search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electric pole"

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.
    • திருக்குவளை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு நேற்றிரவு  தனியார் பஸ் சென்றது.

    இன்று காலை நாகை-திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் ஆலங்குடி சீராவட்டம் பாலம் அருகே சென்றது. அப்போது அந்த பகுதியில் மழை ெபய்துள்ளது.

    இந்நிலையில்   சீராவட்டம் பாலம் இறக்கத்தில் பஸ் சென்ற போது அதன் வேகத்தை கட்டுப்படுத்த டிரைவர் பிரேக் பிடித்துள்ளார்.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி கவிழந்தது.

    இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பஸ்சில் இருந்த பயணிகளை மீட்டு ெவளியேற்றினர்.

    இதில் பஸ்சில் பயணித்த 8 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் ஓட்டுநர்க ளுக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

    விபத்து குறித்து திருக்குவளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    மேலும் கிரேன் மற்றும் மீட்பு ஊர்தியின் உதவியோடு கவிழ்ந்த பஸ்சை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதனால் நாகை-திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • நாளை மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
    • காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளி–யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை நகர துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக் கிழமை) நெடுஞ்சாலைத்துறை சாலை விரிவாக்க பணி காரணமாக மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது. எனவே வண்டிக்காரத்தெரு மின்வழித்தடத்தில் உள்ள நாகை ரோடு, திருவள்ளுவர் நகர், சேவியர் நகர் பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக பழுதடைந்த மின்கம்பத்தை மாற்ற ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர்.
    • செய்தி வெளியிட்ட மாலைமலர் நாளிதழுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம்- பொள்ளாச்சி மெயின் ரோட்டில், பழைய பல்லடம் நகர மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு உள்ள மின் கம்பம் பழுதடைந்து எந்த நேரமும் சாய்ந்து விழும் அபாய நிலையில் இருந்தது.இதனை மாற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இது குறித்து மாலைமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனைப் படித்த மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக பழுதடைந்த மின்கம்பத்தை மாற்ற ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய கம்பத்தை நட்டனர். மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட மாலைமலர் நாளிதழுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • மின்தடை செய்யப்பட்டதால் பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் சற்று அவதியடைந்தனர்.
    • கனரக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி இது போன்ற விபத்துகள் நிகழ்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் பெரிய கடைவீதி பகுதியில் சென்ற கண்டெய்னர் லாரி அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்கம்பம் மீது உரசியது. இதில் மின்கம்பம் சாய்ந்து விழும் நிலையில் இருந்தது. இந்தநிலையில் இன்று காலை மின்கம்பம் அருகே காரில் பயணிகள் 4பேர் ஏறிக்கொண்டிருந்த போது திடீரென மின்கம்பம் சாய்ந்து கார் மீது விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 4பேரும் உயிர் தப்பினர். மின்சாரம் இருந்த நிலையில் கம்பம் சாய்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு மின்வாரிய அதிகாரிகள் சென்று மின்சாரத்தை துண்டித்தனர். போலீசார் அப்பகுதியில் போக்குவரத்தை சீர் செய்தனர். மின்தடை செய்யப்பட்டதால் பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் சற்று அவதியடைந்தனர். தொடர்ந்து மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    மேலும் சம்பவ இடத்தை செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், கவுன்சிலர் கண்ணப்பன் ஆகியோர் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினர். நகர்ப்பகுதியில் கனரக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி இது போன்ற விபத்துகள் நிகழ்கிறது. எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.
    • இதில் மின்கம்பம் முறிந்து மின்கம்பிகள் அறுந்தன.

    திருவாரூர்:

    திருத்துறைப்பூண்டியில் இருந்து ராயநல்லூர் புழுதிக்குடி வழியாக விக்கிரபாண்டியம் வரை தனியார் மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இந்த மினி பஸ்சை டிரைவர் சுந்தரம் (வயது 50) ஓட்டினார்.

    கண்டக்டர் வருண்குமார் (25) பணியில் இருந்தார். மினி பஸ் விக்கிரபாண்டியம் வந்து விட்டு திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் விக்கிரபாண்டியம் கீழத்தெரு அருகே பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி அருகிலிருந்த குட்டையில் இறங்கியது.

