என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rowdy Nagendran"

    • வடசென்னை தாதா நாகேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
    • நாகேந்திரனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்த வடசென்னை தாதா நாகேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார்.

    அவரது மரணம் தொடர்பாக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் மாதவரம் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு தீபா விசாரணை நடத்தினார். இதன்பிறகு நாகேந்திரனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

    இதனைத் தொடர்ந்து வியாசர்பாடி எஸ்.எம்.நகரில் உள்ள வீட்டுக்கு நாகேந்திரனின் உடல் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அஞ்சலி செலுத்தியவுடன் கொடுங்கையூர் முல்லை நகர் மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில், ரவுடி நாகேந்திரன் உடல் முன்னே அவரது 2ஆவது மகன் அஜித் திருமணம் செய்துகொண்டார். அஜித் தனக்கு நிச்சயிக்கப்பட்ட ஷகினா என்ற பெண்ணுக்கு தாலி கட்டப்பட்டு மாலை மாற்றி கொண்டனர். துக்க நிகழ்வில் இருவரும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    அவர் தாலி கட்டிய அந்த சமயம் அருகாமையில் இருந்து அவரது உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் சோகத்தில் கண்கலங்கியப்படி அர்ச்சனையை தூவினர்.

    • ரவுடி நாகேந்திரன் கல்லீரல் பிரச்சனை காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
    • சிகிச்சை பலனின்றி ரவுடி நாகேந்திரன் இன்று உயிரிழந்தார்.

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜூலை 5-ம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான A1 குற்றவாளியான ரவுடி நாகேந்திரன் கல்லீரல் பிரச்சனை காரணமாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ரவுடி நாகேந்திரன் இன்று உயிரிழந்தார்.

    சென்னையில் ரவுடி நாகேந்திரன் மரணத்தையடுத்து கூடுதலாக காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாகேந்திரன் வீடு அமைந்துள்ள வியாசர்பாடி முல்லை நகர் அருகே 250க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • வேலூர் சிறையில் இருந்து சென்னை அழைத்து வரும்போது என்கவுன்ட்டர்செய்ய திட்டம்.
    • தேசிய மனித உரிமை ஆணையத்தில் நாகேந்திரன் மனைவி மனு தாக்கல் செய்துள்ளார்.

    சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் இதுவரை 14 ரவுடிகள் கைது செய்யப்பட்டு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், ரவுடி திருவேங்கடம் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    மேலும், ரவுடிகளிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.

    இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் ரவுடி நாகேந்திரனுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் பரவியது.

    இந்த விவகாரம் தொடர்பாக, ரவுடி நாகேந்திரனை என்கவுன்ட்டரில் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக அவரது மனைவி விசாலாட்சி தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அதன்படி, வேலூர் சிறையில் இருந்து சென்னை அழைத்து வரும்போது என்கவுன்ட்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாக புகார் தெரவித்துள்ளார்.

    அதனால், உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி தேசிய மனித உரிமை ஆணையத்தில் நாநே்திரன் மனைவி மனு தாக்கல் செய்துள்ளார்.

    • நாகேந்திரன் உடல்நிலை குறித்து சென்னை அரசு மருத்துவக்கல்லூரி அறிக்கை தாக்கல் செய்தது.
    • நாகேந்திரனை தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்து அறிக்கையில் இல்லை எனக்கூறி மறுப்பு.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    நாகேந்திரனை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    கல்லீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் நாகேந்திரனை அனுமதிக்கக்கோரி மனைவி மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி நாகேந்திரன் உடல்நிலை குறித்து சென்னை அரசு மருத்துவக்கல்லூரி அறிக்கை தாக்கல் செய்தது.

    நாகேந்திரனை தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்து அறிக்கையில் இல்லை எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    ×