search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gaja cyclone impact"

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர், திருத்துறைப்பூண்டி, தட்டான்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற கவர்னர் அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களின் நிலைமையை கேட்டறிந்தார். #GajaCyclone #Banwarilalpurohit
    திருவாரூர்:

    கஜா புயல் தாக்கியதில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று நாகை வந்தார்.

    புயலால் பாதித்த நாகை மற்றும் வேளாங்கண்ணி, வேதாரண்யம், சாலை வழியாக காமேஸ்வரம், விழுந்த மாவடி, வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

    இதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் திருவாரூர் மாவட்டத்திற்கு சென்று அங்கு புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்.


    திருவாரூர், திருத்துறைப்பூண்டி, தட்டான்கோவில் உள்ளிட்ட புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களின் நிலைமையை கேட்டறிந்தார். அப்போது பெண்கள் கண்ணீர் மல்க கவர்னரிடம் தங்கள் படும் அவலநிலையை எடுத்து கூறினர்.

    இதை கேட்டுக் கொண்ட கவர்னர், அவர்களுக்கு ஆறுதல் கூறி அங்கிருந்து புறப்பட்டார்.

    பின்னர் மன்னார்குடி அருகே காசாங்குளம், சேரி, கோட்டூர், கோட்டூர் தோட்டம், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அங்கு தங்கள் குடிசை வீடுகளை இழந்து தவிக்கும் மக்களை சந்தித்தும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களை சந்தித்தும் ஆறுதல் கூறினார்.

    அப்போது கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் இந்த புயல் எங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்து விட்டது. நாங்கள் அடிப்படை வசதி கூட இல்லாமல் தவித்து வருகிறோம். எங்களுக்கு நிவாரண பணி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர்.

    இதனை கேட்டுக் கொண்ட கவர்னர் அதிகாரிகளை விரைந்து நடவடிக்கை எடுக்க கூறியுள்ளேன். தொடர்ந்து உங்கள் பகுதிக்கு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் நடைபெறும் என்றார்.

    இதன் பின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடமும் கேட்டறிந்தார். மீட்பு பணிகளை விரைந்து எடுக்கவேண்டும் என்று அவர்களிடம் கவர்னர் தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து திருவாரூரில் உள்ள அரசினர் மாளிகைக்கு சென்ற கவர்னர் அங்கு சிறிது நேரம் ஓய்வுக்கு பின் பிற்பகலில் மீண்டும் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை உள்ளிட்ட புயலால் சேதமான பகுதிகளை பார்வையிடுவதற்கு செல்கிறார். #GajaCyclone #TNGovernor #Banwarilalpurohit

    பிரதமரை சந்தித்தபோது தமிழகத்திற்கு கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசிடம் 15,000 கோடி ரூபாய் கேட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #GajaCyclone #EdappadiPalaniswami #Modi #GajaCycloneRelief
    புதுடெல்லி:

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேத விவரங்களை எடுத்துக் கூறி, மத்திய அரசு நிதி ஒதுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

    இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    தமிழகத்தில் கஜா  புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேத விவரங்களை பிரதமரிடம் எடுத்துக் கூறி, புயல் நிவாரணமாக 15000 கோடி வழங்க வேண்டும் என கூறியிருக்கிறோம். இப்போது இடைக்கால நிவாரணமாக உடனடியாக 1500 கோடி ரூபாய் வழங்கும்படி கேட்டுக்கொண்டோம்.

    மேலும் மத்திய குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைத்து, சேத விவரங்களை உடனடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து விரைவில்  நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம். உடனடியாக மத்திய குழுவை அனுப்புவதாக பிரதமர் கூறியிருக்கிறார்.


    கஜா புயலால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புயல் மழைக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல் புயலால் சேதமடைந்த வீடுகள், பாதிக்கப்பட்ட விளைநிலங்கள், பயிர்கள், படகுகள் என சேத விவரங்களையும் முதல்வர் விளக்கமாக கூறினார். நிவாரண உதவிகள் குறித்த புள்ளி விவரங்களையும் அவர் வெளியிட்டார். #GajaCyclone #EdappadiPalaniswami #Modi #GajaCycloneRelief

    தமிழகத்தில் புயல் பாதித்த மாவட்டங்களை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கும்படி பிரதமரிடம் முதல்வர் கேட்டுக்கொண்டார். #PMModi #GajaCyclone #GajaCycloneRelief
    புதுடெல்லி:

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, கஜா புயல் பாதிப்பு மற்றும் சேதங்கள் குறித்து விளக்கினார். மேலும் புயல் சேத விவரம் அடங்கிய அறிக்கையை அளித்தார். புயல் பாதிப்பை சரி செய்ய தமிழக அரசுக்கு விரைவாக நிதி ஒதுக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.


