search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "increase"

    • 1 கிலோ மல்லிகை பூ ரூ.1000-க்கு விற்கப்பட்டது.
    • முல்லை கிலோ ரூ.2000, கனகாம்பரம் ரூ.1500, ஜாதிப்பூ ரூ.1500-க்கு விற்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பூக்கார தெருவில் பூச்சந்தை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான கடைகள் உள்ளன. இந்த சந்தைக்கு தமிழகத்தின் திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக பூக்கள் கொண்டுவரப்படும்.

    இதே போல் இங்கிருந்தும் வெளி மாவட்டங்களுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படும். பூக்களின் விலை அவ்வப்போது ஏற்றம் இறக்கத்துடன் காணப்படும்.

    இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருவதாலும், அவ்வப்போது மழை பெய்து வருவதாலும் பூக்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    அதிலும் குறிப்பாக மல்லிகை பூக்களின் மொட்டுக்கள் கடும் பனியால் செடியிலேயே கருகி உள்ளது. பூக்களின் விளைச்சல் பாதிப்பால் தஞ்சை பூச்சந்தைக்கு பூக்களின் வரத்து கணிசமாக குறைந்துள்ளது. இதனால் அவற்றின் விலையும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 1 கிலோ மல்லிகை பூ ரூ.1000-க்கு விற்கப்பட்டது. இன்று இரண்டு மடங்கு அதிகரித்து கிலோ ரூ.2000 வரை விற்பனை செய்யப்பட்டது.

    இதேபோல் முல்லை கிலோ ரூ.2000, கனகாம்பரம் ரூ.1500, ஜாதிப்பூ ரூ.1500-க்கு விற்கப்பட்டது.

    இது குறித்து வியாபாரி சந்திரசேகரன் கூறும்போது, தற்போது கடும் பனி நிலவி வருவதால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. மேலும் நாளை வளர்பிறை முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் தேவை அதிகம் உள்ளது ‌‌ . இதன் காரணமாக விலை அதிகரித்துள்ளது என்றார்.

    • மதுரை-மணியாச்சி, சென்னை-திண்டுக்கல் ரெயில் வேகத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
    • 110 கி.மீ. லிருந்து 130 கி.மீ.ராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    தமிழ்நாட்டில் முக்கிய வழித்தடங்களில் பயணிகள் ரெயிலை அதிகபட்ச வேகத்தில் இயக்குவது என்று தென்னகரெயில்வே முடிவு செய்துள்ளது. இதற்காக அந்தப் பகுதிகளில்ரெயில் பாதையை பலப்படுத்துதல், மின்மயமாக்கல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

    ரெயில் பாதைகளை பலப்படுத்துதல், நவீன மின்மயம், ரெயில் இயக்க சைகை விளக்குகள் மற்றும் கம்பங்களை மேம்படுத்துதல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம்ரெயில்களின் வேகத்தை ரெயில்வே வழிகாட்டு கையேடுகளில் குறிப்பிட்டுள்ளபடி முறையே மணிக்கு 160 கி.மீ. மற்றும் 130 கி.மீ. என அதிகரிக்க முடியும்.

    134.78 கி.மீ. தூரமுள்ள தங்க நாற்கர பாதையான சென்னை - ரேணிகுண்டா பிரிவில்ரெயில்களின் வேகம் மணிக்கு 110 கி.மீ. லிருந்து 130 கி.மீ.ராக அதிகரிக்கப்பட்டுள்ளது.ரெயில்வே பாதுகாப்பு ஆணையரின் அனுமதிக்கு பிறகு இந்த பிரிவில் நடப்பு ஆண்டில் ரெயில்களின் வேகத்தை மேலும் அதிக ரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    சென்னை - திண்டுக்கல் பிரிவில் ரெயில் வேகத்தை அதிகரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் தற்போதைய வேகமான மணிக்கு 110 கி.மீ.-ல் இருந்து 130 கி.மீ. என்று அதிகரிக்கப்பட உள்ளது. மதுரை-வாஞ்சி மணியாச்சி பிரிவில் 100 கி.மீ.-ல் இருந்து 110 கி.மீ. வேகத்துக்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்திய ரெயில்வேயில் 8 வழித்தடங்களில்ரெயில் வேகத்தை மணிக்கு 160 கி.மீ. -க்கு அதிகரிக்கரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. ரெயில்வே மண்டலங்கள் பல்வேறு பிரிவுகளுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரித்து வருகின்றன.

    • முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகின்றன.
    • முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது என ஆளுநர் தலைமையில் நடைபெற்ற மேலாண்மை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: -

    சேலம் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் அறிவது, தொகுப்பு நிதியின் மாநில மேலாண்மை குழுக் கூட்டத்தில் தமிழக ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

    இக் கூட்டத்தில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கு கல்வி மேம்பாட்டு நிதியுதவியாக (கல்வியுதவி தொகை) 1 முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.2,000-மும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு ரூ.4,000-மும், 9 முதல் 10-ம் வகுப்பு வரை ரூ.5,000-மும், 11 முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.6,000-மும் உயர்த்தி வழங்கிட முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • கார்த்திகை மாத அமாவாசையொட்டி சேலத்தில் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
    • கோவில்கள், வீடுகளில் பூஜைக்காக அதிகளவில் பயன்படுத்துவதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

    அன்னதானப்பட்டி: 

    சேலம் பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இன்று கார்த்திகை மாத அமாவாசையையொட்டி கோவில்களுக்கும், வீடுகளில் சாமிக்கு பூஜைகள் செய்து படைக்கவும் பூக்கள் அதிகளவில் மக்கள் வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக சேலத்தில் உள்ள பூ , மார்க்கெட்டுகளில் அதிகாலை முதலே பூக்கள் விற்பனை களை கட்டியது.

    சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (1 கிலோ கணக்கில்):-

    மல்லிகை - ரூ.1000, முல்லை - ரூ500, ஜாதி மல்லிகை - ரூ.280, காக்கட்டான் - ரூ.280, கலர் காக்கட்டான் - ரூ.240, சி.நந்தியா வட்டம் - ரூ.80, சம்மங்கி - ரூ.50, சாதா சம்மங்கி - ரூ.50, அரளி - ரூ.220, வெள்ளை அரளி - ரூ.220, மஞ்சள் அரளி - ரூ.220, செவ்வரளி - ரூ.240, ஐ.செவ்வரளி - ரூ.240, நந்தியா வட்டம் - ரூ.80, என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

    தொடர்ந்து வருகிற வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமையில் விற்பனை நன்றாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை பனிப்பொழிவு மிக மிக அதிகமாக உள்ளது.
    • இனிமழை வருமா? நமது பகுதியில் உள்ள சுமார் 15-க்கும் மேற்பட்ட குளங்கள், குட்டைகள் எல்லாம் நிரம்புமா ? என்று கவலையில் உள்ளனர்.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை பனிப்பொழிவு மிக மிக அதிகமாக உள்ளது.

    மாலை 6 மணிக்கு மேல் தலைப்பாகை அல்லது குல்லா பொட்டு தான் பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

    மேலும் வயதான ஆட்களுக்கு இருமல், தும்மல் என அதிகரித்து வருகிறது. பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் மழை பெய்யவே இல்லை, இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் கவலை அடைந்து உள்ளனர்.

    இனிமழை வருமா? நமது பகுதியில் உள்ள சுமார் 15-க்கும் மேற்பட்ட குளங்கள், குட்டைகள் எல்லாம் நிரம்புமா ? என்று கவலையில் உள்ளனர். உடன்குடி வட்டார பகுதிக்கு உட்பட்ட குளங்கள், குட்டைகள் மற்றும் கருமேனி ஆறுஆகியவை வறண்டு கிடக்கிறது.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • அணை நிரப்பப்பட்டு பாசனத்திற்காகவும் மற்றும் குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
    • திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    உடுமலை:

    உடுமலை அருகே திருமூர்த்தி அணை மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணைக்கு சர்க்கார் பதியிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் காண்டூர் கால்வாய் வழியாக 43 கிலோமீட்டர் பயணித்து திருமூர்த்தி அணையை வந்தடைகிறது. இதன் மூலம் அணை நிரப்பப்பட்டு பாசனத்திற்காகவும் மற்றும் குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது. திருமூர்த்தி அணைக்கு மேல் பகுதியில் திருமூர்த்தி மலை மீது பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த அருவியில் நீர்வரத்து இருக்கும் .பருவமழை காலங்களில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை யின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதோடு அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலை சுற்றிலும் ஓடும் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். தற்போது திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    • கடும் குளிர் காலநிலையிலும் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
    • சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் பூக்கள் விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    அன்னதானப்பட்டி:

    சேலம் பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் பூக்கள் விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    கடந்த மாதம் ரூ.1200 வரை என விற்கப்பட்டு வந்த மல்லி இன்று கிலோவுக்கு ரூ.600 வரை விலை குறைந்து ரூ.600 என விற்கப்பட்டு வருகிறது. அதே போல ரூ.600 க்கு விற்ற முல்லை ரூ.200வரை விலை குறைந்து இன்று ரூ.400 என விற்கப்படுகிறது. மற்ற ரக பூக்களின் விலையும் கணிசமாக சரிந்துள்ளது.

    சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (1 கிலோவுக்கு) வருமாறு :-

    மல்லிகை- ரூ.600, முல்லை- ரூ.400, ஜாதி மல்லி- ரூ.280, காக்கட்டான்- ரூ.200, கலர் காக்கட்டான் - ரூ.200, சி.நந்தியா வட்டம் - ரூ.180, சம்மங்கி- ரூ.15, சாதா சம்மங்கி- ரூ.30, அரளி- ரூ.150, வெள்ளை அரளி- ரூ.150, மஞ்சள் அரளி- ரூ.150, செவ்வரளி- ரூ.180, ஐ.செவ்வரளி- ரூ.180, நந்தியா வட்டம்- ரூ.180. தற்போது ஐப்பசி மாத நிலவரப்படி குளிர் காலநிலை நிலவுகிறது.

    வருகிற கார்த்திகை, மார்கழி மாதங்களில் கடும் குளிர் காலநிலை நிலவும். அதற்கடுத்து தை மாதம் பொங்கல் பண்டிகை வரை பூக்கள் விற்பனை சீசன் நன்றாக இருக்கும் என வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.

    • மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் வட கிழக்கு பருவ மழையால் ஓரளவு மழை பொழிவு பெறும் பகுதியாக உள்ளது.
    • மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    உடுமலை:

    தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவ மழையானது தற்போது தீவிரமடையத் தொடங்கியுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒரே நாளில் நீர் மட்டம் 2 அடி உயர்ந்து 83 அடியாக உள்ளது.

    மழை மறைவு பகுதியாக உள்ள திருப்பூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை 630 மி.மீ முதல் 680 மி.மீட்டராகும். மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழையின் மூலம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகள் சாரல் மழை மூலம் சற்று அதிக மழை பொழிவு பெற்று வரும் பகுதியாகவும், மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் வட கிழக்கு பருவ மழையால் ஓரளவு மழை பொழிவு பெறும் பகுதியாக உள்ளது.

    இதன் காரணமாக ஒரே சீரான மழை பொழிவு இரு பருவ மழையின் போதும் கிடைக்காத ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் உள்ளது‌. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் அதிக மழை பெறும் பகுதிகளில் இருந்து வரும் ஆறுகளை நம்பி அமைந்துள்ள அணைகளில் இருந்து கால்வாய் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பாசனம் பெற்று வருகிறது. இதற்கு பிஏபி, எல்பிபி பாசனங்கள் எடுத்துக் காட்டாக உள்ளது.

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர் ,கரூர் மாவட்டத்தில் உள்ள 55 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெற்று வருகிறது. அணையின் மொத்த நீர் தேங்கும் உயரம் 90 அடியாகவும், கொள்ளளவு 4 டிஎம்சி.யாகவும் உள்ளது. மேலும் பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது‌.

    இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 83அடியை தாண்டியுள்ளது. அணைக்கு 2078 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது‌. ஒரேநாளில் அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. இதனால் பாசனப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தற்போது அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால் சேலம் மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது.
    • 40 முதல் 60 டன்னாக இருந்த வெங்காயம் வரத்து , தற்போது 100 டன்னாக அதிகரித்துள்ளது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மார்க்கெட்டுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா மாநிலம் கர்னூல், கர்நாடகா மாநிலம் தரிக்கெர, சித்ரதுர்கா உள்ளிட்ட இடங்களிலிருந்து வெங்காய மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

    தற்போது அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் விளைச்சல் அதிகமாக இருப்பதால் சேலம் மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. சேலம் கடைவீதி ,ஆற்றோரம் தெரு, ஆனந்தா காய் மார்க்கெட், பால் மார்க்கெட் பகுதிகளில் கடந்த மாதம் தினமும் 40 முதல் 60 டன்னாக இருந்த வெங்காயம் வரத்து , தற்போது 100 டன்னாக அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக பெரிய வெங்காயம் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.

    தற்போது பெரிய வெங்கா யத்தில் சிறிய அளவு 1 கிலோ ரூ.25-30 எனவும், பெரிய அளவு ரூ.35-40 எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் சின்ன வெங்காயம் விளைச்சல் குறைந்துள்ளதால் அதன் விலை அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.15-20 வரை விற்பனை ஆன தற்போது ரூ.40-60 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது என வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.

