search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karunanidhi statue"

    டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் ஆகியோரை முக ஸ்டாலின் சந்தித்து கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார். #MKStalin #KarunanidhiStatue
    புதுடெல்லி:

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முழு உருவச்சிலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    வருகிற 16-ந்தேதி நடைபெறுகிற விழாவில் கருணாநிதி சிலையை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்கிறார்.

    அவரை நேரில் சந்தித்து அழைப்பு விடுப்பதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை டெல்லி சென்றார்.

    டெல்லி அக்பர் ரோட்டில் உள்ள இல்லத்தில் சோனியா காந்தியை சந்தித்தார். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் கருணாநிதி சிலை திறப்பு விழா அழைப்பிதழை சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் வழங்கி அழைப்பு விடுத்தார்.


    இன்று காலை டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை மு.க.ஸ்டாலின் சந்தித்து கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

    பின்னர் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார். #DMK #MKStalin #KarunanidhiStatue
    டெல்லியில் 10-ந்தேதி நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் பா.ஜனதா கட்சிக்கு எதிரான வலிமையான கூட்டணியாக மாறும் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். #Kanimozhi #DMK
    சென்னை:

    தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி சென்று சோனியா காந்தியை சந்திக்கிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதுடன் 16-ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் சிலை திறப்பு பத்திரிகை வழங்கி அழைப்பு விடுக்கிறார்.

    அதன்பிறகு டெல்லியில் 10-ந்தேதி நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இந்த கூட்டம் பா.ஜனதா கட்சிக்கு எதிரான வலிமையான கூட்டணியாக மாறும்.



    பேரறிவாளன் உள்பட நீண்ட காலமாக சிறையில் உள்ள 7 பேர் விடுதலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் வலியுறுத்தினால் 7 பேரும் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தில் கஜா புயல் நிவாரணம் தொடர்பான விவகாரத்தை தி.மு.க. எழுப்பி விவாதிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #Kanimozhi
    கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை சோனியா காந்தியிடம் நேரில் வழங்குவதற்காக முக ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார். #DMK #Karunanidhi #SoniaGandhi #MKStalin
    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலை திறப்பு விழா வருகிற 16-ந்தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

    திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பாராளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.

    விழாவில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு, கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன், புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இதைத் தொடர்ந்து அன்று மாலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.



    இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை சோனியா காந்தியிடம் நேரில் வழங்குவதற்காக மு.க.ஸ்டாலின் நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

    சோனியாகாந்திக்கு நாளை பிறந்தநாள் என்பதால் பகல் 11.30 மணிக்கு சோனியாகாந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கிறார். அப்போது சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்குகிறார்.

    இதைத் தொடர்ந்து 10-ந் தேதி மதியம் நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முக ஸ்டாலின் பங்கேற்று அங்கு வரும் தலைவர்களுக்கும் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்குகிறார். பின்னர் அன்று இரவு முக ஸ்டாலின் சென்னை திரும்புகிறார். #DMK #Karunanidhi #SoniaGandhi #MKStalin
    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முழு உருவ சிலை திறப்பு விழாவில் பங்கேற்குமாறு ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. #Karunanidhistatue #KamalHaasan #Rajinikanth
    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முழு உருவ சிலை அறிவாலய வளாகத்தில் திறக்கப்படுகிறது. அண்ணா, கருணாநிதி ஆகியோரது சிலைகள் ஒரே இடத்தில் அமைக்கப்படுகிறது. சிலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    வருகிற 16-ந்தேதி (ஞாயிறு) நடைபெறும் விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.


    விழாவுக்கு அகில இந்திய அளவில் தலைவர்கள் அழைக்கப்படுகிறார்கள். 9-ந் தேதி (ஞாயிறு) மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று சோனியா காந்தியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்குகிறார்.

    ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

    ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இருவரும் கருணாநிதியுடன் நெருங்கிய நட்பு பாராட்டியவர்கள். எனவே விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #DMK #Karunanidhistatue #KamalHaasan #Rajinikanth
    அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார் என திமுக தெரிவித்துள்ளது. #DMK #KarunanidhiStatue #SoniaGandhi
    சென்னை:

    கடந்த ஆகஸ்டு மாதம் மரணம் அடைந்த கருணாநிதிக்கு தி.மு.க. தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் பிரமாண்டமான முழு உருவ சிலை அமைக்கப்பட உள்ளது. கருணாநிதி சிலையுடன் தி.மு.க. நிறுவனர் அண்ணாவுக்கும் புதிய சிலை அமைக்கப்பட உள்ளது. மேலும் மிக பிரமாண்டமான தி.மு.க. கொடி கம்பம் ஒன்றும் அங்கு நிறுவப்பட உள்ளது.

    அண்ணா-கருணாநிதி ஆகியோரின் சிலைகள் திறப்பு விழா டிசம்பர் 16-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவை தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விழாவாக மாற்ற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    பாஜகவுக்கு எதிராக உள்ள காங்கிரஸ் மற்றும் அனைத்து மாநில கட்சிகளையும் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு அழைப்பதற்கு மு.க. ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் தி.மு.க. மூத்த தலைவர்களை பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.

    இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சென்னைக்கு வருகிறார் என திமுக தெரிவித்துள்ளது.



    இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிவாலயத்தில் நடைபெறவுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வருமாறு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

    அவரது அழைப்பை ஏற்று சிலை திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளதை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உறுதி செய்துள்ளார். 

    இதையடுத்து, டிசம்பர் 16-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #DMK #KarunanidhiStatue #SoniaGandhi
    மறைந்த அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலைகள் திறப்பு விழா அடுத்த மாதம் 16-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவை தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விழாவாக மாற்ற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. #DMK #MKStalin
    சென்னை:

    கருணாநிதி, ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகி உள்ளது.

    தமிழக அரசியல் களத்தை முன்நகர்த்தி செல்லும் வலுவான அரசியல் தலைவராக உருவாக போவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மனதில் நீடித்தப்படி உள்ளது.

    நடிகர்கள் ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வந்துள்ள போதிலும் அவர்களால் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய எழுச்சி மாற்றத்தை இதுவரை உருவாக்க இயலவில்லை. இதனால் தேர்தல் முறை மட்டுமே தமிழகத்தின் வலுவான தலைவரை அடையாளம் காட்டும் என்று கருதப்படுகிறது.

    அதற்கேற்ப தமிழக சட்டசபையில் 20 தொகுதிகள் காலியாக இருப்பதால் அதற்கான இடைத்தேர்தலில் இதற்கான விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 20 தொகுதி இடைத்தேர்தல் தள்ளிப்போகும் என்று கருதப்படுவதால் அடுத்தக்கட்டமாக பாராளுமன்ற தேர்தல் மற்றும் அந்த தேர்தலுக்கான கூட்டணி விவகாரங்கள் தற்போது சூடு பிடித்துள்ளன.

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் இப்போதே கூட்டணியை இறுதி செய்ய வேண்டிய சூழ்நிலைகள் உருவாகி உள்ளன. பா.ஜ.க.வுக்கு எதிராக தேசிய அளவில் மிகப்பெரிய வலுவான அணியை உருவாக்க பல்வேறு கட்சி தலைவர்களும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்க அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இந்த மாதமே எதிர்க் கட்சிகளின் கூட்டத்தை கூட்டுவதற்கு அவர் பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.

    தற்போது 5 மாநில சட்டசபை தேர்தல் நடந்து வருவதால் சந்திரபாபு நாயுடு எதிர்பார்த்தப்படி எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான கூட்டணி கூட்டத்தை நடத்த இயலவில்லை. இதனால் அடுத்த மாதத்திற்கு அவர் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை ஒத்தி வைத்துள்ளார்.

    இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை பா.ஜனதாவுக்கு எதிராக ஒருங்கிணைத்து அணி திரட்ட செய்யும் மிகப்பெரிய வாய்ப்பு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்துள்ளது. இதனால் தி.மு.க. தலைமையில் தேசிய அளவில் புதிய கூட்டணிக்கான அடித்தளம் அமைக்கும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.