    மேலும், கஜா புயலால் ஏற்பட்ட சேத பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த மத்திய பேரிடர் ஆய்வுக்குழு விரைந்து தமிழகம் வர வேண்டும், கஜா புயல் தாக்கிய மாவட்டங்களை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

    முதல்வருடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.  #PMModi  #GajaCyclone #GajaCycloneRelief #CMOfficeTamilNadu

    கஜா புயலால் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்ததால் ஏற்பட்ட மனவேதனையில் தஞ்சையைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்துள்ளார். #GajaCyclone #FarmerSuicide
    தஞ்சை:

    தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை கஜா புயல் புரட்டிப்போட்டுள்ளது. புயல் மற்றும் மழையால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயிகள் பேரழிவை சந்தித்துள்ளனர். தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்ததால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் தஞ்சை மாவட்டம் சோழகன்குடிகாடு கிராமத்தில் தென்னை விவசாயி சுந்தர்ராஜ் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். தனக்கு சொந்தமான 5 ஏக்கர் தென்னந்தோப்பு புயலால் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. #GajaCyclone #FarmerSuicide
    புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் எதிர்ப்பை சமாளிக்க அனைத்து கட்சி உறுப்பினர்கள் அடங்கிய நிவாரண குழு அமைக்க வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார். #MDMK #Vaiko #GajaCyclone
    திருச்சி:

    திருச்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தின் வளம் கொழிந்த பகுதியான காவிரி பாசன பகுதி கஜா புயலால் நாசமாகியுள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகள், நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. இதனால் 51 பேர் பலியாகியுள்ளனர். காவிரி டெல்டா பாலைவனமாக மாறிவிடக்கூடாது என தொடர்ந்து போராடி வருகிறோம். தற்போது புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் மாவட்ட கலெக்டர் மற்றும் நிர்வாகம், மருத்துவர்கள், மின்வாரிய ஊழியர்கள் என அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ம.தி.மு.க. சார்பில் வாழ்த்துக்கள்.

    தமிழக அரசு ஆயிரம் கோடி நிவாரணம் அளித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. புயல் நிவாரண பணி, மீட்பு பணிகளில் ஈடுபட அனைத்து கட்சி உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும். அப்போது தான் மக்களின் எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். புயல் முன்னேற்பாடுகளில் இதைவிட எந்த சர்க்காரும் சிறந்து செயல்பட முடியாது. அதை தாண்டி ஏற்பட்ட சேதங்கள் வேதனையளிக்கிறது. மக்கள் தண்ணீர், மருந்துகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர். கேரளாவில் வெள்ளம் ஏற்பட்ட போது ஆளும் கட்சி, எதிர்கட்சி இணைந்து செயல்பட்டது. அறிவிக்கப்பட்ட நிவாரண உதவிகள் உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடைய வேண்டும்.

    எதிர்க்கட்சி தலைவர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் போது எதிர்ப்பு வருகிறது. அதனை சமாளிக்கும் வகையில் அனைத்து கட்சி உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும்.

    வெளிநாடுகளுக்கு செல்லும் பிரதமர் தமிழகத்திற்கு வரவில்லை. தமிழக அமைச்சர்கள் பார்க்க அனுமதி கேட்டும் நேரம் ஒதுக்கவில்லை. ஒன்று நேரில் வந்து பார்த்திருக்க வேண்டும். இல்லை உடனடியாக மாநில அரசிற்கு அனுமதி வழங்கி கலந்தாலோசனை செய்திருக்க வேண்டும். மற்ற பகுதிகளில் சேதம் ஏற்பட்டபோது பார்வையிட்ட பிரதமர் ஒரு நாள் நேரம் ஒதுக்க முடியாதா? பிரதமர் மோடி வெளிநாட்டு இந்தியர்களின் பிரதமராக செயல்படுகிறார்.


