search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "top"

    • உலகின் பணக்கார குடும்பங்களின் பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் குடும்பம் முதலிடத்தில் உள்ளது.
    • இந்த குடும்பத்திடம் 700 சொகுசு கார்கள் 8 ஜெட் விமானங்கள் உள்ளது.

    அபுதாபி:

    உலகின் பணக்கார குடும்பங்களின் பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் குடும்பம் முதலிடத்தில் உள்ளது.

    அல் நஹ்யான் 2022-ம் ஆண்டு ஒட்டுமொத்த ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவராக பொறுப்பேற்றார். ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் உள்ள கஸ்ர் அல்-வதன் மாளிகையில் நஹ்யான் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ரூ.4,078 கோடி மதிப்பில் இந்த மாளிகை அமைந்துள்ளது. இங்கு அல் நஹ்யானின் 18 சகோதரர்கள், 11 சகோதரிகள், 9 குழந்தைகள், 18 பேரக் குழந்தைகள் என 56 பேர் வசிக்கின்றனர். இந்த மாளிகையில் 3,50,000 படிகங்களால் ஆன சர விளக்கு, மதிப்புமிக்க வரலாற்று கலைப்பொருட்கள் உள்ளன.

    இந்த குடும்பத்திடம் 700 சொகுசு கார்கள் மற்றும் 8 ஜெட் விமானங்கள் உள்ளது.

    உலகின் மொத்த எண்ணெய் வளத்தில் நஹ்யான் குடும்பத்தின் வசம் மட்டும் 6 சதவீதம் உள்ளது. உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் இக்குடும்பத்தினர் முதலீடு செய்துள்ளனர். பாடகி ரிஹானாவின் அழகுசாதன நிறுவனமான பென்டி, எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் என பிரபல நிறுவனங்களில் முதலீடு மேற்கொண்டுள்ளனர். அதிபரின் சகோதரரான தஹ்னூன் பின் சயீத் அல் நஹ்யான், குடும்பத்தின் தலைமை முதலீட்டு நிறுவனத்திற்கு தலைமை தாங்குகிறார். இதன் மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 28 ஆயிரம் சதவீதம் உயர்ந்துள்ளது. இந்நிறுவனம் விவசாயம், எரிசக்தி, பொழுதுபோக்கு மற்றும் கடல்சார் வணிகங்களை செய்துவருகிறது.

    இங்கிலாந்தின் பிரபலமான கால்பந்தாட்ட குழுவான மான்செஸ்டர் சிட்டியை ரூ.2,122 கோடிக்கு அல் நஹ்யான் குடும்பம் 2008-ம் ஆண்டு வாங்கியது.

    ஐக்கிய அரபு எமிரேட்சை தவிர துபாய், பாரிஸ் மற்றும் லண்டன் உள்பட உலகம் முழுவதும் ஆடம்பர சொத்துக்களை வைத்திருக்கிறார்கள்.

    • எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் அரசு பள்ளியில் மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் பிடித்தது. இ
    • தனை கலெக்டர் கேக் வெட்டி கொண்டாடினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 8 ஆயிரத்து 702 மாணவர்க ளும், 9 ஆயிரத்து 30 மாணவி களும் என மொத்தம் 17 ஆயிரத்து 732 பேர் தேர்வு எழுதினர். இதில் 8 ஆயிரத்து 390 மாணவர்களும், 8 ஆயிரத்து 904 மாணவிகளும் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து 97.53 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

    அதேபோல் அரசு பள்ளி களில் 3 ஆயிரத்து 493 மாணவர்களும், 4 ஆயிரத்து 105 மாணவிகளும் தேர்வு எழுதினர். இதில் 3 ஆயிரத்து 311 மாணவர்களும், 4 ஆயிரத்து 12 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    சிவகங்கை மாவட்டம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அரசு பள்ளி அளவில் மாநில அளவில் 96.38 சதவீதம் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளது.

    இதனை கொண்டாடும் விதமாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் கலெக்டர் மதுசூ தன்ரெட்டி தலைமையில் கல்வி அலுவலர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த ஆட்டோ டிரைவரின் மகளுக்கு தமிழரசி எம்.எல்.ஏ. பாராட்டு தெரிவித்தார்.
    • மாணவி இலக்கியா 593 மதிப்பெண் எடுத்து முதலிடம் பெற்றார்.

    மானாமதுரை

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிவகங்கை மாவட்டம் மாநிலஅளவில் 2-வது இடத்தை பெற்றது. இது குறித்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி, மாவடட முதன்மை கல்வி அலுவலர் சாமிநாதன் ஆகியோர் கூறியதாவது:-

    தமிழக அளவில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிவகங்கை மாவட்டம் 2-ம் இடம் பிடித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 278 பள்ளிகளில் 17 ஆயிரத்து 732 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில் 17 ஆயிரத்து 294 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 97.53 சதவீத தேர்ச்சி ஆகும்.

