search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inflow"

    • கடந்த சில நாட்களாக ஆந்திராவில் சாத்துக்குடி விளைச்சல் அதிகரித்துள்ளது.
    • இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தைகளுக்கு சாத்துக்குடி ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    சேலம்:

    ஆந்திராவில் ராஜமுந்திரி, புலிவேந்தலா, கடப்பா, நந்திமண்டல், நெல்லூர் உள்ளிட்ட இடங்களில் சாத்துக்குடி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் சாத்துக்குடி இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஆந்திராவில் சாத்துக்குடி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தைகளுக்கு வழக்கத்தை விட, வரத்து அதிகரித்துள்ளது.

    ஆந்திராவில் கடந்த ஒரு மாதமாக சாத்துக்குடி விளைச்சல் அதிகரித்துள்ளது. சேலத்திற்கு வழக்கமாக 30 டன் சாத்துக்குடி விற்பனைக்கு வரும். ஆனால் சில நாட்களாக 50 டன்னுக்கு மேல் விற்பனைக்கு வருகிறது. ஆயுதபூைஜக்கு முந்தைய நாள் இதன் வரத்து 70 முதல் 80 டன்னாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    தற்போது அளவு பொறுத்து சாத்துக்குடி ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    • சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவில் விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது.
    • இதைத் தொடர்ந்து இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சீத்தா பழங்களை அறுவடை செய்து பழ மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவில் விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது. மேலும் இங்கு சிறு கரடுகள் குன்றுகள் மலைகள் நிறைந்த பகுதியாக உள்ளது. கரடு பகுதியில் சிறு குன்று பகுதியில் மற்றும் தோட்டங்களில் ஓரங்களில் அதிகளவில் சீத்தா மரங்கள் உள்ளன.

    இதில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளதால் அதிகளவில் சீத்தாப்பழம் விளைச்சல் கண்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சீத்தா பழங்களை அறுவடை செய்து சின்ன திருப்பதி பழ மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

    ஒரு கிரேடு 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து இங்கு அறுவடை செய்யப்படும் சீத்தா பழங்களை மொத்தமாக வியாபாரிகள் வாங்கி கேரளா மாநிலத்திற்கு அனுப்பி வைத்து விற்பனை செய்கின்றனர். இந்த ஆண்டு சீதாப்பழம் விற்பனை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கடந்த சில மாதங்களாக பருத்தி மூட்டைகள் வரத்து அதிக அளவில் இருந்தது.
    • இந்த வாரம் ஆயிரம் மூட்டைகள் மட்டும் பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டது.

    அந்தியூர்:

    அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அத்தாணி சாலை வாரச்சந்தை எதிர்ப்புறம்அமைந்துள்ளது. இங்கு விவசாயிகளின் விளை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை நடைபெறும்.

    இந்த நிலையில் அந்தியூர் தவிட்டுப்பாளையம், வெள்ளியம்பாளையம், வட்டக்காடு, புதுக்காடு, காந்தி நகர், சங்கரா பாளை யம், எண்ணமங்கலம், சின்னத்தம்பி பாளையம், பச்சம் பாளையம், கள்ளி மடை குட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பருத்தி பயிரிட்டு உள்ளனர்.

    இதையொட்டி வெள்ளிக்கிழமை முதல்திங்கட்கிழமை வரை ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டிடத்தில் பருத்தி வைக்கப்பட்டு அதன் ஏலம் திங்கட்கிழமை காலை அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஞானசேகர் முன்னிலையில் நடைபெறும்.

    இந்த ஏலத்தில் புளியம்பட்டி, அன்னூர், கொங்கணாபுரம், சத்தியமங்கலம், அவிநாசி, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து பருத்தியின் விளைச்சலுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயிக்கப்பட்டு ஏலம் எடுத்து வருகிறார்கள்.

    கடந்த சில மாதங்களாக பருத்தி மூட்டைகள் வரத்து அதிக அளவில் இருந்தது. இந்த நிலையில் பருத்தி விளைச்சல் குறைவானதை யொட்டி அந்தியூர் ஒழுங்கு முறை கூடத்துக்கு பருத்தி வரத்து குறைந்தது.

    இதையடுத்து இந்த வாரம் ஆயிரம் மூட்டைகள் மட்டும் பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டது.

    • கடந்த சில நாட்களாக ஆந்திராவில் சாத்துக்குடி விளைச்சல் அதிகரித்துள்ளது.
    • இதன் காரணமாக அங்கிருந்து நாள் ஒன்றுக்கு 30 முதல் 40 டன் சாத்துக்குடி சேலம் மாவட்டத்துக்கு விற்பனைக்கு வருகிறது.

    சேலம்:

    ஆந்திரா கடப்பா, நந்திமண்டல் உள்பட பல இடங்களில் சாத்துக்குடி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் சாத்துக்குடி இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக ஆந்திராவில் சாத்துக்குடி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அங்கிருந்து நாள் ஒன்றுக்கு 30 முதல் 40 டன் சாத்துக்குடி சேலம் மாவட்டத்துக்கு விற்பனைக்கு வருகிறது. இங்கு விற்பனைக்கு வரும் சாத்துக்குடியை சில்லரை வியாபாரிகள் வாங்கிச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    சாத்துக்குடி வரத்து அதிகரிப்பால் சேலம் மாநகரில் விலை சரிந்துள்ளது. கடந்த கோடையில் ஒரு கிலோ சாத்துக்குடி ரூ.70 முதல் ரூ.100க்கு விற்றது. தற்போது வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.30 முதல் ரூ.50 என சரிந்துள்ளது. விலை சரிந்துள்ளதால் பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.

    வரத்து அதிகரிப்பால் கட்டுமாவடியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு நண்டுகள் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    மணமேல்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே கட்டுமாவடியில் நாட்டுப்படகு மீன்பிடிதளம் உள்ளது. விசைப்படகு மீனவர்களுக்கு தடைக்காலம் உள்ளதால் நாட்டுப் படகு மீனவர்கள் மட்டும் கடலில் மீன் பிடித்து வருகின்றனர். குறைந்த அளவிலான நாட்டுப்படகில் பிடிக்கப்படும் மீன்கள் மட்டும் கட்டுமாவடி,மணமேல்குடி மீன் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வருவதால் மீன்களின் விலை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தற்போது நாட்டுப்படகு மீனவர்கள் நண்டு வலையுடன் கடலுக்கு செல்வதால் நண்டுகளின் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் மார்க்கெட்டிற்கு நண்டுகள் அதிகமாக விற்பனைக்கு வருகிறது.

    இதனை உள்ளூர் வியாபாரிகள் வாங்கி அதனை வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர். மருத்துவகுணம் வாய்ந்த இந்த நண்டுகள் வெளிமாநிலங்களில் அதிக விலைக்கு விற்பனையாவதால் உள்ளூர் வியாபாரிகள் ஏராளமாக வாங்கி அனுப்பி வருகின்றனர். மேலும் நண்டுகளின் தேவையும் அதிகரித்துள்ளதால் மீனவர்கள் கடலுக்கு நண்டு வலையுடன் சென்று பிடித்து வருகின்றனர். இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
    ×