search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "laborer"

    • மதுபோதையில் அந்தியூர் பஸ் நிலையத்திலேயே இருசப்பன் படுத்து தூங்கியுள்ளார்.
    • இந்த நிலையில் காலையில் பஸ் நிலையத்திலேயே இறந்து கிடந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் அருகே உள்ள விளாமரத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் இருசப்பன் (40). இவருக்கு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 வருடங்களாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருசப்பன் விவசாய கூலி வேலைகள் செய்து வந்தார்.

    அதிக வயிற்று வலிக்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பப்பாளி பறிக்கும் வேலைக்காக உடுமலைக்கு சென்றவர் மீண்டும் வீட்டுக்கு செல்ல அந்தியூர் வந்துள்ளார். இரவு மதுபோதையில் அந்தியூர் பஸ் நிலையத்திலேயே இருசப்பன் படுத்து தூங்கியுள்ளார்.

    இந்த நிலையில் காலையில் பஸ் நிலையத்திலேயே இறந்து கிடந்தார். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் வந்து இருசப்பனை ஆம்புலன்ஸ் மூலமாக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் இருசப்பன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா மங்கள புரம் அருகே உள்ள உரம்பு பகுதியில் கூலித் தொழிலாளி விஷம் அருந்தியதாக கூறப்படுகிறது. இதை யடுத்து உயிருக்கு போரா டிக் கொண்டிருந்த அவரை, நாமக்கல் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று தங்கதுரை பரிதாபமாக இறந்தார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா மங்கள புரம் அருகே உள்ள உரம்பு பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன்

    தங்கதுரை (வயது46). விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி அன்னக்கொடி (41). கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கதுரை, வீட்டில் விஷம் அருந்தியதாக கூறப்படுகிறது. இதை யடுத்து உயிருக்கு போரா டிக் கொண்டிருந்த அவரை,

    நாமக்கல் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று தங்கதுரை பரிதாபமாக இறந்தார். இதுபற்றி மங்களபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். 

    • களக்காடு அருகே உள்ள மேலகாடுவெட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி வள்ளிக்கண்ணு (வயது65).இவரது மகன் பூல்பாண்டி. டிரைவர்.
    • வள்ளிக்கண்ணு பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த பூல்பாண்டி அவரை அவதூறாக பேசி தாக்கினார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மேலகாடுவெட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி வள்ளிக்கண்ணு (வயது65).இவரது மகன் பூல்பாண்டி. டிரைவராக உள்ளார்.

    பூல்பாண்டிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் அவருக்கும், அவரது மனைவி செல்வ அரசிக்கும் தகராறு ஏற்பட்டது.

    இதனால் செல்வ அரசி கணவரை விட்டு பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். சம்பவத்தன்று வள்ளிக்கண்ணு கணேசன் என்பவருடன் பைக்கில் களக்காடு வந்து கொண்டிருந்தார். ஜெ.ஜெ.நகர் விலக்கு அருகே வந்த போது அங்கு பூல்பாண்டி நின்று கொண்டிருந்தார்.

    இதைப்பார்த்த வள்ளிக்கண்ணு, பூல்பாண்டியிடம் சென்று வேலைக்கு செல்லாமல் இங்கு என்ன செய்கிறாய்? எனக் கேட்டுள்ளார். அதற்கு பூல்பாண்டி மது அருந்த பணம் தருமாறு கேட்டுள்ளார். வள்ளிக்கண்ணு பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த பூல்பாண்டி அவரை அவதூறாக பேசி தாக்கினார்.

    மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி பூல்பாண்டியை தேடி வருகின்றனர்.

    • களக்காடு அருகே உள்ள மூங்கிலடி வெப்பல் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (வயது 42). கூலி தொழிலாளி.
    • வீட்டை தனது பெயருக்கு எழுதி தருமாறு தந்தை அல்போன்சிடம் கேட்டார். இதனை அறிந்த அவரது தம்பி செல்வகுமாருக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மூங்கிலடி வெப்பல் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (வயது 42). கூலி தொழிலாளி. இவர் தனது தந்தை அல்போன்ஸ்க்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார். அந்த வீட்டை தனது பெயருக்கு எழுதி தருமாறு தந்தை அல்போன்சிடம் கேட்டார். இதனை அறிந்த அவரது தம்பி செல்வகுமாருக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த செல்வகுமார், ஸ்டீபன்ராஜை கம்பால் தாக்கினார்.

    மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதனால் காயம் அடைந்த ஸ்டீபன்ராஜ் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப் பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராம நாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அண்ண னை தாக்கிய செல்வகுமாரை தேடி வருகிறார்.

