என் மலர்

  செய்திகள்

  சபரிமலைக்குள் செல்ல போலீஸ் பாதுகாப்பு வேண்டும் - 4 பெண்கள் கேரள நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
  X

  சபரிமலைக்குள் செல்ல போலீஸ் பாதுகாப்பு வேண்டும் - 4 பெண்கள் கேரள நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் தடுக்கப்பட்டு வரும் நிலையில், 2 வழக்கறிஞர்கள் உட்பட 4 பெண்கள் சபரிமலைக்கு செல்ல போலீஸ் பாதுகாப்பு வேண்டி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #KeralaHighCourt #SabarimalaTemple
  திருவனந்தபுரம்:

  சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து இந்து மக்கள் அமைப்புகளும், பாஜகவும் போர்க்கொடி தூக்கினர். சபரிமலைக்குள் செல்ல முயலும் பெண்களை வழிமறைத்து போராட்டங்கள் நடத்தி திருப்பி அனுப்பினர்.

  மேலும், போராட்டக்காரர்கள் மற்றும் பக்தர்களின் வலியுறுத்தலால் தேவசம் போர்டு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய சம்மதித்தது. மேலும், பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்கள் நவம்பர் 13-ம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்து இருந்தது.  இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என 2 வழக்கறிஞர்கள் உட்பட 4 பெண்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, கோவிலுக்குள் செல்ல பாதுகாப்பு அளிக்கும்படி அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். #KeralaHighCourt #SabarimalaTemple
  Next Story
  ×