட்டப்பேரவையும் முக்கியமானது ஆகும்.

    நீதி மன்றங்களில் வழக்குகளை விரைவாக விசாரணை நடத்தி விரைவாகவும் அதே சமயம் தரமானதாகவும் நீதி வழங்கப்பட வேண்டும். மிக சிறந்த பாராம்பரியம் மிக்க சென்னை ஐகோர்ட்டு அதிக பெண் நீதிபதிகளுடன் தனிச்சிறப்புடன் இயங்கி வருகிறது.

    இளம் வக்கீல்கள் முதலில் மூத்த வக்கீல்களுடன் சேர்ந்து பணியாற்றி அவர்களின் அறிவுரைப்படி செயல்பட்டு நீதி மன்றத்தில் வழக்காடுவதில் சட்ட அனுபவம் பெற வேண்டும். நீதிபதிகள் அமலில் உள்ள சட்டங்களையும் அதில் காலத்திற்கேற்ப செய்யப்படும் திருத்தங்களையும் முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் முந்தைய தீர்ப்புகளை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். வக்கீல்கள் நீதி மன்றத்தை புறக்கணிப்பதால் நீதிபதிகளுக்கு நஷ்டம் ஏதும் இல்லை. அதனால் வழக்குதொடுப்பவர்களுக்கு தான் இழப்பு ஏற்படுகிறது.

    தமிழ்நாடு நீண்ட பாராம்பரிய வரலாறு கொண்ட மாநிலம் ஆகும். உலக அளவில் பேசப்படும் தமிழ் சிறந்த மொழியாகும். இந்தியாவின் தேசிய மொழிகளில் ஒன்றாக விளங்குகிறது. தமிழ் மொழி கற்றுக்கொள்ள எனக்கு ஆசை தான். ஆனால் எனக்கு 60 வயது ஆவதால் தமிழ் மொழி கற்றுக் கொள்ள எனக்கு சிறிது காலம் ஆகும். 

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ரவிசந்திரபாபு, கிருஷ்ணகுமார், பவானிசுப்பராயன், திருப்பூர் மாவட்ட கலெக்டர் பழனிசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி, பல்லடம் வக்கீல் சங்க தலைவர் சிவசுப்பிரமணியம் மற்றும் வக்கீல்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திருப்பூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி ஜெகநாதன் நன்றி கூறினார். #judgeindirabanerjee #chennaihighcourt

    ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் கொல்கத்தாவில் ஊழலுக்கு எதிரான புதிய கட்சியை தொடங்கி உள்ளார். பாராளுமன்ற தேர்தலில் மோடியை எதிர்த்து பெண் வேட்பாளரை நிறுத்த அவர் முடிவு செய்துள்ளார். #JusticeKarnan
    கொல்கத்தா:

    கொல்கத்தா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன். சென்னை ஐகோர்ட்டின் நீதிபதியாக இருந்த கர்ணனை பணியிட மாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    ஆனால் தனது பணியிடம் மாற்றத்துக்கான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு தடை விதித்தார். இதையடுத்து அவருக்கு வழக்குகளை ஒதுக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தான் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் குறி வைக்கப்படுகிறேன் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகளை கூறினார்.

    இதையடுத்து கர்ணன் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 6 மாத சிறை தண்டனை காலம் முடிந்து வெளியே வந்துள்ள முன்னாள் நீதிபதி கர்ணன் கொல்கத்தாவில் ஊழலுக்கு எதிரான கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். இது குறித்து அவர் கூறியதாவது:-


    அடுத்த ஆண்டு நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் எனது கட்சி சார்பில் பெண் வேட்பாளர்களை களம் இறக்க முடிவு செய்துள்ளேன். எனது கட்சியை முறைப்படி தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வேன்.

    நாட்டிலிருந்து ஊழலை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதே என் கட்சியின் நோக்கம். மோடி எம்.பி.யாக உள்ள வாரணாசி தொகுதியில் நான் போட்டியிட போவதில்லை. அங்கு எனது கட்சி சார்பில் பெண் வேட்பாளரை நிறுத்துவேன்.

    நாடு முழுவதும் தலித்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. தலித்துக்களை சிறுபான்மையினரை அனைத்து மாநில அரசும் மத்திய அரசும் பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #JusticeKarnan #Karnan #CSKarnan #NewParty
    ×