search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gutka"

    • போலீசார் பண்பொழி சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • கடைகளுக்கு விற்பனை செய்ய கொண்டு வந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள 90 கிலோ குட்கா கண்டுபிடிக்கப்பட்டது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் பகுதிகளில் கார், மோட்டார் சைக்கிள்களில் சில்லறை கடைகளுக்கு அதிக அளவில் குட்கா விற்பனை செய்வதாக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    90 கிலோ

    இதனைத் தொடர்ந்து புளியங்குடி டி.எஸ்.பி. அசோக் உத்தரவின் பேரில் கடையநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் போலீசார் மேல கடையநல்லூர் பண்பொழி சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது அந்த வழியாக வந்த கார்- மோட்டார் சைக்கிள்களை சோதனை செய்த பொழுது அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொட்டலங்கள் சில்லறை கடைகளுக்கு விற்பனை செய்ய கொண்டு வந்த 90 கிலோ ரூ.1 லட்சம் மதிப்புள்ள குட்கா கண்டுபிடிக்கப்பட்டது.

    3 பேர் கைது

    இதனைத் தொடர்ந்து காரில் இருந்த தென்காசி ஐந்து வர்ணம் பெரிய தெருவை சேர்ந்த நாகூர் மீரான் (29), மேல கடையநல்லூர் இந்திரா நகர் புது காலனியைச் சேர்ந்த வைரமுத்து (39), தென்காசி புதுமனை இரண்டாவது தெருவை சேர்ந்த நூரி அமீன் (40) ஆகிய 3 பேரையும் கடையநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் விற்பனைக்கு பயன்படுத்திய கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    • போலீசார் வாகன தணிக்கை மற்றும் கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
    • பெட்டிக்கடை அருகே சிலர் குட்காவை பதுக்கி விற்பதாக ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் வந்தது.

    கோவை:

    கோவையில் போலீசார் வாகன தணிக்கை மற்றும் கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின் போது கடைகளில் குட்கா பதுக்கி விற்பது தெரிந்தால் அவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    சத்தி மெயின் ரோடு ஆம்னி பஸ் நிறுத்தம் அருகே ரத்தினபுரி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை மடக்கி சோதனை செய்தனர். இதில், குட்காவை விற்பனை செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் குட்கா வியாபாரிகளான கணபதி லட்சுமி நகரை சேர்ந்த சந்திரசேகர்(44), பிரதீப்குமார்(21), அழகுபாண்டி (44) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான 190 கிலோ குட்கா மற்றும் ஆம்னி வேன் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல், பாப்பநாயக் கன்பாளையம் காய்கடை பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு பெட்டிக்கடை அருகே சிலர் குட்காவை பதுக்கி விற்பதாக ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் வந்தது.

    அதன்பேரில், போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 350 குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் குட்கா விற்றதாக வியாபாரிகளான கோவை பாப்ப நாயக்கன்பாளையம் அசோகர் வீதியை சேர்ந்த கவுதம் (21) மற்றும் அண்ணாதுரை (50) ஆகிய 2 பேரை கைது ெசய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,400-யை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தொடர்ந்து குட்கா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
    • இந்த நிலையில் கடந்த மாதம் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 45 கிலோ குட்கா மற்றும் பான்மசாலா விற்றதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம், ஆயில்பட்டி போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட முள்ளு–குறிச்சியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது34). இவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவர் அந்தப் பகுதியில் தொடர்ந்து குட்கா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 45 கிலோ குட்கா மற்றும் பான்மசாலா விற்றதாக பேளுகுறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் ஆயில்பட்டி போலீசார் அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் போதை பொருள் ஒழிப்பு சம்பந்தமாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவுக்கிணங்க நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஸ்ரேயா சிங் சதீஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதை தொடர்ந்து சதீஷ்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். 

    • அரகண்டநல்லூர் அருகே ஆட்டோவில் குட்கா கடத்தியவர் கைதுசெய்யப்பட்டார்.
    • ஆட்டோ ஓட்டி வந்தவர், திருவண்ணாமலையைச் சேர்ந்த ரமேஷ்.

    விழுப்புரம்:

    அரகண்டநல்லூர்அருகே மணம்பூண்டி பி.டி.ஓ., அலுவலகம் அருகே டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையிலான தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 4 மூட்டைகளில் 2,100 குட்கா பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.விசாரணை யில் ஆட்டோ ஓட்டி வந்தவர், திருவண்ணாமலையைச் சேர்ந்த ரமேஷ், 42; எனவும் விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது. உடனே ஆட்டோ, குட்கா மூட்டைகளை கைப்பற்றி, ரமேஷை கைது செய்தனர்.

    • புகையிலை பொருட்கள் விற்பதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 250 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.

    சூலூர்

    சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சூலூர் வட்ட காவல் ஆய்வாளர் மாதையன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திர பிரசாத் மற்றும் கார்த்திக் குமார் உள்ளிட்டோர் அப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ரமேஷ்(38) என்பவரின் கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு மறைத்து வைத்திருந்த 250 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 10 கிலோ குட்கா வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கேத்தனூரை சேர்ந்த நடராஜன் மகன் கணேசன் (வயது 45 ). இவர் பல்லடம்- உடுமலை சாலையில் உள்ள கேத்தனூரில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் குட்கா விற்பனை செய்வதாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு போலீசார் சென்று சோதனை செய்ததில் 10 கிலோ குட்கா வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக கணேசனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 கிலோ குட்காவை கோப்புபடம். செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    • மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து ஹான்ஸ் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து நூர்முகம்மது மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடைகளில் குட்கா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் குட்கா விற்பனையை தடுக்க தீவிர சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    ஈரோட்டை அடுத்து உள்ள ஆர்.என்.புதூர் ராகவேந்திரா நகரில் உள்ள முத்துராஜா (29) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். சோதனையில் மளிகை கடையில் வைத்து குட்கா விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் முத்துராஜாவை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 45 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இந்த மளிகை கடை அரசு பள்ளிக்கூடம் அருகே உள்ளது குறிப்பிடத்தக்கது.

