search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "emergency"

    • ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி அங்கு முனீச் நகரில் இந்திய வம்சாவளியினரிடம் பேசினார்.
    • 4வது தொழில் புரட்சியில் பின்வாங்காமல் உலகையே இந்தியா வழிநடத்தி வருகிறது என்றார்.

    முனீச்:

    ஜெர்மனியின் முனீச் நகரில் பிரதமர் நரேந்திர மோடி இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியர்களாகிய நாம் நமது ஜனநாயகம் குறித்து பெருமை கொள்கிறோம். ஜனநாயகத்தின் தாயகம் இந்தியாதான் என்று நாம் இன்று பெருமையுடன் கூறலாம். கலாசாரம், உணவு, ஆடைகள், இசை மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றில் உள்ள பன்முகத்தன்மைதான் நமது ஜனநாயகத்தை துடிப்புடன் வைத்திருக்கிறது. இந்திய ஜனநாயக அரசியல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி அவசர நிலை.

    இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமமும் இன்று திறந்தவெளி கழிப்பிடம் இல்லாததாக மாறியுள்ளது. அனைத்து கிராமத்திற்கும் மின்சாரம் வழங்கியுள்ளோம். 99 சதவீதத்திற்கும் மேற்பட்ட இல்லங்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பமும் வங்கி நடைமுறையில் இணைக்கப்பட்டுள்ளது. ஏழை மக்கள் 5 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சையை தற்போது பெற முடியும்.

    கடந்த நூற்றாண்டில் தொழில் புரட்சியால் ஜெர்மனி மற்றும் பிற நாடுகள் பலன் அடைந்தன. அப்போது இந்தியா அடிமையாக இருந்தது அதனால்தான் பலன்களைப் பெற முடியவில்லை. ஆனால், தற்போதுள்ள 4-வது தொழில் புரட்சியில் பின்வாங்காமல் உலகையே இந்தியா வழிநடத்தி வருகிறது.

    தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. டேட்டா நுகர்வில் இந்தியா இன்று புதிய சாதனைகளை படைத்து வருகிறது. மொபைல் இணைய சேவை மிகவும் மலிவான கிடைக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் உள்ளது என தெரிவித்தார்.

    இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை சட்டத்தை பிரகடனப்படுத்த அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #SriLankablasts #SriLanka #Emergency #EmergencyinSriLanka
    கொழும்பு:

    இலங்கையில் நேற்று ஈஸ்டர் பண்டிகையின்போது கொழும்பு நகரில் நிகழ்ந்த 8 குண்டுவெடிப்பு சம்பவங்களில் 290 பேர் பலியானதை தொடர்ந்து நேற்று பிற்பகல் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டது. 

    இந்நிலையில், இன்றிரவு 8 மணியில் இருந்து நாளை (23-ம் தேதி) அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக இலங்கை அரசின் இணையதளத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

    இதற்கிடையில், இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை சட்டத்தை பிரகடனப்படுத்த அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பயங்கரவாதத்தை தடுக்கும் நோக்கத்தில் பிரகடனப்படுத்தவுள்ள இந்த அவசரநிலை சட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ அரசு அறிவிக்கை இன்று நள்ளிரவில் வெளியாகும் என இலங்கை அதிபர் மாளிகை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. #SriLankablasts #SriLanka #Emergency #EmergencyinSriLanka 
    ரஷியாவில் உணவை தேடி பனிக்கரடிகள் கூட்டம் கூட்டமாக குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளன. #PolarBear
    மாஸ்கோ:

    ரஷியாவின் வடக்கு பகுதியில் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது நோவாயா செம்லியா தீவுக்கூடம். இந்த தீவுக்கூடத்தின் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் பனிக்கரடிகள் வசித்து வந்தன.