    இதில் பயணம் செய்த மஞ்சவாடி கிராமத்தை சேர்ந்த கவுசல்யா (22), டிரைவர் சுந்தரம், கண்டக்டர் வருண்குமார் ஆகியோர் லேசான காயமடைந்தனர்.

    இவர்கள் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் மின்கம்பம் முறிந்து மின்கம்பிகள் அறுந்தன.

    இதனால் அங்கு மின்தடை ஏற்பட்டது. மின் கம்பம் முறிந்தபோது அங்கு மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இதுகுறித்து விக்கிரபாண்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையின் நடுவே இருந்த மின் கம்பங்களை அகற்றி வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைகள் வைத்து வந்தனர்.
    • ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்க ராஜன் கவனத்திற்கு ஊர் பொதுமக்கள் மற்றும் தமிழன் நல சங்கத்தின் சார்பில் கொண்டு செல்லப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சி மாடியனூரில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் பாதையில் ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளே சென்றுவர முடியாத அளவிற்கு போக்குவரத்திற்கு இடையூறாக சாலையின் நடுவே இருந்த மின் கம்பங்களை அகற்றி வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைகள் வைத்து வந்தனர்.

    மேலும் மின்கம்பங்களை வேறு இடத்திற்கு மாற்று வதற்கு மின்வாரியத்திற்கு குறிப்பிட்ட தொகை பணம் கட்ட வேண்டும் என்கிற சூழல் இருந்து வந்தது. இந்நிலையில் சுகாதாரத்துறையில் மின்சார வாரியத்திற்கு செலுத்த நிதிகள் இல்லை என்று கூறி வந்தனர். இதுகுறித்து ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்க ராஜன் கவனத்திற்கு ஊர் பொதுமக்கள் மற்றும் தமிழன் நல சங்கத்தின் சார்பில் கொண்டு செல்லப்பட்டது.

    உடனடியாக ஊராட்சி தலைவர் அந்த கோரிக்கையை ஏற்று மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தினார். இதனையடுத்து மின் கம்பங்களை அகற்றிவிட்டு வேறு இடத்தில் வைக்கும் பணிகள் தொடங்கியது.கோரிக்கையை ஏற்று மின்சார வாரியத்திற்கு பணம் செலுத்திய ஆவுடையானூர் ஊராட்சி தலைவர் மற்றும் மின்சார வாரியத்தின் மின்பொறியாளருக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் தமிழன் மக்கள் நலச்சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்தனர்.



    • சாலையின் மையப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம் உள்ளது.
    • சாலை அமைக்கும் பணி நடந்தபோது மின்கம்பத்தை மாற்றி அமைக்காததால் தினசரி விபத்துகள் நடந்து வருகின்றன.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா பாளையம் பேரூராட்சி 13-வது வார்டு கலைமகள் நகரில் சாலையின் மையப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம் உள்ளது. இப்பகுதியில் புதிதாக சாலை அமைக்கும் பணி நடந்தபோது மின்கம்பத்தை மாற்றி அமைக்காததால் தினசரி விபத்துகள் நடந்து வருகின்றன.

    தமிழகத்திலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் சாலையின் மையப்பகுதியில் இந்த மின்கம்பம் அமைந்துள்ளது. இரவு நேரங்கள் மட்டுமின்றி பகலிலும் இந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் மின்கம்பத்தில் மோதி காயமடைந்து வருகின்றனர்.

    இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. குழந்தைகள் மின்கம்பத்தை சுற்றிவிளையாடும்போது மின்கசிவால் விபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் பொதுமக்களிடம் நிலவி வருகிறது.

    எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • களக்காடு அருகே உள்ள டோனாவூரை சேர்ந்தவர் ஜெபராஜ்
    • இவர் நேற்று தனது காரில் களக்காட்டில் இருந்து மாவடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள டோனாவூரை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 42). இவர் நேற்று தனது காரில் களக்காட்டில் இருந்து மாவடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    களக்காட்டை அடுத்த மேல சாலைப்புதூர் அருகே சென்றபோது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது அந்த வழியாக நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவரது மனைவி ஸ்ரீதேவி மீது மோதியது.

