களக்காடு அருகே தொழிலாளி மீது தாக்குதல்-தம்பிக்கு வலைவீச்சு

களக்காடு அருகே உள்ள மூங்கிலடி வெப்பல் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (வயது 42). கூலி தொழிலாளி.வீட்டை தனது பெயருக்கு எழுதி தருமாறு தந்தை அல்போன்சிடம் கேட்டார். இதனை அறிந்த அவரது தம்பி செல்வகுமாருக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டது.
களக்காடு அருகே தொழிலாளி மீது தாக்குதல்-தம்பிக்கு வலைவீச்சு
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள மூங்கிலடி வெப்பல் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (வயது 42). கூலி தொழிலாளி. இவர் தனது தந்தை அல்போன்ஸ்க்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார். அந்த வீட்டை தனது பெயருக்கு எழுதி தருமாறு தந்தை அல்போன்சிடம் கேட்டார். இதனை அறிந்த அவரது தம்பி செல்வகுமாருக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த செல்வகுமார், ஸ்டீபன்ராஜை கம்பால் தாக்கினார்.

மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதனால் காயம் அடைந்த ஸ்டீபன்ராஜ் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப் பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராம நாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அண்ண னை தாக்கிய செல்வகுமாரை தேடி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com