search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வி உதவித் தொகை"

    • தமிழ்நாடு காமராஜர் மக்கள் நண்பர்கள் அன்பு குழு சார்பில் அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச புத்தக பை தலைவர் கதிரேசன் வழங்கினார்.
    • கல்வி உதவித் தொகையும் பலருக்கு வழங்கியுள்ளார்.

    மதுரை

    தமிழ்நாடு காமராஜர் மக்கள் நண்பர்கள் அன்பு குழு சார்பில் அதன் தலை வர் கதிரேசன் கடந்த 22 ஆண்டுகளாக ஏழை, எளிய மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை தொடர்ந்து வழங்கி வருகி றார். அதேபோல் கல்வி உத வித் தொகையும் பலருக்கு வழங்கியுள்ளார்.

    இந்தநிலையில் இந்த அமைப்பு சார்பில் மதுரை தெப்பக்குளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் அரசு பெண் கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சுமார் 400-க்கும் மேற்பட்டோருக்கு இலவச புத்தக பைகளை தலைவர் கதிரே சன் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை பெ.இந்துமதி, உடற்கல்வி இயக்குநர் ச.வசந்தி மற்றும் ஆசிரியைகள் கலந்துகொண் டனர். இலவச புத்தக பைகளை பெற்றுக்கொண்ட மாணவிகள் தமிழ்நாடு காமராஜர் மக்கள் நண்பர் கள் அன்பு குழுவிற்கும், அதன் தலைவர் கதிரேசனுக் கும் தங்களது நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.

    • அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு திறனறித் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
    • தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

    விழுப்புரம்:

    அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு திறனறித் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படும். அதன்படி, விழுப்புரத்தில் 20 தேர்வு மையங்களில் 5,765 மாணவர்களுக்கும், திண்டிவனத்தில் 13 தேர்வு மையங்களில் 3,492 மாணவர்கள் என மொத்தம் 33 தேர்வு மையங்களில் 9,257 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.

    • மாணவ மாணவியருக்கு மொத்தம் ரூ.10.4 லட்சம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டது.
    • இதுவரை இக்கல்லூரியின் வளர்ச்சிக்காக ரூ.1.12 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    கிருஷ்ணகிரி,

    ஐ.வி.டி.பி தன்னார்வத் தொண்டு நிறுவனம், தன்னலமற்ற சமுதாயப் பணிகளில் ஈடுபட்டு ஏழை, எளிய மாணவர்களின் நலனில் அக்கறைக் கொண்டு கல்விப் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, அவர்களை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்வதில் பங்காற்றிவருகிறது.

    அந்த வகையில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் பயிலும் பெற்றோரை இழந்த மாணவ மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு, பெற்றோரில் ஒருவரை இழந்த மாணவர்களுக்கு தலா ரூ.7500-ம், பெற்றோர் இருவரையும் இழந்த மாணவர்களுக்கு தலா.ரூ.10,000-மும் என 135 மாணவ மாணவியருக்கு மொத்தம் ரூ.10.4 லட்சம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டது.

    கல்வி உதவித் தொகையை மாணவர்களுக்கு வழங்கி பேசிய ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர்குழந்தை பிரான்சிஸ், ஐ.வி.டி.பி நிறுவனம் வழங்கும் இக்கல்வி உதவித் தொகையைப் பயன்படுத்தி கல்வியில் சிறந்து விளங்கி, உயர்ந்த பதவியை அடைந்து பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தியதுடன், இதுவரை இக்கல்லூரியின் வளர்ச்சிக்காக ரூ.1.12 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    • முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகின்றன.
    • முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது என ஆளுநர் தலைமையில் நடைபெற்ற மேலாண்மை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: -

    சேலம் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் அறிவது, தொகுப்பு நிதியின் மாநில மேலாண்மை குழுக் கூட்டத்தில் தமிழக ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

    இக் கூட்டத்தில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கு கல்வி மேம்பாட்டு நிதியுதவியாக (கல்வியுதவி தொகை) 1 முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.2,000-மும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு ரூ.4,000-மும், 9 முதல் 10-ம் வகுப்பு வரை ரூ.5,000-மும், 11 முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.6,000-மும் உயர்த்தி வழங்கிட முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • கல்வி உதவித் தொகை திட்டம் குறித்த விவரங்களுக்கு கட்டணமில்லா எண் 14417ல் தொடர்புக் கொள்ளலாம்.
    • திட்டத்தின்கீழ் ரூ.1000 உதவித் தொகை பெற இதுவரை சுமார் 2 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

    உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 அளிக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கால அவகாசம் இன்றுடன் முடியவிருந்த நிலையில் ஜூலை 10-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    மாணவிகள் www.penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவேற்ற வேண்டும். கல்வி உதவித் தொகை திட்டம் குறித்த விவரங்களுக்கு கட்டணமில்லா எண் 14417ல் தொடர்புக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கல்வி உதவித் தொகை திட்டத்தின்கீழ் ரூ.1000 உதவித் தொகை பெற இதுவரை சுமார் 2 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

    ×