    தமிழகத்திற்கு பிரதமர் மோடி இல்லை. உள்ளாட்சிதேர்தல் நடந்திருந்தால் பஞ்சாயத்து உறுப்பினர்கள் மூலம் நிவாரண பணிகளை செய்திருக்க முடியும்‌. அதற்கும் தமிழக அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளது. தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் கவர்னர் அளித்துள்ள விளக்கம் ஏற்புடையதாக அல்ல. கவர்னர் பன்வாரிலால் புரோகித் மத்திய அரசின் புரோக்கராக செயல்படுகிறார். இதே கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவரின் பேத்திகள் எரித்து கொல்லப்பட்டிருந்தால் இதேபோல் விளக்கம் கூறுவாரா? 7 பேர் விடுதலை குறித்து அ.தி.மு.க. நிறைவேற்றிய தீர்மானம், பஸ் எரிப்பு வழக்கில் 3 பேரை காப்பாற்றுவதற்கு தான். மரண தண்டனைகள் வேண்டாம் என்பது ம.தி.மு.க.வின் கொள்கை.

    மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க கோரி நவம்பர் 24ந்தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தி.மு.க.வின் தலைமையில் ம.தி.மு‌.க. தொடர்ந்து செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MDMK #Vaiko #GajaCyclone
    கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை அரசு வேகப்படுத்த வேண்டும் என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #BJP #PonRadhakrishnan #GajaCyclone
    சென்னை:

    கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கஜா புயலால் ஏற்பட்டு இருப்பது மிகப்பெரிய பாதிப்பு. குறிப்பாக தென்னை மரங்கள் அதிக அளவில் சாய்ந்துள்ளன. அடிப்படை வசதிகளுக்காக மக்கள் சிரமப்படுவது தீர்க்கப்பட வேண்டும்.

    குடிநீர், உணவு, மின்சாரம், சுகாதாரம் ஆகியவற்றுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். அந்த வகையில் பணிகளும் நடக்கிறது.

    எல்லா முகாம்களிலும் அரசு பிரதிநிதி நியமிக்கப்பட வேண்டும். பல முகாம்களில் ஜெனரேட்டர் வசதி இல்லை. உடனே அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பை தெரிவிப்பது தவறு இல்லை. ஆனால் போராட்டம் மூலம் பணிகளுக்கு இடையூறு செய்வது நிவாரண பணிகளை மந்தமாக்கும் என்பதை உணர வேண்டும். அரசு பணிகளை இன்னும் வேகப்படுத்த வேண்டும்.

    நிவாரண பணிகளை அரசியல் ஆக்க கூடாது. அரசியல் கட்சிகளும், போராட்டங்களை தூண்டக் கூடாது. அதற்கு பதிலாக எங்கெங்கு என்னென்ன உடனடியாக செய்ய வேண்டும் என்பதை எல்லா கட்சிகளும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லலாம்.

    மிகப்பெரிய இயற்கை பேரிடரில் சிக்கி தவிக்கும் நிலையில் மீளவும், மீட்கப்படவும் எல்லோரும் துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan #GajaCyclone
    டெல்டா மாவட்டங்களில் இன்று காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பயணம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. #GajaCyclone #TNCM #Edapapdipalaniswami
    திருச்சி:

    ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட மச்சுவாடி, மாப்பிள்ளையார் குளம் ஆகிய பகுதிகளில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை ஆய்வு பணியில் ஈடுபட்டனர். பின்னர் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினர்.

    இதைத்தொடர்ந்து முதல்வர் , துணை முதல்வர் மற்றும் அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு சென்றனர். பட்டுக்கோட்டை சூரப்பள்ளம் பகுதி அருகே உள்ள மைதானத்தில் முதல்வர் வந்த ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது.


    பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்ற முதல்வர், சூரப்பள்ளம் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார். இதையடுத்து திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட செல்ல இருந்தார்.

    இந்தநிலையில் டெல்டா மாவட்டங்களில் இன்று காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புயல் சேத ஆய்வு பணி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.