    2017-2018-ம் ஆண்டு 98.50 சதவீத தேர்ச்சி பெற்று மாநிலத்தில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் பெற்றது. 138 அரசுப் பள்ளிகளில் 68 பள்ளிகள் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 58 பள்ளிகளில் 21 பள்ளிகளும், மெட்ரிக் சுயநிதி பள்ளிகளில் 82 பள்ளிகளில் 57பள்ளிகளும், 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

    மொத்தமுள்ள 278 பள்ளிகளில் 146 பள்ளிகளில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் ஆட்டோ தொழிலாளி விஜயகுமார்-ஜெகதா தம்பதியரின் மகளான மானாமதுரை அரசு மகளிர் பள்ளி மாணவி இலக்கியா 593 மதிப்பெண் எடுத்து முதலிடம் பெற்றார்.

    இந்த பள்ளியில் 277 மாணவிகளில் 272 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 98.53 சதவீத தேர்ச்சி ஆகும். இந்த பள்ளியின் முதல் மாணவி இலக்கியா 8-ம் வகுப்பில் மத்திய அரசின் டேலன்ட் எக்ஸாம் தேர்ச்சி பெற்று மாதம் தோறும் ரூ.1000-ம் கல்வி உதவித்தொகை பெற்று வருகிறார். மாணவி இலக்கி யாவை மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி பாராட்டி னார்.

    • சி.பி.எஸ்.இ. தேர்வில் மாவட்ட அளவில் செல்லப்பன் வித்யா மந்திர் சர்வேதச பள்ளி முதலிடம் பிடித்தது.
    • ஆசிரியர்கள் பாராட்டினர்.

    காரைக்குடி

    மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியம் நடத்திய சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வில் காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளி மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்தது. பிளஸ்-2 மாணவர் லோகேஷ் 483/500 மதிப்பெண்களைப் பெற்று மாவட்ட அளவில் முதல் இடத்தை பெற்றார்.

    ஆங்கிலத்தில் 96, கணிதம் 95, உயிரியல் 97, இயற்பியல் 95, வேதியியல் 100 என மதிப்பெண்களை பெற்றார். 2-ம் இடத்தை மாணவர் கவுரிசங்கர நாராயணன் 482/500 மதிப்பெண் பெற்றார். 3-ம் இடத்தை மாணவர் பிரியதர்ஷன் 481/500 மதிப்பெண் பெற்றார்.

    10-ம் வகுப்பு தேர்வில் மாணவர் தியாகராஜன் 493/500 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். அவர் ஆங்கிலம் 99, பிரெஞ்சு 100, கணிதம் 99, அறிவியல் 97, தகவல் தொழில்நுட்பம் 100 என்ற மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

    2-ம் இடத்தை விஷால் 487 மதிப்பெண் பெற்றார். 3-ம் இடத்தை மாணவி சுவாதி 485 மதிப்பெண் பெற்றார். சாதனை படைத்த மாணவ- மாணவிகளை பள்ளியின் நிறுவனர் செல்லப்பன், தாளாளர் செ.சத்தியன், நிர்வாக இயக்குநர் சங்கீதா சத்தியன், கல்வி இயக்குநர் ராஜேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • கோழிப்பண்ணை தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.
    • இதுகுறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த விஜயமங்கலம், கினிபாளையம் அரிஜன காலனியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 53). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கோழி பண்ணையில் கோழி முட்டை ஏற்றும் லோடுமேனாக வேலை செய்து வந்தார்.

    இவர் கடந்த 2 மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். மேலும் இவர் மது குடி குடித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அவரது குடும்பத்தினர் கண்ணனை ஏன் வேலைக்கு செல்லா மல் குடித்து கொண்டு இருக்கிறீர்கள் என கண்டி த்தனர்.

    இந்த நிலையில் கண்ணன் சம்பவத்தன்று இரவு கினிப்பாளையம் பட்டத்து அரசி அம்மன் கோவிலில் தூங்கிக் கொள்வதாக கூறி விட்டு சென்றார்.

    ஆனால் மறுநாள் காலை வீட்டுக்கு வரவில்லை. அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. அவர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று மதியம் ஒருவர் கிணிப்பாளையம் குமரன் நகரில் உள்ள ஒரு பொது கிணற்றில் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி கிணற்றுக்குள் இருந்த பிணத்தை மீட்டனர்.

    போலீசார் விசாரணையில் அவர் வீட்டை விட்டு வெளியே சென்ற கண்ணன் எறும் கிணற்றின் மீது தூங்கிய போது தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது. இது பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×