    • வடமாநில தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் சம்பவ இடத்திற்கு சென்று கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கலிங்காபுரம் பகுதியில் ஏராளமான வடமாநில இளைஞர்கள் வீடு எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள் இங்குள்ள மில் மற்றும் தனியார் நிறுவனங்களிலும், சாலை அமைத்தல், கட்டிட வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை சொக்கலிங்காபுரம் பகுதியில் வடமாநில இளைஞர்களிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இருபிரிவாக அவர்கள் கம்பு, கல் போன்றவற்றால் சரமாரியாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இதில் கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட 28 வயது மதிக்கத்தக்க வடமாநில தொழிலாளி படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் சம்பவ இடத்திற்கு சென்று கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சரஸ்வதி (வயது 65). துவாக்குடி பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றார்
    • பஸ்சுக்கு காத்திருந்த சரஸ்வதியிடம் நானும் ஊருக்குத்தான் செல்கிறேன், மோட்டார் சைக்கிளில் ஏறுங்கள், வீட்டில் கொண்டு சென்று விடுகிறேன் என கூறினார்.

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள பிடாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டிச்சாமி மனைவி சரஸ்வதி (வயது 65). இவர் துவாக்குடி பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து ஊர் திரும்புவதற்காக துவாக்குடி பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.

    அப்போது பிடாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (45) என்பவர் மோட்டார் சைக்கிளில் துவாக்குடி பஸ் நிலையம் பகுதிக்கு வந்தார். பின்னர் பஸ்சுக்கு காத்திருந்த சரஸ்வதியிடம் நானும் ஊருக்குத்தான் செல்கிறேன், மோட்டார் சைக்கிளில் ஏறுங்கள், வீட்டில் கொண்டு சென்று விடுகிறேன் என கூறினார்.

    இதையடுத்து அந்த மூதாட்டி வெள்ளைச்சாமியின் மோட்டார் சைக்கிளில் ஏறினார். பின்னர் வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளில் இருந்து சரஸ்வதி இறங்கிய நிலையில் அவரை வெள்ளைச்சாமி கட்டி அணைத்து தவறாக நடக்க முயன்றதாக கூறப்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி கூச்சலிட்டார். உடனே வெள்ளைச்சாமி அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றார். இதுபற்றி துவாக்குடி போலீஸ் நிலையத்தில் சரஸ்வதி புகார் செய்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவீந்திரகுமார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான வெள்ளைசாமியை தேடி வருகிறார்.

    • பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள மேட்டுப்பாளையம் அருந்ததியர் காலனியில் ரிக் வண்டி தொழிலாளி மர்மான முறையில் பாலியானர்.
    • இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டி பகுதியில் செங்கோட்டுவேலு மயங்கிய நிலையில் கிடந்தார்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள மேட்டுப்பாளையம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் செங்கோட்டுவேலு (வயது 53).இவர் தனது மனைவி குப்பாயியுடன் வசித்து வந்தார்.

    செங்கோட்டுவேலு‌ ரிக் வண்டி ஒன்றில் டிரில்லராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் அவரை குப்பாயி கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டி பகுதியில் செங்கோட்டுவேலு மயங்கிய நிலையில் கிடந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற பரமத்தி போலீசார், அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செங்கோட்டுவேலு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவத்தன்று செங்ேகாட்டுவேலுவை யாரேனும், தாக்கினார்களா? அல்லது விஷம் குடித்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை அருகே தலையில் கல்லை போட்டு கூலித்தொழிலாளியை கொல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
    • ஆத்திரத்தில் கீழே கிடந்த கல்லை எடுத்து தலையில் போட்டு விட்டதாக தெரிவித்தார்.

    மதுரை

    மதுரை ஒத்தக்கடை பஞ்சாயத்து போர்டு அலுவலகம் எதிரே, 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடுவதாக ராஜகம்பீரம் கிராம நிர்வாக அதிகாரி மகாலிங்கத்திற்கு தகவல் வந்தது. இதனைத்தொடர்ந்து அவர் சம்பவ இடத்துக்கு வந்தார்.

    அதன் பிறகு படுகாயம் அடைந்தவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஒத்தக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் படுகாயம் அடைந்தவர், பொள்ளாச்சியை சேர்ந்த பழனி (வயது 45) என்பது தெரியவந்தது. இவர் மதுரை ஒத்தக்கடையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

    இவருக்கு கஞ்சா, மது பழக்கங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே பழனியுடன் சுற்றித் திரிந்ததாக, வாலிபர் ஒருவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர் மலைச்சாமிபுரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது சதீஷ்குமார் கூறுகையில், "நான் மதுபானம் வாங்குவதற்காக பழனியிடம் பணம் கேட்டேன். அவர் தர மறுத்தார். எனவே ஆத்திரத்தில் கீழே கிடந்த கல்லை எடுத்து தலையில் போட்டு விட்டு தப்பி சென்று விட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து பழனியை கொல்ல முயன்றதாக சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    • கோழிப்பண்ணை தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.
    • இதுகுறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த விஜயமங்கலம், கினிபாளையம் அரிஜன காலனியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 53). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கோழி பண்ணையில் கோழி முட்டை ஏற்றும் லோடுமேனாக வேலை செய்து வந்தார்.

    இவர் கடந்த 2 மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். மேலும் இவர் மது குடி குடித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அவரது குடும்பத்தினர் கண்ணனை ஏன் வேலைக்கு செல்லா மல் குடித்து கொண்டு இருக்கிறீர்கள் என கண்டி த்தனர்.