    இதையடுத்து முதல்வர் மற்றும் அதிகாரிகள் பட்டுக்கோட்டையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு வந்திறங்கினர். பின்னர் அங்கிருந்து திருச்சி அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றனர். அங்கு சென்றதும் அதிகாரிகளுடன் புயல் நிவாரண பணிகள் குறித்து முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.

    இதையடுத்து இன்று பிற்பகலிலோ அல்லது மாலையோ எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார் என கூறப்படுகிறது.

    இதற்கிடையே மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, நாகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேறு ஒரு நாளில் புயல் சேதங்களை ஆய்வு செய்வார் என தெரிவித்துள்ளார்.  #GajaCyclone #TNCM #Edapapdipalaniswami
    கஜா புயல் பாதிப்பு குறித்து மத்திய உள்துறைக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #GajaCycone #PonRadhakrishnan #BJP
    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

    பிறகு புயலால் பாதிக்கப்பட்டு அங்குள்ள பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் தங்க வைக்கப்பட்டு இருந்த பொதுமக்களை  சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இதையடுத்து பொன்.ராதா கிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விவசாய நிலங்கள் குறிப்பாக தென்னை மரங்கள் மொத்தமாக சாய்ந்துள்ளது.

    நெற்பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. குடிசை வீடுகளும் சேதமாகி உள்ளது. சேதமான வீடுகளை சீரமைக்கும் வரை இந்த மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். குடிநீர், உணவு, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

    கஜா புயல் பாதிப்பு குறித்து மத்திய உள்துறைக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #BJP #PonRadhakrishnan
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நிவாரணப்பணிகளை விரைந்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசை முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். #GajaCyclone #Mutharasan
    மன்னார்குடி:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்திற்கு வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கோட்டூர், திருப்பத்தூர், திருக்களார், மீணம்பநல்லூர், களப்பாள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார், பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 4 நாட்களாக மின்சாரம் இல்லை. இதனால் மேல்நிலை தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை. எனவே பொதுமக்கள் வாய்க்கால், குளத்தில் உள்ள நீரைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் சுகாதாரம், குடிநீருக்கு மாநில அரசு முன்னுரிமை கொடுத்து துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், ஆயிரக்கணக்கான மின்சார கம்பங்கள் அடியோடு சாய்ந்து விட்டதால் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் குடிநீர் விநியோகம், சமையல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பெற முடியவில்லை. இந்த நெருக்கடியான நேரத்தில் தமிழ்நாடு அரசு, அனைவருக்கும் நியாய விலைக் கடைகள் மூலம் விலையில்லாத மண்ணெண்ணெய் வழங்க வேண்டும். பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டும். மின் இணைப்பு சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க, வெளி மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள், மற்றும் பணியாளர்கள் அழைக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது வி.தொ.ச மாநில செயலாளர் பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் வை.சிவபுண்ணியம், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ கே.உலகநாதன், வி.தொ.ச மாவட்ட செயலாளர் பாஸ்கர், கோட்டூர் ஒன்றியசெயலாளர் மாரிமுத்து, துணை செயலாளர் செந்தில்நாதன் ஆகியோர் உடனிருந்தனர். #GajaCyclone #Mutharasan
    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மறமடக்கியில் புயல் பாதிப்பை பார்க்க அதிகாரிகள் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாரை சிறைப்பிடித்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மறமடக்கியில் ‘கஜா’ புயல் தாக்கியதால் பல ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள், ஆயிரக்கணக்கான தேக்கு மரங்கள், பலா மரங்கள், மா மரங்கள், வாழை மரங்கள், முருங்கை மரங்கள் உள்ளிட்ட பல ஆயிரம் மரங்கள் சாய்ந்து விட்டன.

    முற்றிலும் இந்த மரங்களில் காய்க்கும் காய், பழங்களை வாழ்வாதாரமாக கொண்ட விவசாயிகள் கஜா புயலால் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை இழந்துள்ளனர். சொத்துக்களை இழந்து வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மறமடக்கி பகுதி விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட சில பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் மறமடக்கி செல்லவில்லை. மேலும் சேத பாதிப்புகளை கணக்கிட அதிகாரிகளும் செல்லாத நிலையில், மறமடக்கியில் மொத்தம் 2 ஆயிரம் மரங்களுக்குள் தான் சேதம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாக மறமடக்கி பகுதி விவசாயிகளுக்கு தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் நேற்று மறியல் செய்வதற்காக மறமடக்கி கடைவீதியில் கூடினர். அப்போது அந்த பகுதியில் போலீஸ் ஜீப் மற்றும் வேனில் அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் 20-க்கும் மேற்பட்ட போலீசார் எதேச்சையாக வந்தனர்.