    பின்னர் அங்கு சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் பயங்கர சத்தத்துடன் கார் மோதியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ஜெபராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஸ்ரீதேவி சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரும்பிலான மின் கம்பத்தில் விளம்பர போர்டும் வைக்கப்பட்டு இருந்தது.
    • எதிர்பாராதவிதமாக சிக்னல் மின்கம்பம் கார் மீது சாய்ந்து விழுந்தது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிபுலியூர் அண்ணா மேம்பாலம் சிக்னல் மின் கம்பம் உள்ளது. இரும்பிலான இந்த மின் கம்பத்தில் விளம்பர போர்டும் வைக்கப்பட்டு இருந்தது. இன்று நண்பகல் 12 மணி அளவில் கோண்டூரைசேர்ந்த முத்துவேல் என்பவர் காரில் அண்ணா மேம்பாலம் சிக்னல் பகுதியில் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிக்னல் மின்கம்பம் கார் மீது சாய்ந்து விழுந்தது. இதனால் முத்துவேல் அதிர்ச்சிஅடைந்தார். உடனே காரை அவர் நிறுத்தினார்.இந்த இடம் வாகன போக்குவரத்துக்கு முக்கிய சந்திப்பு ஆகும்.

    எனவே சிறிது நேரத்தில் ஏராளமான வாகனங்கள் அணி வகுத்து நின்றது. இதனால் ேபாக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விைரந்து சென்று போக்குவரத்தினை சரி செய்தனர். இந்த சிக்னல் மின்கம்பம் காரின் முன் பகுதியில் விழுந்ததால் முத்துவேல் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர். இதுகுறித்து மின்வாரியத்துறை அதிகாரிகள் மின்கம்பம் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது இந்த மின் கம்பம் மண்ணுக்குள் புதைந்து இருந்ததால் துருப்பிடித்து இத்து போய் காணப்பட்டது. இதனால்தான் சிக்னல் மின் கம்பம் சாய்ந்து உள்ளது.

    • நெல்லை நகர்ப்புறக் கோட்டத்தில் சமாதானபுரம் பிரிவுக்குட்பட்ட எஸ்.பி. அலுவலகம் எதிர்புறம் உள்ள சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
    • பணிகள் முடியும் வரை எஸ்.பி. அலுவலகம் எதிர்புறம் உள்ள சாலையில் மட்டும் மின் வினியோகம் இருக்காது

    நெல்லை:

    நெல்லை நகர்ப்புறக் கோட்டத்தில் சமாதானபுரம் பிரிவுக்குட்பட்ட எஸ்.பி. அலுவலகம் எதிர்புறம் உள்ள சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின் கம்பத்தினை அகற்ற நெல்லை மாநகராட்சி கமிஷனர் விடுத்த வேண்டுகோள் விடுத்ததையடுத்து மேற்பார்வை மின்பொறியாளர் குருசாமி மின்கம்பத்தை மாற்றி அமைக்க ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

    அதன் பேரில் மின்கம்பம் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை மேற்பார்வை மின் பொறியாளர்குருசாமி, நகர்ப்புற செயற்பொறியாளர் முத்துக்குட்டி, பாளையங்கோட்டை உபகோட்ட உதவி செயற் பொறியாளர் எட்வர்ட்பொன்னுசாமி, உதவி மின் பொறியாளர்கள் வீரபுத்திரகுமார், முத்துராமலிங்கம் பார்வையிட்டனர்.

    மேலும் இந்த பணிகள் முடியும் வரை எஸ்.பி. அலுவலகம் எதிர்புறம் உள்ள சாலையில் மட்டும் மின் வினியோகம் இருக்காது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • புதிதாக விரிவாக்கம் செய்து சாலை அமைக்கும் போது சாலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றி சாலை ஓரங்களில் நடுவது வழக்கம்.
    • பூதலூர் -காங்கேயம் பட்டி சாலையில் விண்ணனூர்பட்டி கிராமத்தில் சாலையோ–ரத்தில் உள்ள ஒரு சிமெண்ட் மின்கம்பம் நடுவில் முறிந்த நிலையில் உள்ளது.