    கடந்த ஆகஸ்டு மாதம் மரணம் அடைந்த கருணாநிதிக்கு தி.மு.க. தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் பிரமாண்டமான முழு உருவ சிலை அமைக்கப்பட உள்ளது. கருணாநிதி சிலையுடன் தி.மு.க. நிறுவனர் அண்ணாவுக்கும் புதிய சிலை அமைக்கப்பட உள்ளது. மேலும் மிக பிரமாண்டமான தி.மு.க. கொடி கம்பம் ஒன்றும் அங்கு நிறுவப்பட உள்ளது.

    அண்ணா-கருணாநிதி ஆகியோரின் சிலைகள் திறப்பு விழா அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவை தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விழாவாக மாற்ற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    இந்தியா முழுவதும் பா.ஜனதாவுக்கு எதிராக உள்ள காங்கிரஸ் மற்றும் அனைத்து மாநில கட்சிகளையும் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு அழைப்பதற்கு மு.க. ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் தி.மு.க. மூத்த தலைவர்களை பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.

    இந்த அழைப்பை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்கள் ஏற்றுள்ளனர். எனவே தேசிய அளவில் முக்கிய தலைவர்கள் அனைவரும் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு வருவது உறுதியாகி விட்டது.

    திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ்யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சிறிய கட்சிகளின் தலைவர்கள் என அனைத்து தரப்பினரையும் ஓரணியில் கொண்டுவர மு.க.ஸ்டாலின் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.


    இந்த தலைவர்களுடன் மு.க.ஸ்டாலினே போனில் தொடர்பு கொண்டு சிலை திறப்பு விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். எனவே மம்தா பானர்ஜி, சரத்பவார், மாயாவதி, அகிலேஷ் யாதவ், பரூக் அப்துல்லா ஆகியோரும் சிலை திறப்பு விழாவுக்கு வருவார்கள் என்று கருதப்படுகிறது.

    தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி கடந்த ஆகஸ்டு மாதம் மரணம் அடைந்தபோது எதிர்க்கட்சி தலைவர்கள் 90 சதவீதம் பேர் நேரிடையாக சென்னை வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அப்போதே அவர்கள் மு.க.ஸ்டாலினிடம் பேசி விட்டு சென்றார்கள். எனவே அவர்கள் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று சென்னை வருவது உறுதியாகி உள்ளது.

    டிசம்பர் 16-ந்தேதி அண்ணா- கருணாநிதி சிலைகள் திறப்பு விழாவில் முக்கிய தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ள இருப்பதால் அந்த விழா மிக பிரமாண்டமான விழாவாக அமையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மேலும் பா.ஜ.க.வை எதிர்க்கும் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் ஒன்று சேரும் விழாவாகவும் அமைய உள்ளது.

    இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள முடிவு செய்துள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் அன்று சிலை திறப்பு விழா முடிந்ததும் பிற்பகலில் ஒன்று கூடி ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மூத்த தலைவர்கள் விறுவிறுப்பாக செய்து வருகிறார்கள்.

    அன்று மாலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களும் பங்கேற்று பேசுகிறார்கள்.

    மு.க.ஸ்டாலின் மூலம் ஒருங்கிணையும் இந்த தலைவர்கள் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்கள், பிரசார திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் தெரிகிறது. எனவே டிசம்பர் 16-ந்தேதி நடக்கும் அண்ணா-கருணாநிதி சிலை திறப்பு விழா தேசிய அளவில் திருப்புமுனையை ஏற்படுத்தும் விழாவாக கருதப்படுகிறது.

    தேசிய அளவில் தற்போது பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் வலுவான கூட்டணியை உருவாக்க பல்வேறு தரப்பினரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். 5 மாநில தேர்தல் காரணமாக அதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மு.க. ஸ்டாலின் மூலம் வலுவான கூட்டணிக்கு விதை தூவப்படுகிறது. தமிழகத்தில் 39 எம்.பி. தொகுதிகள் இருப்பதால் தி.மு.க.வை தவிர்க்க முடியாத நிலையில் மற்ற மாநில கட்சிகள் உள்ளன.