    உடனே விவசாயிகள் அவர்களை சிறைபிடித்தனர். தொடர்ந்து மறமடக்கியில் இருந்து செல்லும் 4 சாலைகளிலும் மரங்களை போட்டு மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த மரங்களுக்கு தீ வைத்து எரித்தனர். சாலையில் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையை மறித்து கருப்பு கொடி கட்டினர்.

    காலை 6 மணியில் இருந்து 11 மணி வரை போலீசார் சிறை வைக்கப்பட்டிருந்த தகவல் அறந்தாங்கி ஆர்.டி.ஓ. பஞ்ச வர்ணத்திற்கு தெரியப்படுத்தியும் அவர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வராததால் விவசாயிகள் ஆத்திரம் அடைந்தனர். இருப்பினும் சிறிது நேரத்தில் அறந்தாங்கி தாசில்தார் கருப்பையா விவசாயிகளிடம், மறமடக்கியில் ஏற்பட்டுள்ள சேதத்திற்கு உரிய நிவாரணம் பெற்றுத்தரப்படும் என உறுதியளித்தார்.

    இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றதுடன் போலீசாரை விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணம் அபராதம் இன்றி 30-ந்தேதி வரை செலுத்தலாம் என்று மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார். #GajaCyclone
    சென்னை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்டங்கள் கஜா புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

    இதனால் மேற்கண்ட மாவட்டங்களில் இந்த மாதம் 15-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய பொது மக்கள் அபராதம் இன்றி கட்டணத்தை செலுத்த 30-ந் தேதி வரை செலுத்தலாம் என்று அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GajaCyclone
    தஞ்சை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்து அதன் அறிக்கைகளை நாளை முதல்வரிடம் வழங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #GajaCyclone #MinisterSengottaiyan
    தஞ்சாவூர்:

    கஜா புயலால் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் அதிக சேதமடைந்துள்ளது. இதற்காக அனைத்து துறை அதிகாரிகளும், அந்தந்த மாவட்டங்களில் முகாமிட்டு நிவாரண உதவிகள் மற்றும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே தஞ்சை மாவட்டத்தில் நிவாரண பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதா கிருஷ்ணன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, துரைக்கண்ணு, கடம்பூர் ராஜூ, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோரை நியமித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், துரைக்கண்ணு, கடம்பூர்ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் வைத்திலிங்கம், பரசுராமன், பாரதிமோகன், எம்.எல்.ஏ.க்கள் சி.வி.சேகர், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், ஒரத்தநாடு ராமச்சந்திரன், சாக்கோட்டை அன்பழகன், கோவி.செழியன் மற்றும் அ.தி.மு.க முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம், முன்னாள் மாநகராட்சி மேயர் சாவித்திரி கோபால், பால்வள தலைவர் காந்தி, அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது நாங்கள் தஞ்சை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்து அதன் அறிக்கைகளை கணக்கெடுத்து முதல்- அமைச்சர் நாளை சேத பகுதிகளை பார்வையிட வரும் போது அவரிடம் சமர்பிப்போம்.


    இந்த புயலால் அதிக அளவில் தென்னை மரங்கள், வாழை மரங்கள், மின்கம்பங்கள், நெற்பயிர்கள், வெற்றிலை போன்றவை சேதமடைந்துள்ளது. மேலும் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகள் அதிக அளவில் சேதமடைந்துள்ளது.

    அதி நவீன எந்திரங்களுடன் மின் இணைப்புகளை சரி செய்து கொண்டு இருக்கிறோம். மேலும் சில பகுதிகளில் இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர். அப்போது எங்களுக்கு எரிபொருள் தேவை என்கின்றனர். அவர்களுக்கு தேவையான எரிபொருள் உடனடியாக அனுப்பப்படும். மேலும் அவர்கள் செய்த செலவு தொகையும் அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #MinisterSengottaiyan
    ×