    தற்போது அங்கு அதிக பனி காரணமாக மீன்கள் உள்ளிட்ட சில உயிரினங்கள் இடம் பெயர்ந்துவிட்டதால் உணவு கிடைக்காமல் பனிக்கரடிகள் தவிக்கின்றன. இதனால் உணவை தேடி பனிக்கரடிகள் கூட்டம் கூட்டமாக குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளன.

    ஆர்க்கான்கெலஸ்க் பிராந்தியத்தில் உள்ள பெல்ஷியா குபா நகரில் 50-க்கும் மேற்பட்ட பனிக்கரடிகள் சுற்றித் திரிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பனிக்கரடிகள் மிகவும் ஆபத்தானவை என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதோடு அங்கு அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

    பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், கரடிகளை விரட்டி அடிக்கவும் ராணுவவீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். #PolarBear
    மெக்சிகோ எல்லை சுவர் விவகாரத்தில் அமெரிக்காவில் விரைவில் அவசர நிலை பிரகடனம் செய்ய ஆலோசித்து வருவதாக டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார். #DonaldTrump
    வாஷிங்டன் :

    அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் திட்டத்தில் டிரம்ப் விடாப்பிடியாக உள்ளார். அதே போல் இந்த திட்டத்துக்கு உள்நாட்டு நிதியை ஒதுக்க முடியாது என்பதில் ஜனநாயக கட்சியினர் உறுதியாக உள்ளனர். இது விவகாரம் தொடர்பாக சமீபத்தில் ஜனநாயக கட்சி தலைவர்களுடன் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தபோது, டிரம்ப் வெளிநடப்பு செய்தார்.

    இந்த நிலையில் தெற்கு எல்லையையொட்டி உள்ள டெக்சாஸ் மாகாணத்துக்கு டிரம்ப் பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் அமெரிக்காவில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவீர்களா? என கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த டிரம்ப், ‘‘ஆம், அது பற்றி நான் தீவிரமாக ஆலோசித்து வருகிறேன். நாம் அதை விரைவாக செய்ய வேண்டும். ஏனெனில் அது மட்டும்தான் தீர்வு. அதற்கு செலவு கிடையாது. நாம் ஆண்டு தோறும் எல்லை பாதுகாப்புக்கு செலவிடுவதை விட, சுவருக்கு குறைந்த செலவுதான் ஆகும்’’ என தெரிவித்தார். #DonaldTrump
    அவசர உதவிக்கு தொடர்புகொள்ளும் 108 எண் சேவை அரை மணி நேரமாக தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தொடர்பு சீராகியுள்ளது. #108 #Emergency
    சென்னை:

    ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட அவசர வசதிக்கு நாடு முழுவதும் 108 என்ற தொலைபேசி எண் அமலில் உள்ளது. இந்நிலையில், பி.எஸ்.என்.எல் இணைப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் 108 எண்ணை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்தது. 
    இதனால், தற்காலிகமாக 044-40170100 என்ற எண்ணை மக்கள் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

    தற்போது, கோளாறு சரிசெய்யப்பட்டதை அடுத்து 108 எண் சேவை சீரானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
    ப்ளோரென்ஸ் புயல் நெருங்கி வருவதை முன்னிட்டு விர்ஜினியா, மேரிலேண்ட் பகுதிகளில் எமர்ஜென்சி நிலையை வாஷிங்டன் டிசி நகர மாகாண மேயர் அறிவித்துள்ளார். #HurricaneFlorence
    வாஷிங்டன்:

    பசிபிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து சூறாவளி புயலாக மாறி அமெரிக்காவின் விர்ஜினியா, மேரிலேண்ட் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் அங்கு பலத்த காற்றுடன் மழை கொட்டுகிறது. அதையடுத்து ஏற்பட்ட வெள்ளத்தால் தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

    இதையடுத்து, அமெரிக்காவின் விர்ஜினியா, மேரிலேண்ட் பகுதிகளில் ப்ளோரென்ஸ் புயலை முன்னிட்டு எமர்ஜென்சி நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக வாஷிங்டன் டி.சி. மேயர் மூரியல் இ பவுசர் கூறுகையில், போலீசார், தீயணைப்பு வீரர்கள், பொதுப்பணி துறை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. புயலை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார். 