    டி.என்.பாளையம் அருகே உள்ள பங்களாபுதூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் நூர் முகமது (35). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் இவரது கடையில் சட்டவிரோதமாக குட்கா பதுக்கி விற்பனை செய்வதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மளிகை கடையை போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் 10 குட்கா (ஹான்ஸ்) பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து ஹான்ஸ் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து நூர்முகம்மது மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • மளிகை கடைகாரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • குட்காவை சட்டத்திற்கு விரோதமாக விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை

    கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் தடை செய்யப்பட்ட குட்காவை சட்டத்திற்கு விரோதமாக விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன் அடிப்படையில் துடியலூர் மற்றும் பேரூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பேரூர் தீத்திபாளையம் பகுதியில் உள்ள மளிகை கடையில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

    போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு 101.75 கிலோ குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கடை நடத்தி வந்த பீம்சன் (வயது 51) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் இருந்து குட்காவை பறிமுதல் செய்தனர். பின்னர் பீம்சனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதேபோன்று துடியலூர் போலீசார் அப்பநாயக்கன் பாளையம் முல்லை நகர் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது முத்தீசன் (27) என்பவது கடையில் 20 கிலோ குட்கா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் குட்காவை பறிமுதல் செய்தனர்.

    பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குட்கா விற்பனைக்கு வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது குளத்தூர் பகுதியில் செந்தில்வேல் குமார் (37) என்பவர் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 49 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். போலீசார் நேற்று ஒரே நாளில் 170.75 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர். சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்தார். 

    • ரெயில்களில் குட்கா- மதுபாட்டில்கள் கடத்தியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ெரயிலிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

    மதுரை

    மதுரை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் வெளிமாநில மதுபானம் ஆகியவை கடத்திக்கொண்டு வரப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையில் போலீசார் இன்று அதிகாலை முதல் மதுரை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் அதிரடி சோதனை நடத்தினர். நிஜாமுதீன்- மதுரை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த பயணிகளிடம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பேரையூரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் 10 வெளிமாநில மது பாட்டில்களை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முத்துக்குமாரை கைது செய்தனர்.

    சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பொதுப்பெட்டியில் ராஜஸ்தான் மாநிலம் தாஸ்பான் பகுதியைச் சேர்ந்த திகாம்சிங் (வயது 26) என்பவர் தடை செய்யப்பட்ட 16 கிலோ குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குட்காவை பறிமுதல் செய்த போலீசார் திகாம்சிங்கை கைது செய்தனர்.

    • அருப்புக்கோட்டையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை அருகில் உள்ள வெள்ளைகோட்டையை சேர்ந்தவர் முத்துராசு (32). இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து சார்பு ஆய்வாளர் தாமரைக்கண்ணன், தலைமை காவலர் அன்பழகன் மற்றும் போலீசார் முத்து ராசுவை பிடித்து விசாரணை செய்தனர். அப்ேபாது அவரிடம் குட்கா பண்டல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்து விசாரணை நடத்தியபோது, முத்துராசு மீது ஏற்கனவே 2 வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    அருப்புக்கோட்டை நகர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதை பொதுமக்கள் பாராட்டினர்.

    • தேவகோட்டையில் குட்கா, புகையிலை விற்ற கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
    • 10-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது.

    தேவகோட்டை

    தமிழக அரசு குட்கா- புகையிலை விற்பனையை தடை செய்து உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் உத்தர வுப்படி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    தேவகோட்டை துணைக்காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் அறிவுரைப்படி நகர் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் தேவகோட்டை நகர் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 5 கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் 10க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து பஸ் நிலையத்தில் இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான ஸ்நாக்ஸ் கடையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.

    அங்கிருந்த குட்கா, புகையிலையை பறிமுதல் செய்தனர். அதனை விற்பனை செய்தவரை ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். வட்டார உணவு பாதுகாப்புதுறை அலுவலர் வேல்முருகன், உதவியாளர் மாணிக்கம் அதிகாரிகள் கடைக்கு சீல் வைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    • விழுப்புரத்தில் அதிரடி: குட்கா விற்ற கடைக்கு அதிகாரிகள் சீல்வைத்தனர்.
    • அதிகாரி பாலசுப்பிரமணியன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் முன்னிலையில் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் நகர போலீஸ் நிலையம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் குருசாமி பிள்ளை தெருவில் பங்கடையில் விற்பனைக்காக வைத்திருந்த ஹான்ஸ், ஆர்எம்.பி பாக்கு, விமல் பாக்கு வைத்து வியாபாரம் செய்த விழுப்புரம் ஜி.ஆர்.பி தெருவை சேர்ந்த திவாகர் (வயது 27) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பங்க் கடையை விழுப்புரம் நகராட்சி அதிகாரி பாலசுப்பிரமணியன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் முன்னிலையில் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

    ×