    • கடந்த சில நாட்களாக ஆந்திராவில் சாத்துக்குடி விளைச்சல் அதிகரித்துள்ளது.
    • இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தைகளுக்கு சாத்துக்குடி ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    சேலம்:

    ஆந்திராவில் ராஜமுந்திரி, புலிவேந்தலா, கடப்பா, நந்திமண்டல், நெல்லூர் உள்ளிட்ட இடங்களில் சாத்துக்குடி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் சாத்துக்குடி இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஆந்திராவில் சாத்துக்குடி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தைகளுக்கு வழக்கத்தை விட, வரத்து அதிகரித்துள்ளது.

    ஆந்திராவில் கடந்த ஒரு மாதமாக சாத்துக்குடி விளைச்சல் அதிகரித்துள்ளது. சேலத்திற்கு வழக்கமாக 30 டன் சாத்துக்குடி விற்பனைக்கு வரும். ஆனால் சில நாட்களாக 50 டன்னுக்கு மேல் விற்பனைக்கு வருகிறது. ஆயுதபூைஜக்கு முந்தைய நாள் இதன் வரத்து 70 முதல் 80 டன்னாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    தற்போது அளவு பொறுத்து சாத்துக்குடி ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    • வாரிய ஆணைய எண்.2-ஐ ரத்து செய்ய வேண்டும்.
    • அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    துணை மின் நிலைய ங்கள் மற்றும் சில பணிகளை அவுட்சோர்சிங் விடுவதையும் மற்றும் ரீடிப்ளாய்மெண்ட் செய்வதையும் திரும்ப பெற வேண்டும், வாரிய ஆணைய எண் 2 ஐ ரத்து செய்ய வேண்டும், அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி தஞ்சை மணிமண்டபம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு பொறியாளர் சங்கம் சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ ராஜாராமன், தொழிலாளர் சம்மேளனம் முபாரக் பாட்ஷா, பொறியாளர் கழகம் மகாலிங்கம், அண்ணா தொழிற்சங்கம் முருகேசன், பொறியாளர் சங்கம் சுந்தர், சிஐடியு காணிக்கராஜ், ஐக்கிய சங்கம் ராகவன், எம்ப்ளாயீஸ் பெடரேசன் ராஜா, ஏ.இ.எஸ்.யு. பழனிநாதன், அம்பேத்கர் சங்கம் ஸ்டாலின், ஐஎன்டியூசி பால்ராஜ், சம்மேளனம் நாகராஜ், ஜனதா சுகுமாறன் ஆகியோர் விளக்க உரையாற்றினர்.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் பகுதியில் கொய்யாப்பழம் வரத்து அதிகரித்துள்ளது.
    • விலை குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ராமநாதபுரம்

    மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் தினமும் கொய்யாப்பழம் ஏலம் நடக்கிறது. ராமநாதபுரம் பழ வியாபாரிகள் பாலமேடு சென்று ஏலத்தில் கலந்து கொண்டு பழங்களை கொள்முதல் செய்கின்றனர். சராசரியாக 25 பெட்டிகள் வரை கொள்முதல் செய்து வருகின்றனர்.

    இது குறித்து ராமநாதபுரம் பழவியாபாரி கூறியதாவது:-

    ஒரு பெட்டியில் 40 கிலோ பழங்கள் இருக்கும். தினமும் 20 முதல் 25 பெட்டிகள் கொள்முதல் செய்து விற்கிறேன்.ராமநாதபுரத்தில் புது பஸ்-நிலையம், சர்ச் முன்பு, பாரதி நகர் மெயின் ரோடு, பஜார் என 4 இடங்களில் சில்லரை விற்பனை கடைகள் உள்ளது.

    ஏலம் எடுக்கப்படும் கொள்முதல் விலையைக் கணக்கில் கொண்டு சில்லரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.கடந்த வாரம் கிலோ ரூ.70 வரை விற்ற கொய்யாப்பழங்கள் தற்போது ரூ.50க்கு விற்கப்படுகிறது. தற்போது கொய்ய ப்பழ சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளது.

    இனி கொய்யாப்பழம் சீசன் பிப்ரவரிக்கு பின்னர் தான் வரும். அதுவரை பழங்கள்வரத்து குறைவாகவும், விலை அதிகரித்தும் காணப்படும். 4 நாட்களாக பாலமேடு கொய்யா வரத்து அதிகரித்து, சில்லரை விலை குறைந்து உள்ளது. மக்களும் மகிழ்ச்சியாக கிலோ கணக்கில் வாங்கி செல்கின்றனர்.

    ×