    இன்னும் சில தினங்களில் எந்த நேரத்திலும் புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் வீட்டை காலிசெய்துவிட்டு பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல அம்மாகாண கவர்னர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    பேரிடரின் போது அனைத்து வகையிலும் பாதுகாப்பு மற்றும் பெடரல் எமர்ஜென்சி அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #HurricaneFlorence
    பிரதமர் மோடியும், முதல் மந்திரி பட்னாவிசும் சர்வாதிகாரிகள் போல் செயல்பட்டு வருகின்றனர் என சிவசேனா கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். #Emergency #Saamana #PMModi #DevendraFadnavis
    மும்பை:

    நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தபட்ட நாளை கருப்பு தினமாக அனுசரித்த பாஜகவினர், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை விமர்சித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தனர். பிரதமர் மோடியும், மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசும் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். 

    இந்நிலையில், நெருக்கடி நிலை காலத்தில் இருந்த நிலைமை தற்போதும் நீடித்து வருகிறது. பிரதமர் மோடியும், முதல் மந்திரி பட்னாவிசும் சர்வாதிகாரிகள் போல் செயல்பட்டு வருகின்றனர் என சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. 

    இதுதொடர்பாக சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாமனாவில் உள்ள தலையங்கத்தில் கூறியதாவது:



    பிரதமர் மோடியும், முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசும் சர்வாதிகாரிகள் போல் செயல்பட்டு வருகின்றனர். 43 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற எமர்ஜென்சி குறித்து அவர்கள் இப்போது பேசுவது கேலிக்கூத்தாக இருக்கிறது. 

    ஜனநாயக நாட்டில் மக்கள் செத்து மடிந்தால் பரவாயில்லை, ராஜாக்கள் வாழ்ந்தால் போதும். நமது ராணுவ வீரர்களும் விவசாயிகளும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெய் ஜவான், ஜெய் கிசான் ( ராணுவ வீரர்கள் வாழ்க, விவசாயிகள் வாழ்க) என்ற முழக்கமும் செத்துக் கொண்டிருக்கிறது.

    மக்கள் எதிர்ப்பை மீறி ரத்னகிரி பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திறப்பது புற்றுநோய் மருத்துவமனையை திறப்பதற்கு சமமாகும் என தெரிவித்துள்ளது. #Emergency #Saamana #PMModi #DevendraFadnavis
    இந்தியாவின் பொற்கால வரலாற்றில் அவசரநிலை காலகட்டம் கரும்புள்ளியை ஏற்படுத்திவிட்டதாக பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். #Emergency #NarendraModi #Congress
    புதுடெல்லி :

    நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டதன் 43-வது ஆண்டு தினம் அனுசரிக்கப்படும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் அவரசநிலை குறித்து நாட்டு மக்களுக்கு விளக்க பாரதிய ஜனதா கட்சி பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. பிரதமர் நரேந்திர மோடி இக்கூட்டத்தில் கலந்துகொண்டு இன்று உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளதாவது :-

    காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்வதற்காக கருப்பு தினத்தினை (அவசரநிலை) நாம் கடைப்பிடிக்கவில்லை. என்ன நடந்தது என்பதனை பற்றி இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.  

    ஒரு பிரதமர்(இந்திரா காந்தி) பாராளுமன்ற உறுப்பினராக தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் அரசியல் சாசன சட்டப்பிரிவு 352-ன் கீழ் இந்தியா முழுதும் அவரசநிலை பிரகடனம் செய்யப்பட்டது.