    இதனால் தேசிய அளவில் புதிய அணியை உருவாக்கும் திட்டத்தில் மு.க.ஸ்டாலினின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதுவரை தேசிய அளவில் முக்கிய கட்சி தலைவர்களிடம் மு.க.ஸ்டாலின் நேரிடையாக தொடர்பு கொண்டதில்லை. தற்போது அவர் அனைத்து முக்கிய கட்சி தலைவர்களிடமும் பேசுவதால் தேசிய அளவில் தவிர்க்க முடியாத தலைவராகவும் மாற இந்த சிலை திறப்பு விழா உதவும் என்று கூறப்படுகிறது.

    தமிழ்நாட்டை பொறுத்த வரை தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி கட்சிகள் செயல்படும். இந்த கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பற்றி சமீபத்தில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் அளித்த பேட்டி காரணமாக திடீர் சர்ச்சை உருவானது. ஆனால் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டனர்.

    எனவே தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது.

    தேர்தல் நெருங்கும் சமயத்தில் மேலும் சில கட்சிகள் தி.மு.க. கூட்டணிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., த.மா.கா. ஆகியவற்றையும் இணைக்க ஒருசாரார் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த கட்சிகளும் வரும் பட்சத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மெகா கூட்டணியாக அமையும்.

    இந்த முயற்சிகளுக்கு எல்லாம் டிசம்பர் 16-ந்தேதி நடைபெறும் அண்ணா- கருணாநிதி சிலை திறப்பு விழா வழிகாட்டியாக இருக்கும் என்று தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். #DMK #MKStalin #ParliamentElection
    சென்னை அண்ணா அறிவாலயம் வளாகத்தில் கருணாநிதி சிலை வைப்பதற்கு மாநகராட்சி நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உள்ளது. #Karunanidhi #DMK #KarunanidhiStatue
    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் 8 அடி உயரத்தில் முழு உருவ வெண்கல சிலை வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார்.

    அதன்படி கருணாநிதி சிலை வடிவமைக்கும் பணி திருவள்ளூர் மாவட்டம் புதுப்பேடு கிராமத்தில் வசிக்கும் பிரபல சிற்பி தீனதயாளனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. தற்போது கருணாநிதி சிலை வடிவமைக்கப்பட்டு, இறுதி வடிவம் பெற்றுள்ளது.

    கருணாநிதியின் சிலையை அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகில் நிறுவுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடம் பெருநகர சென்னை மாநகராட்சியின் திறந்தவெளி நிலம் (ஓ.எஸ்.ஆர். லேண்ட்) என்பதால், மாநகராட்சியிடம் முறையான அனுமதி பெற வேண்டும். எனவே தி.மு.க. சார்பில் அனுமதி கேட்டு மாநகராட்சியிடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் அண்ணா அறிவாலய வளாகத்தில் கருணாநிதி சிலை வைப்பதற்கு மாநகராட்சி நிபந்தனையுடன் அனுமதி வழங்கி இருக்கிறது. அதாவது, தற்போது கருணாநிதி சிலையை வைத்துக்கொள்ளலாம். எதிர்க்காலத்தில் சாலை விரிவாக்கத்துக்காக அந்த நிலம் தேவைப்படும்பட்சத்தில், சிலை அகற்றப்படும் என்று நிபந்தனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    கருணாநிதி சிலை திறப்பு விழாவை அவர் மறைந்து 100-வது நாளான வருகிற நவம்பர் 15-ந் தேதி பிரமாண்டமாக நடத்துவதற்கு தி.மு.க. தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் சிலை திறப்பு தேதி குறித்து, ‘நானே விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்’ என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #Karunanidhi #DMK #KarunanidhiStatue
     
    அடுத்த மாதம் 15-ந்தேதி கருணாநிதி சிலையை திறந்து வைக்க காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். #DMK #Karunanidhi #SoniaGandhi #MKStalin
    சென்னை:

    முன்னாள் முதல்வரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ந்தேதி மரணம் அடைந்தார்.

