search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வாட்ஸ்அப்-ல் அனுப்பும் விக்சித் பாரத் தகவலை நிறுத்துங்கள்: தேர்தல் ஆணையம் அதிரடி
    X

    "வாட்ஸ்அப்"-ல் அனுப்பும் "விக்சித் பாரத்" தகவலை நிறுத்துங்கள்: தேர்தல் ஆணையம் அதிரடி

    • வாட்ஸ்அப் மூலம் "விக்சித் பாரத்" தகவல் அனுப்பும் மத்திய அரசு.
    • தேர்தல் நடத்தை விதியை மீறுவதாக தேர்தல் ஆணையத்திடம் புகார்.

    இந்தியாவின் 100-வது சுதந்தர தினவிழா கொண்டாடும் 2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக (விக்சித் பாரத்) உருவாக வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்தை பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார். இதை நோக்கி பயணிப்பதாகவும், இதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதாகவும் பிரதமர் மோடி அறிவித்தார்.

    மத்திய அரசு "விக்சித் பாரத்" என்ற அத்திட்டம் குறித்து விளம்பரம் செய்து வருகிறது. வாட்ஸ்அப் மூலம் விக்சித் பாரத் திட்டம் பெயரில் தகவல் அனுப்புகிறது.

    தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த விளம்பரம் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது என தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

    அதன்பேரின் வாட்ஸ்அப் மூலம் அனுப்பும் "விக்சித் பாரத்" தொடர்பான தகவலை நிறுத்துமாறு மத்திய அரசை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

    Next Story
    ×