search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோரம்பள்ளம் மின்  தொகுப்பில் இருந்து காலாங்கரை கிராமத்திற்கு  நேரடி புதிய மின் இணைப்பு
    X

    செல்வபிரபா அதிசயராஜ்.

    கோரம்பள்ளம் மின் தொகுப்பில் இருந்து காலாங்கரை கிராமத்திற்கு நேரடி புதிய மின் இணைப்பு

    • காலங்கரை கிராமத்திற்கு சீரான மின்சாரம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதுடன் இது குறித்து தொடர் நடவடிக்கைகளை ஊராட்சி தலைவர் செல்வபிரபா அதிசயராஜ் மேற்கொண்டார்.
    • அதன்படி கோரம்பள்ளம் மின் தொகுப்பில் இருந்து நேரடியாக காலாங்கரை கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கோரம்பள்ளம் ஊராட்சிக்குட் பட்டது காலாங்கரை கிராமம். முற்றிலும் விவசாய தொழில் நடைபெறும் இந்த கிராமத்தில் 250 வீடுகள் உள்ளது. இந்த கிராமத்திற்கு தூத்துக்குடி முத்தையாபுரம் மின் தொகுப்பில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டிருந்தது.

    பொதுமக்கள் கோரிக்கை

    இதில் அடிக்கடி மின்தடைகளும், மின்குறைபாடுகளும் ஏற்பட்டு மின்சாரம் இன்றி மக்கள் பாதிப்படைந்து வந்தனர். இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டு வந்ததால் கிராமமே இருளில் மூழ்குவது தொடர்கதையாக இருந்து வந்தது. இது தொடர்பாக அப்பகுதி மாணவ, மாணவிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரம்பள்ளம் ஊராட்சி தலைவர் செல்வபிரபா அதிசயராஜிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இது குறித்து ஊராட்சி தலைவர் செல்வபிரபா அதிசயராஜ் மின்துறை அதிகாரிகளை சந்தித்து காலங்கரை கிராமத்திற்கு சீரான மின்சாரம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதுடன் இது குறித்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

    ஊராட்சி தலைவருக்கு பாராட்டு

    அதன் தொடர்ச்சியாக இதுவரை முத்தையாபுரம் மின் தொகுப்பில் இருந்து வழங்கப்பட்டு வந்த மின் இணைப்பு நிறுத்தப்பட்டு, கோரம்பள்ளம் மின் தொகுப்பில் இருந்து நேரடி யாக காலாங்கரை கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்கப் பட்டுள்ளது.

    கோரம்பள்ளம் தனியார் குடிநீர் ஆலை முதல் காலாங்கரை வரை புதிய மின்கம்பங்கள், மின்விளக்கு கள் மற்றும் மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு காலாங்கரை கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    கிராமமக்களின் கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை மேற்கொண்ட கோரம்பள்ளம் ஊராட்சி தலைவர் செல்வபிரபா அதிசய ராஜுக்கு அப்பகுதி மக்கள் பாரட்டு தெரிவித்துள்ள னர்.

    Next Story
    ×