    அவருக்கு தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முழு உருவ வெண்கல சிலை வைக்க முடிவு செய்யப்பட்டது.

    8 அடி உயரமுள்ள கருணாநிதி முழு உருவ வெண்கல சிலையை பொன்னேரியில் உள்ள சிற்பி தீனதயாளன் வடிவமைத்து வருகிறார்.

    சில நாட்களுக்கு முன்பு சிலை வடிவமைப்பு பணியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது அவர் கூறிய சில மாற்றங்களுடன் சிலை தயாராகி வருகிறது.



    கருணாநிதி மறைந்து வருகிற நவம்பர் 15-ந்தேதியுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது. அன்று அவருடைய சிலை திறக்கப்படுகிறது.

    கருணாநிதி சிலையை திறந்து வைக்க காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

    இது குறித்து தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறும் போது, கருணாநிதி சிலையை திறக்க சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார். சோனியாகாந்தி கலந்து கொள்ள முடியாத பட்சத்தில் அவருக்கு பதிலாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் திறந்து வைப்பார் என தெரிவித்தார்.

    கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர்களின் ஒருவரான தேஜஸ்வியாதவ் உள்ளிட்டோரை அழைக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #DMK #Karunanidhi #SoniaGandhi #MKStalin
    மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு அருகே உருவாகி வரும் கருணாநிதியின் 8 அடி உயர சிலையை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். #DMK #Karunanidhi #KarunanidhiStatue #MKStalin
    சென்னை:

    மீஞ்சூரை அடுத்த புதுப்பேடு பகுதியில் கருணாநிதியின் 8 அடி உயர சிலை செய்யும் பணி நடந்து வருகிறது. சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வைப்பதற்காக இந்த சிலை வடிவமைக்கப்படுகிறது.

    சிற்பிகள் தீனதயாளன், கார்த்திக் ஆகியோர் இந்த சிலையை வடிவமைத்து வருகிறார்கள். தற்போது சிலையின் மாடல்களில் மண்ணால் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கருணாநிதி சிலையை பார்வையிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை புதுப்பேடு வந்தார். அவர் கருணாநிதியின் உருவ சிலையை ஆர்வமுடன் பார்த்தார். அப்போது முகத்தின் நாடி பகுதியில் சிறிய வளைவு இருக்குமாறு வடிவமைக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார். அதன்படி வெண்கல சிலை விரைவில் வடிவமைக்கப்பட உள்ளது.

    கருணாநிதி சிலையை வடிவமைக்கும் சிற்பி ஏற்கனவே அண்ணா சிலை, காமராஜர் சிலை, கண்ணகி சிலை, முரசொலி மாறன் சிலை, சிங்கார வேலர் சிலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் சிலையை தத்ரூபமாக வடிவமைத்து பெயர் பெற்றவர்.

    கருணாநிதி சிலையை மு.க.ஸ்டாலின் பார்வையிட்ட போது எடுத்த படம். அருகில் எ.வ.வேலு உள்ளார்.

    இப்போது கருணாநிதியின் சிலையையும் தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.

    இந்த சிலை செய்து முடித்ததும் விரைவில் அண்ணா அறிவாலயத்தின் முன்புற பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு அருகில் வைக்கப்படும்.

    சிலை வடிவமைக்கும் பணியை சுமார் 30 நிமிட நேரம் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மாவட்டச்செயலாளர் கும்மிடிப்பூண்டி வேணு, முன்னாள் அமைச்சர் சுந்தரம், மீஞ்சூர் ஒன்றிய கழக செயலாளர் வல்லூர் ரமேஷ்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, பேரூர் செயலாளர் மோகன ராஜ், சுகுமாறன் உடன் சென்றிருந்தனர். #DMK #Karunanidhi #KarunanidhiStatue #MKStalin
    ×