    பூதலூர்:

    செங்கிப்பட்டி- திருக்காட்டுப்பள்ளி சாலையில் பூதலூர் இருந்து பெரியகாங்கேயன்பட்டி வரை உள்ள சாலை விரிவா–க்கப்பட்டு பணிகள் முடிவடைந்து உள்ளன.8 கி.மீ நீளமுள்ள இந்த சாலை முழுவதும் கிராமப்புற மக்கள் பயன்பாட்டிற்காகவும், வேளாண் விளைபொருட்கள் எடுத்துச் செல்லவும் பயன்பட்டு வருகிறது.

    இந்த வழித்தடத்தில் நகர பேருந்துகள் இயங்கி வருகின்றன.புதிதாகவிரிவாக்கம் செய்து சாலை அமைக்கும் போது சாலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றி சாலை ஓரங்களில் நடுவது வழக்கம. இதற்காக நெடுஞ்சாலைத்துறை மின்சார வாரியத்திடம் கோரிக்கை எழுப்பினால் மின்சார வாரியம் உடனடியாக செய்து தருவதும் வழக்கமான நடைமுறையில் இருந்து வருகிறது. இது போன்ற ஒரு சூழ்நிலையில் பூதலூர் -காங்கேயம் பட்டி சாலையில் விண்ணனூர்பட்டி கிராமத்தில் சாலையோ–ரத்தில் உள்ள ஒரு சிமெண்ட் மின்கம்பம் நடுவில் முறிந்த நிலையில் உள்ளது.

    அதை மாற்றி புதிதாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் அந்த கோரிக்கையை மின்சார வாரியத்தால் கவனிக்க–ப்படாமல் அப்படியே உள்ளது. இதுமட்டும் இல்லாமல் சாலை பணிகளுக்காக அகற்றி நட வேண்டிய ஒருமின்கம்பம் நடப்படாததால் அந்த மின் கம்பத்தை சுற்றி தார் சாலை போடப்ப–ட்டுள்ளது.இதனால் எதிரெதிரே 2 வாகனங்கள் வரும்பொழுது மின்கம்பத்தில் மோதக்கூடிய சூழ்நிலை உள்ளது. மின்சார வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் இதுபோன்று ஏற்பட்டதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    பலமுறை மின்சார வாரிய அலுவலர்களுக்கு மின்கம்ப–ங்கள் குறித்தும், சாலையில் உள்ள மின்கம்பத்தை அப்புறப்படுத்தி சாலையோரம் நட வேண்டும் என்று கோரிக்கைகளை எழுப்பியும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று இந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக மின்வாரியத்துறை அதிகாரிகள் அலட்சியப் போக்கை விடுத்து உடைந்த மின் கம்பத்தை மாற்றியும், சாலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றி சாலை ஓரத்தில் நட்டு பொதுமக்கள் பயன்பெற ஆவன செய்ய வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை எழுப்புகின்றனர்.

    • வாஞ்சூர் ரவுண்டானா பனங்குடி இடையே உள்ள மின்கம்பம் ஒன்று சிமெண்ட் காரைகள் முழுவதும் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
    • சாலை வழியே செல்லும் பொதுமக்கள் எந்நேரத்திலும் மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்படுமா? என்ற அச்சத்துடனே சென்று வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நாகூரில் இருந்து மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு பனங்குடி ஊராட்சி பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேற்கண்ட பகுதியில் சேர்ந்த மக்கள் அன்றாடம் நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர நாகூர்-நன்னிலம் சாலையை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

    இந்த நிலையில் வாஞ்சூர் ரவுண்டானா பனங்குடி இடையே உள்ள மின்கம்பம் ஒன்று சிமெண்ட் காரைகள் முழுவதும் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அதேபோல் எதிரே புதுமனை தெருவில் உள்ள மின்கம்பம் ஒன்று சாய்ந்து மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் சாலை வழியே செல்லும் பொதுமக்கள் எந்நேரத்திலும் மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்படுமா? என்ற அச்சத்துடனே சென்று வருகின்றனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன்னர் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர்.

    ×