என் மலர்

  நீங்கள் தேடியது "Panchayat President"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பஞ்சாயத்து தலைவியின் கணவர் உடல்நல குறைவால் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இறந்தார்.
  • முகநூலில் அய்யம்மாள் குறித்து அவதூறாக கருத்துக்களை பதிவிட்டுள்ளதை தட்டிக் கேட்ட போது மிரட்டி உள்ளனர்.

  களக்காடு:

  களக்காடு அருகே உள்ள சேதுராயபுரம் காலனியை சேர்ந்தவர் முருகன் மனைவி அய்யம்மாள் ( வயது 50). இவர் சீவலப்பேரி பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இவரது கணவர் உடல்நல குறைவால் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இறந்தார்.

  இந்நிலையில் முருகனின் தம்பி சிதம்பரபுரம் ராஜபுதூரை சேர்ந்த நம்பிராஜன் (42), அவரது உறவினர் தங்கராஜ் மகன் மதன்குமார் (32) ஆகிய இருவரும் அய்யம்மாளை அவதூறாக பேசி வந்துள்ளனர்.

  கடந்த சில நாட்களுக்கு முன் சேதுராயபுரம் முப்பிடாதி அம்மன் கோவில் கொடை விழா நடந்தது. இதில் விழாகுழுவினர் பஞ்சாயத்து தலைவி அய்யம்மாளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினர்.

  அப்போது நம்பிராஜன் மைக்கில் அய்யம்மாள் பற்றி அவதூறாக பேசியுள்ளார். மதன்குமார் முகநூலில் அய்யம்மாள் குறித்து அவதூறாக கருத்துக்களை பதிவிட்டுள்ளார். இதையடுத்து அய்யம்மாள் இருவரையும் தட்டிக் கேட்டார்.

  இதனால் ஆத்திரம் அடைந்த நம்பிராஜன், மதன்குமார் இருவரும் அய்யம்மாளை அவதூறாக பேசியதுடன், கொலை மிரட்டலும் விடுத்தனர்.

  இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் இதுதொடர்பாக நம்பிராஜன், மதன்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெண்ணாடம் அருகே பஞ்சாயத்து தலைவர் மகளிடம் நகைகளை திருடிச் சென்றனர்.
  • வீட்டின் அருகில் இருந்த உறவுக்கார பெண்ணான காரையூர் ஊராட்சி மன்ற தலைவியின் மகள் கலையரசியும் அன்பழகன் வீட்டிற்கு வந்து வீட்டின் வரண்டாவில் படுத்து தூங்கி உள்ளார்.

  கடலூர்: 

  கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே காரையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன். விவசாயி. இவர் தனது மனைவியுடன் நேற்று வழக்கம்போல் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். நள்ளிரவு ஒரு மணி அளவில் அக் கிராமத்தில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டதின் காரணமாக அனைவரும் வீட்டின் வரண்டாவில் படுத்துள்ளனர். அப்போது வீட்டின் அருகில் இருந்த உறவுக்கார பெண்ணான காரையூர் ஊராட்சி மன்ற தலைவியின் மகள் கலையரசியும் அன்பழகன் வீட்டிற்கு வந்து வீட்டின் வரண்டாவில் படுத்து தூங்கி உள்ளார். நள்ளிரவு 2 மணி அளவில் மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே சென்று பீரோவில் இருந்த 13 சவரன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு வெளியே வரும் பொழுது வராண்டாவில் படுத்து இருந்த கலையரசியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலி செயினை பரித்துள்ளனர்.

  அப்போது தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட கலையரசி கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வருவதை அறிந்த மர்ம நபர்கள் கலையரசியை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். ஊர் மக்கள் அவர்களை பிடிக்க முயற்சி செய்தும் முடியவில்லை. நகைகளை திருடிச் சென்ற திருடர்கள் வீட்டின் அருகில் எரிந்து கொண்டிருந்த மின்விளக்குகளை அங்கிருந்து துணியால் மூடி மறைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இது குறித்து அன்பழகன் பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற பெண்ணாடம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கலையரசி கூறும்போது மர்ம நபர்கள் கால் சட்டை அணிந்தும், லுங்கியை கழுத்தில் போட்ட படியும் வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர். இந்த சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது .

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குப்பைகளை அகற்ற சொந்த நிதியில் டிராக்டர் வாங்கிய கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவருக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
  • வாகனம் இல்லாததால் துப்புரவு பணியாளர்கள் தள்ளுவண்டியில் கொண்டு சென்று மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

  கடையம்:

  தென்காசி மாவட்டம் கீழக்கடையம் பஞ்சாயத்து புலவனூர், மாதாபுரம் ,கீழக்கடையம் ,கல்யாணபுரம், நரையப்பபுரம், பொன்மலை நகர் உள்ளிட்ட பல்வேறு சிறு கிராமங்களை உள்ளடக்கியது.

  இங்கு போதுமான அளவு குப்பை அள்ளி செல்ல வாகனம் இல்லாததால் துப்புரவு பணியாளர்கள் தள்ளுவண்டியில் கொண்டு சென்று மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். இதனால் குப்பைகளை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது.

  இதையடுத்து உடனடி தீர்வாக கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் தனது சொந்த நிதியிலிருந்து ,டிராக்டர் ஒன்றை வாங்கி பஞ்சாயத்திற்கு குப்பைகளை அகற்ற வழங்கியுள்ளார்.

  சொந்த நிதியில் டிராக்டர் வாங்கிய கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத்திற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

  ×