வடமாநில தொழிலாளி கொலை

வடமாநில தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் சம்பவ இடத்திற்கு சென்று கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
வடமாநில தொழிலாளி கொலை
Published on

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கலிங்காபுரம் பகுதியில் ஏராளமான வடமாநில இளைஞர்கள் வீடு எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள் இங்குள்ள மில் மற்றும் தனியார் நிறுவனங்களிலும், சாலை அமைத்தல், கட்டிட வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை சொக்கலிங்காபுரம் பகுதியில் வடமாநில இளைஞர்களிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இருபிரிவாக அவர்கள் கம்பு, கல் போன்றவற்றால் சரமாரியாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதில் கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட 28 வயது மதிக்கத்தக்க வடமாநில தொழிலாளி படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் சம்பவ இடத்திற்கு சென்று கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com