என் மலர்
நீங்கள் தேடியது "sexual harassment complaint"
- எந்த கல்லூரியிலும் பணியாற்ற விடாமல் இடையூறு.
- மாநில பெண்கள் ஆணையத்திற்கும், உயர்கல்வித்துறைக்கும் புகார் மனு.
நெல்லை:
நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த இளம்பெண் கடந்த 2021-ம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழ கத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
இந்நிலையில் அங்குள்ள பேராசிரியர் ஒருவர் அந்த மாணவி பட்டம் பெறுவதற்கு தாமதம் ஏற்படுத்தி பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வந்துள்ளார். இதன் காரணமாக நீண்ட போராட்டத்திற்கு பிறகு அங்குள்ள பேராசிரியர் மீது அந்த இளம் பெண் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்து முனைவர் பட்டத்தை பெற்றுள்ளார்.
இதன் காரணமாக சம்பந்தப்பட்ட துறை பேராசிரியர் இந்த மாணவியை எந்த கல்லூரியிலும் பணியாற்ற விடாமல் இடையூறு ஏற்படுத்தி வந்துள்ளார்.
தற்போது மனோன்மணி யம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக பேராசிரியராக பணியாற்றி வரும் இந்த பெண்ணுக்கு சில மாணவர்களை வைத்து பொய் புகார் கொடுத்து தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும், முனைவர் பட்டம் பெரும் காலத்தில் இருந்து பாலியல் ரீதியான ஆசைக்கு ஒத்துழைக்காத காரணத்தால் நீண்ட ஆண்டுகளாக தன்னுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பெண் பேராசிரியர் மாநில பெண்கள் ஆணையத்திற்கும், உயர்கல்வித்துறைக்கும் புகார் மனு அளித்துள்ளார்.
இந்த புகார் மனு எதிரொலியாக மாநில உயர்கல்வித்துறை விசாரணை நடத்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மாநில பெண்கள் ஆணையமும் நேரில் வந்து பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்த உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
- தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை
- ஆடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை:
கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (வயது37). இவரது சொந்த ஊர் நெல்லை. ஜான் ஜெபராஜ் கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் செயல்பட்ட கிறிஸ்தவ சபையின் மத போதகராக இருந்தார். ஜான் ஜெபராஜ் பாப் இசையின் மூலம் பாடல்களை பாடி இளைஞர்களை கவர்ந்து வந்தார்.
இவர் தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநி லங்ளுக்கும் சென்று பாப் இசை நிகழ்ச்சி நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கோவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது 2 சிறுமிகள் பாலியல் புகார் கொடுத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜான் ஜெபராஜ் கடந்த ஆண்டு மே மாதம் 21-ந் தேதி அவரது வீட்டில் நிகழ்ச்சி ஒன்றினை நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில், கோவையை சேர்ந்த 17 மற்றும் 16 வயதுடைய 2 சிறுமிகளும் பங்கேற்றுள்னர்.
அப்போது, ஜான் ஜெபராஜ் அந்த சிறுமிகளை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
மதபோதகர் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானதை தொடர்ந்து, மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
அவரை கைது செய்வதற்காக ஜி.என்.மில்சில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் அவர் இல்லை.போலீசார் வழக்குப்பதிவு செய்து தன்னை தேடுவதை அறிந்ததும் அவர் தலைமறைவாகி விட்டார்.
தலைமறைவான அவரை பிடிக்க இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் தலைமறைவான ஜான் ஜெபராஜ் பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர். பெங்களூர் நகர் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஜான் ஜெபராஜின் சொந்த ஊர் நெல்லை என்பதால் அவர் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளது என்பதால் போலீசார் அங்கும் முகாமிட்டு, அவரை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே தலைமறைவாக உள்ள மதபோதகர் ஜான் ஜெபராஜ் பேசி முன்பு வெளியிட்ட ஆடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், அவர் தனது மனைவியிடம், என்ன நடந்தது என்று உனக்கும் தெரியும். உனக்கும், எனக்கும் இடையே உள்ள சிறிய பிரச்சினையை வைத்து, ஒருவர் நம்மிடம் விளையாண்டு விட்டார்.உனக்கு ஒரு விஷயம் புரிய வேண்டும். இந்த மாதிரி பிரச்சினைகள் நடக்கிறபோது எல்லா மனிதருக்கும் முதலில் தோன்றுவது தற்கொலை எண்ணம் தான்.
எனக்கும் அதுபோன்று தோன்றியது. நான் 4-5 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளேன். 3 மாதம் மன அழுத்தத்தில் இருந்தேன். சாப்பிடவில்லை. 9 கிலோ வரை குறைந்து விட்டேன்.
நான் தவறு செய்து விட்டு, அது செய்தேன். இது செய்தேன் என கூறுகிறாய் என நினைக்கலாம். என்ன நடந்தது என்று நமக்கு தெரியும். நான் தவறு செய்திருந்தால், அதனை கடவுள் பார்த்துக்கொள்வார்.
இவ்வாறு அந்த ஆடியோவில் அவர் பேசியுள்ளார்.
இதேபோல மேலும் சில ஆடியோக்களையும் ஜான்ஜெபராஜ் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த ஆடியோ விவரங்களையும் கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே பிரிஜ் பூஷனை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த போராட்டம் 19-வது நாளாக நீடித்து வருகிறது.
தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுக்கும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண்சிங்கை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நேற்று வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில் பாலியல் தொல்லை புகார்களை விசாரிக்க குழு அமைக்காத விவகாரம் தொடர்பாக பல்வேறு அமைப்புகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய விளையாட்டுத்துறை, இந்திய கிரிக்கெட் வாரியம், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.






