search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "guava supply"

    • ராமநாதபுரம் பகுதியில் கொய்யாப்பழம் வரத்து அதிகரித்துள்ளது.
    • விலை குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ராமநாதபுரம்

    மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் தினமும் கொய்யாப்பழம் ஏலம் நடக்கிறது. ராமநாதபுரம் பழ வியாபாரிகள் பாலமேடு சென்று ஏலத்தில் கலந்து கொண்டு பழங்களை கொள்முதல் செய்கின்றனர். சராசரியாக 25 பெட்டிகள் வரை கொள்முதல் செய்து வருகின்றனர்.

    இது குறித்து ராமநாதபுரம் பழவியாபாரி கூறியதாவது:-

    ஒரு பெட்டியில் 40 கிலோ பழங்கள் இருக்கும். தினமும் 20 முதல் 25 பெட்டிகள் கொள்முதல் செய்து விற்கிறேன்.ராமநாதபுரத்தில் புது பஸ்-நிலையம், சர்ச் முன்பு, பாரதி நகர் மெயின் ரோடு, பஜார் என 4 இடங்களில் சில்லரை விற்பனை கடைகள் உள்ளது.

    ஏலம் எடுக்கப்படும் கொள்முதல் விலையைக் கணக்கில் கொண்டு சில்லரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.கடந்த வாரம் கிலோ ரூ.70 வரை விற்ற கொய்யாப்பழங்கள் தற்போது ரூ.50க்கு விற்கப்படுகிறது. தற்போது கொய்ய ப்பழ சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளது.

    இனி கொய்யாப்பழம் சீசன் பிப்ரவரிக்கு பின்னர் தான் வரும். அதுவரை பழங்கள்வரத்து குறைவாகவும், விலை அதிகரித்தும் காணப்படும். 4 நாட்களாக பாலமேடு கொய்யா வரத்து அதிகரித்து, சில்லரை விலை குறைந்து உள்ளது. மக்களும் மகிழ்ச்சியாக கிலோ கணக்கில் வாங்கி செல்கின்றனர்.

    ×