மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த செல்லப்பன் வித்யா மந்திர் சர்வேதச பள்ளி

சி.பி.எஸ்.இ. தேர்வில் மாவட்ட அளவில் செல்லப்பன் வித்யா மந்திர் சர்வேதச பள்ளி முதலிடம் பிடித்தது. ஆசிரியர்கள் பாராட்டினர்.
மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த செல்லப்பன் வித்யா மந்திர் சர்வேதச பள்ளி
Published on

காரைக்குடி

மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியம் நடத்திய சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வில் காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளி மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்தது. பிளஸ்-2 மாணவர் லோகேஷ் 483/500 மதிப்பெண்களைப் பெற்று மாவட்ட அளவில் முதல் இடத்தை பெற்றார்.

ஆங்கிலத்தில் 96, கணிதம் 95, உயிரியல் 97, இயற்பியல் 95, வேதியியல் 100 என மதிப்பெண்களை பெற்றார். 2-ம் இடத்தை மாணவர் கவுரிசங்கர நாராயணன் 482/500 மதிப்பெண் பெற்றார். 3-ம் இடத்தை மாணவர் பிரியதர்ஷன் 481/500 மதிப்பெண் பெற்றார்.

10-ம் வகுப்பு தேர்வில் மாணவர் தியாகராஜன் 493/500 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். அவர் ஆங்கிலம் 99, பிரெஞ்சு 100, கணிதம் 99, அறிவியல் 97, தகவல் தொழில்நுட்பம் 100 என்ற மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

2-ம் இடத்தை விஷால் 487 மதிப்பெண் பெற்றார். 3-ம் இடத்தை மாணவி சுவாதி 485 மதிப்பெண் பெற்றார். சாதனை படைத்த மாணவ- மாணவிகளை பள்ளியின் நிறுவனர் செல்லப்பன், தாளாளர் செ.சத்தியன், நிர்வாக இயக்குநர் சங்கீதா சத்தியன், கல்வி இயக்குநர் ராஜேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com