search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடைகள் சீல்"

    • அதிகாரிகள் கடையில் இருந்த பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கப்புகள், மாத்திரைகள் என 300 கிலோவை பறிமுதல் செய்தனர்.
    • இக்கடையில் மாத்திரைகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் வழங்கப்பட்டு வந்தது தெரிய வந்தது.

    அவிநாசி:

    சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கப்புகள் உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் பயன்படுத்த, விற்க அரசு தடை விதித்துள்ளது. இதற்கு மாற்றாக துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. மேலும் கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பலவற்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் உடனடியாக பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

    எச்சரிக்கை விடுத்தும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே இந்த உத்தரவை மீறும் வகையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சில கடைகள் செயல்பட்டு வருவதாக சுகாதரத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த, மொத்த விற்பனை கடையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் கப்புகள், துணி பைகள் என மூட்டை மூட்டையாக குடோனில் வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இது மட்டுமின்றி காய்ச்சல், தலைவலி என உடல் உபாதைகளோடு வருபவர்களுக்கு இக்கடையில் மாத்திரைகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் வழங்கப்பட்டு வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அதிகாரிகள் கடையில் இருந்த பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கப்புகள், மாத்திரைகள் என 300 கிலோவை பறிமுதல் செய்தனர். அதே போல் அக்கடையின் அருகே செயல்பட்டு வந்த மற்றொரு கடையில் இருந்த இதே போல் 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட 600 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள பறிமுதல் செய்யப்பட்டு மொத்த விற்பனை கடைக்கு அபராதமும், மற்றொரு கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

    • மாநகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய மாத வாடகையை கடைக்காரர்கள் செலுத்த தவறியதால் பாக்கித் தொகை சுமார் ரூ.3 கோடி உயர்ந்துள்ளது.
    • கடந்த 2017-ம் ஆண்டு முதல் கடைக்காரர்கள் வாடகை செலுத்தாமல் ரூ.5 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை வாடகை பாக்கி செலுத்தாமல் தாமதித்து வந்துள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 103 கடைகள் உள்ளன. இந்த கடைகளை ஒப்பந்த அடிப்படையில் மாத வாடகைக்கு மாநகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது. பஸ் நிலையத்தில் பேன்சி கடை, டீக்கடை, பழக்கடை என பல்வேறு கடைகள் வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய மாத வாடகையை கடைக்காரர்கள் செலுத்த தவறியதால் பாக்கித் தொகை சுமார் ரூ.3 கோடி உயர்ந்துள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டு முதல் கடைக்காரர்கள் வாடகை செலுத்தாமல் ரூ.5 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை வாடகை பாக்கி செலுத்தாமல் தாமதித்து வந்துள்ளனர். இதனால் வாடகை பாக்கி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் தமிழரசு உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் கால அவகாசம் கொடுத்தும் மாத வாடகை செலுத்தாத 25 கடைகளை பூட்டி சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    • தேவகோட்டையில் குட்கா, புகையிலை விற்ற கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
    • 10-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது.

    தேவகோட்டை

    தமிழக அரசு குட்கா- புகையிலை விற்பனையை தடை செய்து உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் உத்தர வுப்படி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    தேவகோட்டை துணைக்காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் அறிவுரைப்படி நகர் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் தேவகோட்டை நகர் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 5 கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் 10க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து பஸ் நிலையத்தில் இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான ஸ்நாக்ஸ் கடையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.

    அங்கிருந்த குட்கா, புகையிலையை பறிமுதல் செய்தனர். அதனை விற்பனை செய்தவரை ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். வட்டார உணவு பாதுகாப்புதுறை அலுவலர் வேல்முருகன், உதவியாளர் மாணிக்கம் அதிகாரிகள் கடைக்கு சீல் வைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    ×