மணிப்பூர் தலைமை நீதிபதியாக சென்னை ஐகோர்ட் நீதிபதி நியமனம்: ஜனாதிபதி உத்தரவு

மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக டி. கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.இதனால் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை 66 ஆக குறைந்துள்ளது.
மணிப்பூர் தலைமை நீதிபதியாக சென்னை ஐகோர்ட் நீதிபதி நியமனம்: ஜனாதிபதி உத்தரவு
Published on

புதுடெல்லி:

மணிப்பூர் தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிருதுள் நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, சென்னை ஐகோர்ட் மூத்த நீதிபதி டி.கிருஷ்ணகுமாரை மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்க சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அண்மையில் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில், கொலீஜியத்தின் பரிந்துரைஐ ஏற்றுக்கொண்டு மூத்த நீதிபதி டி.கிருஷ்ணகுமாரை மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

தலைமை நீதிபதியுடன் கலந்து ஆலோசித்த ஜனாதிபதி, கிருஷ்ணகுமாரை நியமனத்துக்கு ஒப்புதல் அளித்ததாக மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார். இதன்மூலம் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை 66 ஆக குறைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com