என் மலர்
இந்தியா

நீதித்துறைதான் இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக உள்ளது - பிரதமரின் ஆலோசனை குழு உறுப்பினர்
- பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (EAC) உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் விமர்சித்துள்ளார்.
- நீதிமன்றங்களில் பின்பற்றப்படும் 'மை லார்ட்' போன்ற பழமையான சம்பிரதாயங்கள் மாற்றங்கான வேண்டும்.
இந்தியாவின் நீதித்துறை அமைப்பே, நாட்டை ஒரு வளர்ந்த பொருளாதாரமாக மாற்றுவதற்கான மிகப்பெரிய தடையாக உள்ளது என பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (EAC) உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் விமர்சித்துள்ளார்.
சனிக்கிழமை நடைபெற்ற 'நியாய நிர்மாண் 2025' மாநாட்டில் பேசிய சன்யால், "வளர்ந்த நாடாக மாறுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் 20-25 ஆண்டுகள் மட்டுமே அவகாசம் உள்ளது.
இந்த நேரத்தில் துரிதமான வளர்ச்சி தேவை. ஆனால், நீதி அமைப்பில் உள்ள மெதுவான நடைமுறைகள், அமலாக்கத்தில் உள்ள பலவீனங்கள் மற்றும் வழக்குகளில் தாமதமான தீர்ப்புகள் ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் சவாலாக உள்ளன.
நீதிமன்றங்களில் பின்பற்றப்படும் 'மை லார்ட்' போன்ற பழமையான சம்பிரதாயங்கள், நீண்ட விடுமுறைகள் மற்றும் நீதித்துறையில் உள்ள படிநிலைகள் ஆகியவை மாற்றங்கான வேண்டும்.
நீதித்துறை என்பது ஒரு பொது சேவை. அதை மற்ற அரசு சேவைகளைப் போலவே நவீனமயமாக்க வேண்டும்
நீதித்துறை அமைப்பு முழுமையாக சீர்திருத்தப்படாவிட்டால், விக்சித் பாரத் (வளர்ந்த இந்தியா) என்ற தொலைநோக்கு இலக்கை நாம் அடைய முடியாது" என்று தெரிவித்தார்.






