என் மலர்
நீங்கள் தேடியது "விக்சித் பாரத்"
- பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (EAC) உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் விமர்சித்துள்ளார்.
- நீதிமன்றங்களில் பின்பற்றப்படும் 'மை லார்ட்' போன்ற பழமையான சம்பிரதாயங்கள் மாற்றங்கான வேண்டும்.
இந்தியாவின் நீதித்துறை அமைப்பே, நாட்டை ஒரு வளர்ந்த பொருளாதாரமாக மாற்றுவதற்கான மிகப்பெரிய தடையாக உள்ளது என பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (EAC) உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் விமர்சித்துள்ளார்.
சனிக்கிழமை நடைபெற்ற 'நியாய நிர்மாண் 2025' மாநாட்டில் பேசிய சன்யால், "வளர்ந்த நாடாக மாறுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் 20-25 ஆண்டுகள் மட்டுமே அவகாசம் உள்ளது.
இந்த நேரத்தில் துரிதமான வளர்ச்சி தேவை. ஆனால், நீதி அமைப்பில் உள்ள மெதுவான நடைமுறைகள், அமலாக்கத்தில் உள்ள பலவீனங்கள் மற்றும் வழக்குகளில் தாமதமான தீர்ப்புகள் ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் சவாலாக உள்ளன.
நீதிமன்றங்களில் பின்பற்றப்படும் 'மை லார்ட்' போன்ற பழமையான சம்பிரதாயங்கள், நீண்ட விடுமுறைகள் மற்றும் நீதித்துறையில் உள்ள படிநிலைகள் ஆகியவை மாற்றங்கான வேண்டும்.
நீதித்துறை என்பது ஒரு பொது சேவை. அதை மற்ற அரசு சேவைகளைப் போலவே நவீனமயமாக்க வேண்டும்
நீதித்துறை அமைப்பு முழுமையாக சீர்திருத்தப்படாவிட்டால், விக்சித் பாரத் (வளர்ந்த இந்தியா) என்ற தொலைநோக்கு இலக்கை நாம் அடைய முடியாது" என்று தெரிவித்தார்.
- கொரோனா தொற்று காலத்தின்போது நமது நிதி பற்றாக்குறை அதிகரித்தது.
- இந்த நிதி பற்றாக்குறையை எப்படி நிர்வகிக்கப் போகிறோம் என்பது குறித்து 2021-ல் தெளிவான பார்வையுடன் வந்தோம்
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்களிடம் உரையாடினார். அப்போது மோடி அரசு 2047-க்குள் விக்சித் பாரத் என வளர்ச்சி இந்தியாவுக்கான மாற்றத்திற்கு முக்கியத்தும் கொடுத்து வருகிறது என்றார்.
இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
கொரோனா காலத்தின் போதும் இந்தியா நிதி ரீதியாக விவேகமான கொள்கைகளைப் பின்பற்றியது. சவாலான சூழ்நிலைகள் இருந்தபோதிலும் தேவையற்ற நிதிச் செலவை கட்டுப்படுத்தியது.
கொரோனா தொற்று காலத்தின்போது நமது நிதி பற்றாக்குறை அதிகரித்தது. ஆனால், இந்த நிதி பற்றாக்குறையை எப்படி நிர்வகிக்கப் போகிறோம் என்பது குறித்து 2021-ல் தெளிவான பார்வையுடன் வந்தோம். வருடத்திற்கு வருடம் என்ற இலக்கை நிர்ணயித்தோம். அதன்படி 2026-க்குள் நிதி பற்றாக்குறையை 4.5 சதவீத்திற்கு கீழ் கொண்டு வர உறுதிப்பூண்டோம். நாம் நிர்ணயித்ததுபோன்று தோல்வியின்றி வருடத்திற்கு வருடம் பின்தொடர்ந்து வருகிறோம்.
இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தனது எக்ஸ் பக்கத்தில் "2047-க்குள் வளர்ச்சி இந்தியா (விக்சித் பாரத்) என்பதுதான் நம்முடைய அரசின் முக்கிய கவனம். பெண்கள், ஏழைகள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய நான்கு முக்கிய சாதிகளை கவனித்துக் கொள்வதன் மூலம் இதை அடைய முடியும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
நமது திறன்களை வளர்ப்பதற்கு முக்கியமான Sunrise Sectors மற்றும் இந்தியா உலகளாவிய தலைவராக உருவெடுத்துள்ள டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) போன்ற துறைகளிலும் இந்தியாவின் கவனம் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
- வாட்ஸ்அப் மூலம் "விக்சித் பாரத்" தகவல் அனுப்பும் மத்திய அரசு.
- தேர்தல் நடத்தை விதியை மீறுவதாக தேர்தல் ஆணையத்திடம் புகார்.
இந்தியாவின் 100-வது சுதந்தர தினவிழா கொண்டாடும் 2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக (விக்சித் பாரத்) உருவாக வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்தை பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார். இதை நோக்கி பயணிப்பதாகவும், இதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதாகவும் பிரதமர் மோடி அறிவித்தார்.
மத்திய அரசு "விக்சித் பாரத்" என்ற அத்திட்டம் குறித்து விளம்பரம் செய்து வருகிறது. வாட்ஸ்அப் மூலம் விக்சித் பாரத் திட்டம் பெயரில் தகவல் அனுப்புகிறது.
தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த விளம்பரம் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது என தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரின் வாட்ஸ்அப் மூலம் அனுப்பும் "விக்சித் பாரத்" தொடர்பான தகவலை நிறுத்துமாறு மத்திய அரசை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.






