என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu Department of Higher Education"

    • எந்த கல்லூரியிலும் பணியாற்ற விடாமல் இடையூறு.
    • மாநில பெண்கள் ஆணையத்திற்கும், உயர்கல்வித்துறைக்கும் புகார் மனு.

    நெல்லை:

    நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த இளம்பெண் கடந்த 2021-ம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழ கத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

    இந்நிலையில் அங்குள்ள பேராசிரியர் ஒருவர் அந்த மாணவி பட்டம் பெறுவதற்கு தாமதம் ஏற்படுத்தி பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வந்துள்ளார். இதன் காரணமாக நீண்ட போராட்டத்திற்கு பிறகு அங்குள்ள பேராசிரியர் மீது அந்த இளம் பெண் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்து முனைவர் பட்டத்தை பெற்றுள்ளார்.

    இதன் காரணமாக சம்பந்தப்பட்ட துறை பேராசிரியர் இந்த மாணவியை எந்த கல்லூரியிலும் பணியாற்ற விடாமல் இடையூறு ஏற்படுத்தி வந்துள்ளார்.

    தற்போது மனோன்மணி யம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக பேராசிரியராக பணியாற்றி வரும் இந்த பெண்ணுக்கு சில மாணவர்களை வைத்து பொய் புகார் கொடுத்து தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும், முனைவர் பட்டம் பெரும் காலத்தில் இருந்து பாலியல் ரீதியான ஆசைக்கு ஒத்துழைக்காத காரணத்தால் நீண்ட ஆண்டுகளாக தன்னுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பெண் பேராசிரியர் மாநில பெண்கள் ஆணையத்திற்கும், உயர்கல்வித்துறைக்கும் புகார் மனு அளித்துள்ளார்.

    இந்த புகார் மனு எதிரொலியாக மாநில உயர்கல்வித்துறை விசாரணை நடத்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் மாநில பெண்கள் ஆணையமும் நேரில் வந்து பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்த உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • முதற்கட்ட கலந்தாய்வு வருகிற 15-ந்தேதி வரை நடக்கிறது.
    • வகுப்புகள் அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்கும்.

    சென்னை:

    தமிழக உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் 169 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், பி.எஸ்.சி. பி.காம். பி.ஏ என பல்வேறு பாடப்பிரிவுகளில் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன.

    இதற்கான, 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 6-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 527 விண்ணப்பங்கள் குவிந்தன. அதில், 2 லட்சத்து 11 ஆயிரத்து 10 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தினார்கள்.

    இந்த சூழலில், கடந்த மாதம் 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் இடங்களை பெற்றார்கள்.

    இந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2024-25-ம் கல்வியாண்டுக்கான பொதுத் பிரிவு கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

    முதற்கட்ட கலந்தாய்வு வருகிற 15-ந்தேதி வரை நடக்கிறது. தரவரிசை பட்டியல் அடிப்படையில் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவாரகள். 2-ம் கட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு வருகிற 24-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெறும்.

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலந்தாய்வில் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் அடுத்த மாதம் (ஜூலை) 3-ந்தேதி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×