search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Human Rights Commission"

    • இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே பிரிஜ் பூஷனை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த போராட்டம் 19-வது நாளாக நீடித்து வருகிறது.

    தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுக்கும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண்சிங்கை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நேற்று வேண்டுகோள் விடுத்தனர்.

    இந்நிலையில் பாலியல் தொல்லை புகார்களை விசாரிக்க குழு அமைக்காத விவகாரம் தொடர்பாக பல்வேறு அமைப்புகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    மத்திய விளையாட்டுத்துறை, இந்திய கிரிக்கெட் வாரியம், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    பாலியல் விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் மீது தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மனித உரிமை ஆணையத்தில் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் வக்கீல் சுரேஷ்பாபு புகார் மனு அளித்துள்ளார். #MinisterJayakumar #JayakumarAudio
    சென்னை:

    அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணுடன் போனில் பேசுவது போன்ற ஒரு ஆடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    எனது மகள் சிபாரிசுக்காக வந்தபோது கர்ப்பமாக்கி விட்டீர்களே என்று பெண் கேட்கிறார். அமைச்சர் ஜெயக்குமாரை போன்ற குரலில் பேசுபவர் நேரில் வாருங்கள் பேசிக் கொள்ளலாம் என்கிறார். வெவ்வேறு நாட்களில் 2 முறை அவர்கள் பேசியது போன்ற பாலியல் ஆடியோவுடன் பிறப்பு சான்றிதழ் ஒன்றும் வெளியாகி உள்ளது. அதில் தந்தை என்கிற இடத்தில் டி.ஜெயக்குமார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த பாலியல் விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.



    இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மனித உரிமை ஆணையத்தில் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் வக்கீல் சுரேஷ்பாபு புகார் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு அமைச்சர் ஜெயக்குமாருக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே தன் மீதான புகாரை அமைச்சர் ஜெயக்குமார் மறுத்துள்ளார். #MinisterJayakumar #JayakumarAudio


    தூத்துக்குடி சூப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நேரடி விசாரணை நடத்துகிறது. உண்மை கண்டறியும் குழுவை உடனே அனுப்புகிறது. #Thoothukudifiring #NHRC
    புதுடெல்லி:

    தமிழகத்தை சேர்ந்த வக்கீல் ஏ.ராஜராஜன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சபரீஷ் சுப்பிரமணியன், டெல்லி ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் கூறி இருப்பதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந்தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி நடந்த போது போலீசாருக்கும், மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் பலியாகினர். மிகவும் கவலை அளிக்கக்கூடிய இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக தலையிடுமாறு கோரிக்கை வைத்தோம். ஆனால் தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக தலையிடாமல் தமிழக அரசிடமும், டி.ஜி.பி.யிடமும் அறிக்கை கேட்டு உள்ளது.

    இந்த சம்பவத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் விரைந்து செயல்படாவிட்டால் மேலும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடரும். போலீசார் தங்களின் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக இருக்கும் ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது. எனவே தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக தலையிட்டு துப்பாக்கி சூடு நடந்த இடங்களை கள ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த வழக்கில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கை கடந்த மே 25-ந்தேதியன்று விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி ராஜீவ் சக்தேர் அமர்வு தீர்ப்பு வழங்கியது.

    அந்த தீர்ப்பில், வழக்குதாரரின் கோரிக்கையை தேசிய மனித உரிமை ஆணையம் உடனடியாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். 29-ந்தேதி தேசிய மனித உரிமை ஆணையத்தில் வழக்குதாரர் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்கலாம்; அன்றைய தினமே வழக்குதாரர் தாக்கல் வழக்கு பற்றி தேசிய மனித உரிமை ஆணையம் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

    அதைத்தொடர்ந்து வழக்குதாரர் ஏ.ராஜராஜன் மற்றும் வக்கீல் சபரீஷ் சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று தேசிய மனித உரிமை ஆணையத்தில் ஆஜரானார்கள்.

    அவர்களின் வழக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம், இது தொடர்பாக நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்து உள்ளது. அந்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-



    தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து, விசாரணை நடத்தி, இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வு உரிமை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாக கருத்து தெரிவித்து உள்ளது.

    இந்த நிலையில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான தேசிய யூனியன் துணைத்தலைவர் ஏ.ராஜராஜன் தாக்கல் செய்துள்ள கோரிக்கையின் அடிப்படையிலும், டெல்லி ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை தொடர்ந்தும் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து களத்தில் நேரடி விசாரணை நடத்துவதற்கு தேசிய மனித உரிமை ஆணையம் சார்பில் குழுவை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    மூத்த போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் மூன்று துணை சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்களை கொண்டு உண்மை கண்டறியும் குழுவை தேசிய மனித உரிமை ஆணையத்தின் டைரக்டர் ஜெனரல் (புலனாய்வு) அமைக்க வேண்டும். இந்த குழு உடனடியாக தூத்துக்குடிக்கு சென்று, கடந்த 22-ந்தேதி அன்று நடைபெற்ற துப்பாக்கி சூடு குறித்து களத்தில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

    அந்த விசாரணையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டு 2 வாரங்களுக்குள் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    கடந்த 23-ந்தேதி தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி ஆகியோருக்கு இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த நிலைத்தகவல் அறிக்கையை 15 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் பிறப்பித்துள்ள முந்தைய உத்தரவில் இருந்து, தற்போது பிறப்பித்து உள்ள இந்த உத்தரவு தனித்து வெளியிடப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #Thoothukudifiring #NHRC
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித விசாரணை ஆணையத்தின் 4 அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்த தூத்துக்குடி வர உள்ளனர். #ThoothukudiShooting #NHRC
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து, ஆலையை மூட தமிழக அரசு நேற்று அரசாரணை பிறப்பித்தது. துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிப்பார்கள் என டிஜிபி இன்று அறிவித்துள்ளார்.

    துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் மனித உரிமைகள் பெருமளவில் மீறப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படவில்லை எனவும் தேசிய மனித உரிமை ஆணையத்தில் பல புகார்கள் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.



    இந்நிலையில், தேசிய மனித உரிமை ஆணையத்தின் 4 அதிகாரிகள் தூத்துக்குடி வருகை தந்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக நேரடியாக விசாரணை நடத்த உள்ளனர். துப்பாக்கிச்சூடு நடந்த இடம், பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோரை சந்தித்து அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஏற்பட்ட உயிர்ப்பலி தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #SterliteProtest #ThoothukudiFiring #NHRCnotice
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 11 பேர் பலியாகினர். காயமடைந்த மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

    போராட்டக்காரர்களை கலைக்க எவ்வளவோ யுக்திகள் இருந்தும், தேச விரோதிகளை சுடுவது போன்று சரமாரியாக சுட்டுத் தள்ளியது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.



    இந்நிலையில், தூத்துக்குடி கலவரம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    கலவரத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்தும், காவல்துறையினர் துப்பாக்கியை உபயோகித்தது ஏன்? என்பது குறித்தும் கேள்வி எழுப்பி உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் 2 வாரத்தில் பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

    துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து தூத்துக்குடியில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இது தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகமும் அறிக்கை கேட்டுள்ளது.

    தூத்துக்குடி கலவரம், துப்பாக்கி சூடு தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #SterliteProtest #ThoothukudiFiring #NHRCnotice
    ×