search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "influx"

    • தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 14ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகை சீசன் சமயத்தில் வெல்லத்தின் தேவை அதிகரித்து வரும்.
    • சேலம் மாவட்டத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 டன் வரை வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    அன்னதானப்பட்டி:

    சபரிமலை சீசன் மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி சேலத்தில் வெல்லம் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் ஓமலூர், காமலாபுரம், நாலுகால்பாலம், டேனிஷ்பேட்டை, கருப்பூர், வெள்ளாளப்பட்டி, தேக்கம்பட்டி, பேளூர், தும்பல், உள்ளிட்ட பகுதிகளில் 130–-க்கும் மேற்பட்ட வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை அதன் விவசாயிகள் சேலம் அன்னதானப்பட்டி, மூலப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள வண்டிக்காரன் நகர் பகுதியில் கரும்பு வெல்லம் உற்பத்தி விவசாயிகள் சங்கத்தில் பொது ஏலத்தில் விட்டு வருகிறார்கள். இங்கு ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் ஏலம் நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் சபரிமலை கோவில் சீசன் கடந்த மாதம் 16- ம் தேதி தொடங்கியது. அய்யப்ப சாமிக்கு அரவணை, அப்பம், பாயாசம், பஞ்சாமிர்தம், பானகம் போன்ற பிரசாதங்கள் நிவேதிக்கப்படுகிறது. இதனால் வெல்லத்தில் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் சேலம் மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் வெல்லம் உற்பத்தி வழக்கத்தைவிட 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

    மேலும் தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 14ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகை சீசன் சமயத்தில் வெல்லத்தின் தேவை அதிகரித்து வரும். இதனால் உற்பத்தியாளர்கள் வெல்லம் உற்பத்தியை அதிகரித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் உற்பத்தியாகி இங்கு வரும் வெல்லத்தை சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை, திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஏலம் மூலம் வாங்கிச் செல்கின்றனர். 

    சேலம் மாவட்டத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 டன் வரை வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் மார்க்கெட்டுக்கு வழக்கமாக 60 முதல் 70 டன் வரை வெல்லம் விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக 80 முதல் 100 டன் வரை வெல்லம் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    நேற்றைய விலை நிலவரப்படி 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் குண்டு வெல்லம் ரூ.1230 முதல் ரூ.1290 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனையில் ஒரு கிலோ வெல்லம் ரூ.41- ரூ.43 என விற்கப்படுகிறது. கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வர இருப்பதால் கடந்த மாதத்தை விட இந்த மாதத்தில் 30 முதல் 40 சதவீதம் வரை வெல்லம் விற்பனை அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகை சீசன் வரை விற்பனை மும்முரமாக நடைபெறும். இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

    • தற்போது அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால் சேலம் மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது.
    • 40 முதல் 60 டன்னாக இருந்த வெங்காயம் வரத்து , தற்போது 100 டன்னாக அதிகரித்துள்ளது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மார்க்கெட்டுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா மாநிலம் கர்னூல், கர்நாடகா மாநிலம் தரிக்கெர, சித்ரதுர்கா உள்ளிட்ட இடங்களிலிருந்து வெங்காய மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

    தற்போது அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் விளைச்சல் அதிகமாக இருப்பதால் சேலம் மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. சேலம் கடைவீதி ,ஆற்றோரம் தெரு, ஆனந்தா காய் மார்க்கெட், பால் மார்க்கெட் பகுதிகளில் கடந்த மாதம் தினமும் 40 முதல் 60 டன்னாக இருந்த வெங்காயம் வரத்து , தற்போது 100 டன்னாக அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக பெரிய வெங்காயம் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.

    தற்போது பெரிய வெங்கா யத்தில் சிறிய அளவு 1 கிலோ ரூ.25-30 எனவும், பெரிய அளவு ரூ.35-40 எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் சின்ன வெங்காயம் விளைச்சல் குறைந்துள்ளதால் அதன் விலை அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.15-20 வரை விற்பனை ஆன தற்போது ரூ.40-60 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது என வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.

    ×