    இந்த நிலையில் கண்ணன் சம்பவத்தன்று இரவு கினிப்பாளையம் பட்டத்து அரசி அம்மன் கோவிலில் தூங்கிக் கொள்வதாக கூறி விட்டு சென்றார்.

    ஆனால் மறுநாள் காலை வீட்டுக்கு வரவில்லை. அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. அவர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று மதியம் ஒருவர் கிணிப்பாளையம் குமரன் நகரில் உள்ள ஒரு பொது கிணற்றில் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி கிணற்றுக்குள் இருந்த பிணத்தை மீட்டனர்.

    போலீசார் விசாரணையில் அவர் வீட்டை விட்டு வெளியே சென்ற கண்ணன் எறும் கிணற்றின் மீது தூங்கிய போது தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது. இது பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • இந்நிலையில் நேற்று காலை வெங்கடேசன் உறவினர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்தனர். நேற்று மதியம் திடீரென வெங்கடேசன் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு உள்ள ஈ.வி.என். ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • தலைமறைவாக இருந்த மாரிமுத்துவை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர். வெங்கடேசனை தற்கொ–லைக்கு தூண்டியதாக மாரிமுத்து மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம், சிந்தன் நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (42). பழைய இரும்பு வியாபாரி. இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வெங்கடேஷ் தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய தகவல் கிடைத்ததும் கருங்கல்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வெங்கடேசன் உறவினர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்தனர். நேற்று மதியம் திடீரென வெங்கடேசன் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு உள்ள ஈ.வி.என். ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசாரிடம் அவர்களது உறவினர்கள் கூறும்போது,

    சம்பவத்தன்று இரவு வெங்கடேசன் தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்த போது உறவினர் மாரிமுத்து என்பவர் மது குடிப்பதற்கு அவரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் அவரைப் பற்றியும், அவரது குடும்பத்தை பற்றியும் மாரிமுத்து தரக்குறைவாக பேசியுள்ளார்.

    அதன் பின் வெங்கடேசன் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டிற்கும் வந்த மாரிமுத்து மீண்டும் தரகுறைவாக பேசி உள்ளார். இதனால் மன உளைச்சலில் வெங்கடேஷ் விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

    இதையடுத்து மாரிமுத்துவை பிடிக்க 2 தனிப்படை அமைக்க ப்பட்டது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த மாரிமுத்துவை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர். வெங்கடேசனை தற்கொ–லைக்கு தூண்டியதாக மாரிமுத்து மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

    வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் மீது சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 38) கட்டிட தொழிலாளி. அவருடன் அதே கிராமத்தைச்சேர்ந்த தேசூ (40), சரவணன் (28) ஆகியோர் கட்டிட வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள ஒரு சிக்கன் பகோடா கடை முன்பாக தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது மேல் மருவத்தூர் சாலையில் இருந்து வந்தவாசி நோக்கி 2 மோட்டார் சைக்கிளில் தீயணைப்பு நிலைய பின் பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் அதிவேகமாகவும் பேசிக் கொண்டிருந்தவர்கள் மீது உரசியபடி சென்றுள்ளனர்.

    தொழிலாளர்கள் 3 பேரும் ஏன் இது போல் வேகமாக செல்கின்றீர்கள் என தட்டி கேட்டனர். அதற்கு 4 வாலிபர்களும் அப்படித்தான் செல்வோம் உன்னால் என்ன பன்ன முடியும் என கேட்டு தகராறு செய்தனர்.

    அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெருமாளை முகத்தின் மீது தாக்கியுள்ளனர்.

    தடுக்க வந்த தேசூ, சரவணன் ஆகியோரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த பெருமாள் உள்ளிட்ட 3 பேரும் வந்தவாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து பெருமாள் வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் வழக்குப்பதிவு செய்து. தீயணைப்பு நிலையம் பின் பகுதியைச் சேர்ந்த 4 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #tamilnews
    பாவூர்சத்திரம் அருகே மரணமடைந்த கூலித்தொழிலாளி கழுத்தில் இரத்த காயம் இருந்ததை அடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கரிசலூரை சேர்ந்தவர் ஆறுமுக நயினார் என்ற குட்டி (வயது 40). கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி(37). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 20-ந் தேதி ஆறுமுகநயினார் என்ற குட்டி குடும்பத்துடன் பெத்தநாடார்பட்டியில் உள்ள மாயாண்டி கோவில் திருவிழாவுக்கு சென்றார்.இரவில் ஜெயந்தி மற்றும் குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தான் பட்டிமன்றம் பார்த்துவிட்டு வருவதாக கூறினார்.

    இந்த நிலையில் ஆறுமுகநயினார் என்ற குட்டி 21-ந் தேதி காலை வரை வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த ஜெயந்தி பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் மகிழ்வண்ணநாதபுரம் குளத்தில் ஆறுமுகநயினார் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    அப்போது ஆறுமுகநயினார் முட்டளவு உள்ள தண்ணீரில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்தில் ஊசி போன்ற பொருளை வைத்து குத்திய ரத்தக்காயம் இருந்தது. உடனடியாக போலீசார் அவரது உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகே அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும். இந்நிலையில் பாவூர்சத்திரம் கரிசலூர் பகுதியில் அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #tamilnews
    ×