    அவசரநிலையின் போது சுயநலத்திற்காக எதிர்க்கட்சியினரை சிறையில் அடைத்து நாட்டையே சிறைச்சாலையாக காங்கிரஸ் கட்சி மாற்றியது. நாட்டிற்கும், ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்காத காங்கிரஸ் கட்சியினரால் தற்போது எப்படி அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது குறித்து பேச முடிகிறது ?.

    இந்தியாவின் பொற்கால வரலாற்றில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட காலகட்டம் கரும்புள்ளியை ஏற்படுத்திவிட்டது.

    பாராளுமன்றத்தில் 400 மக்களவை இடங்களை பெற்ற நிலையில் இருந்து 44 என்ற நிலைக்கு வந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகளை விமர்சனம் செய்தனர். ஆனால், கர்நாடகா தேர்தலுக்கு பிறகு மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்து அவர்கள் கேள்வி கேட்பது இல்லை.

    மேலும், ஊழல் வழக்குகளை ஜாமீனில் வெளியே வந்து எதிர்கொள்வது பற்றி அவர்கள்(காங்கிரஸ் தலைமை) கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். எனவே, உச்சநீதிமன்ற நீதிபதி மேல் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவும் அவர்கள் முடிவு செய்தனர்.

    வெறும் புத்தகம் மட்டுமே அல்லாமல் ஒவ்வொரு சாமானியனின் ஆசைகளையும் கனவையும் நனவாக்குவது அரசியலமைப்பு சட்டம் ஆகும். ஜனநாயகத்தின் மதிப்புகளை நிலைநிறுத்தி, அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் முயற்சிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஈடுபட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #Emergency #NarendraModi #Congress
    நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டதன் 43-ம் ஆண்டு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், இந்திரா காந்தியை ஹிட்லருடன் ஒப்பிட்டு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கருத்து பதிவிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டதன் 43-வது ஆண்டு தினம் அனுசரிக்கப்படும் நிலையில் தன்னுடைய முகநூலில் கட்டுரை ஒன்றை பதிவிட்டுள்ள அருண் ஜெட்லி, மறைந்த பிரதமர் இந்திரா காந்தி, ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லர் பயன்படுத்திய முறையை பயன்படுத்தினார் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இந்திரா காந்தி ஜனநாயகத்தை பேரரச ஜனநாயகமாக மாற்ற நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ய முடிவுசெய்தார் என குற்றம் சாட்டியுள்ளார். நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட காலங்களில் நடந்த சம்பவங்களை பதிவிட்டுள்ள அருண் ஜெட்லி, 

    எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையிடப்பட்டார்கள். பத்திரிக்கை சுதந்திரம் நசுக்கப்பட்டது. கட்டாயமாக கருத்தடை செய்யப்பட்டது. இதேபோன்று  1933-ல் நாஜி ஜெர்மனியிலும் நடந்தது. ஹிட்லரும், இந்திரா காந்தியும் அரசியலமைப்பை ரத்து செய்தார்கள். அவர்கள், ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக மாற்றுவதற்கு குடியரசு அரசியலமைப்பை பயன்படுத்தினார்கள் என பட்டியலிட்டுள்ளார். 



    அரசியல் சாசன சட்டப்பிரிவு 352-ன் கீழ் அவசரநிலைப் பிரகடனம் மேற்கொண்ட இந்திரா காந்தி, இதில் அடிப்படை உரிமைகளுக்கான 359-ம் பிரிவை முடக்கினார், செயலிழக்கச் செய்தார். இதுபோன்று ஹிட்லரும் ஜெர்மனி அரசியல் சட்டம் 48-ம் பிரிவை சுட்டிக்காட்டி, மக்களைப் பாதுகாப்பது என்ற பெயரில் சர்வாதிகாரச் செயல்களை நியாயப்படுத்தினார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார் அருண் ஜெட்லி.

    அருண் ஜெட்லியின் கருத்தை விமர்சனம் செய்துள்ள காங்கிரஸ் இந்த ஒப்பீடு மிகவும் மோசமானது என்ற கண்டனம் தெரிவித்துள்ளது.
    ×